ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2018

நேபாள அரச குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி - இராஜ ஜோதிடம் சொல்லும் ஜோசியக்காரன் சொன்னதும் நிஜத்தில் நடந்ததும்…!


நேபாளத்தில் ஒரு இராஜ குடும்பத்தில் இது நடந்த நிகழ்ச்சி. பத்திரிக்கையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அரசனின் பையன் ஒரு பெண்ணைக் காதலித்து இருக்கின்றான்.

இராஜ ஜோதிடம் பார்ப்பவன் இதற்கு என்ன சொல்கிறான் என்றால் இப்பொழுது இவன் கல்யாணம் செய்தால் “அவன் உயிருக்கு ஆபத்து…!” என்கிறான். ஆகையினால் திருமணத்தை ஒரு ஆறு வருடத்திற்குத் தள்ளிப் போட வேண்டும் என்று ஜோசியன் சொல்கிறான்.

ஆனால் இவன் நான் காதலித்த பெண்ணை இப்பொழுதே கல்யாணம் செய்ய வேண்டும் என்று பையன் கேட்கின்றான். ஆறு வருடம் எப்படிப் பொறுத்து இருக்கிறது…? என்று சொல்லிக் கேட்கின்றான்.

இந்தக் காதல் விவகாரம் என்ன செய்கிறது…? எனக்கு இப்போது கல்யாணம் செய்து வைக்கிறீர்களா… இல்லையா…? என்று வம்பு செய்கிறான். அப்போது அது நடக்கவில்லை என்கிறபோது அங்கே தூண்டுகின்றான். மனது மகிழ்ச்சியாகவில்லை. அவனுக்குள் துன்பத்தைக் கூட்டுகின்றது.

ஜோசியக்காரன்… இப்பொழுது செய்யக் கூடாது… நீ பார்த்துச் செய்து கொள்…! என்று சொல்லும் பொழுது “இவர்கள் எல்லொருமே எனக்குத் தடையாக இருக்கிறார்களே…!” என்கிற நிலைகளில் அவனுக்குள் துன்பத்தை ஏற்றுகிறது.

அப்பொழுது கல்யாணம் செய்வதற்கு முன்னாடி அதே வெறியில் அவன் அந்தக் குடும்பத்தையே முழுவதும் பொசுக்கிவிட்டான்.
1.ஆக அந்த ஜோசியம் என்ன ஆனது…?
2.ஜோசியம் எந்த அளவுக்குப் பொய் மெய் என்கிற நிலையில் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ஏனென்றால் அவன் ஆசை தடைப்படும் போது அங்கே வெறித்தன்மை உண்டாகிறது. வெறித்தன்மையான உணர்வு வரும் போது அவன் அத்தனை கோடி இருந்தும் அந்த சாம்ராஜ்யத்தையே ஆளும் நிலை இருந்தாலும் அதனின் முடிவு இப்படி ஆகிவிட்டது.

அந்த இராஜ குடும்பத்தில் உருவானது போல ஒவ்வொரு குடும்பத்திலும் செல்வந்தர் குடும்பங்களுக்குள் தான் நினைத்தது நடக்கவில்லை என்றால் தன் தாய் தந்தையை கொன்று புசிக்கும் நிலை வருகின்றது. கொன்று ரசிக்கும் தன்மை வருகின்றது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளேயும் இன்றும் நடக்கின்றது. ஆக எது செய்கின்றது…?
1.தன் எண்ணம் நிறைவேறவில்லை என்றால்
2.அசுர உணர்வுகள் நமக்குள் வந்து அசுர செயல்களைச் செய்து
3.நாம் மனிதன் என்ற நிலை இழந்து மனிதனற்ற நிலைக்குத்தான் செல்கிறோம்.

ஏனென்றால் மிருகங்கள் தனக்குள் நிறைவேறவில்லை என்றால் ஒன்றுக்கொன்று போர் செய்து கொன்று குவிக்கும் நிலைகள் தான் வருகின்றது.

இதே நிலைகளைத்தான் இந்த மனிதன் நிலையில் அசுர உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு மனித சிந்தனை என்ற ஆறாவது அறிவை நாம் மாற்றி விட்டோம்.

இதைப் போன்று உலகம் முழுவதும் தீவிரவாதம் என்ற நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் புகுந்து விளையாடுகின்றது.

ஆனால் இன்னும் நாம் சாமி செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் யந்திரம் செய்யும் தந்திரம் செய்யும் என்று எதை எதையோ தான் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
1.நம்மை நாம் நம்புவதே இல்லை.
2.நம்புகிறோமா…! சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

நம் உயிரான ஈசன் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்குகின்றான். அதனின் செயலாக்கமாகத்தான் நம் எண்ணம் சொல் செயல் வாழ்க்கை எல்லாமே அமைகின்றது என்பதை அந்த மெய் ஞானிகள் சொன்னதை நாம் அறியவில்லை.. அறிய முற்படவும் இல்லை…!