5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போகன் அவன் அனாதையான நிலைகளாக இருக்கப்படும்
போதுதான் மெய் ஒளியின் தன்மையைப் பெறும் சந்தர்ப்பமே அவனுக்கு ஏற்படுகிறது.
ஏனென்றால் தாய் தான் இருக்கின்றது. தந்தை இல்லை. ஆனால் தாயும் விஷமான
பாம்பால் தீண்டபட்டு அதுவும் மரணமடைகின்றது.
தாய் மரணமடையப் போகும் போதுதான்
1.அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு... “தன் எண்ணத்தை ஓங்கி வலுவாகச்
செலுத்தி...”
3.அவன் எண்ணிய ஏக்கத்தின் நிலைகள் கொண்டு
3.அவன் சுவாசத்திற்குள் சிக்கப்பட்டது தான் பல ஆற்றல்மிக்க சக்திகள்.
தாயின் பாசமும் இவனுடைய எண்ணமும் கூடித் தன் தாய் மேலே இருக்கக்கூடிய
பாசத்தின் ஆற்றலால் அன்று ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு அவன் எண்ணத்தைச் செலுத்தும்
போது
1.அதன் வழி அவனுக்குள் ஈர்க்கப்பட்டது தான்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலான அணு.
பாம்பு தீண்டியதும் தாயின் உடலிலே இருக்கக்கூடிய அந்த நஞ்சை நீக்க
1.அவன் எடுத்துக் கொண்ட வேகமும்
2.விஷத்தின் தன்மையை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட சுவாசமும்
3.அவன் சுவாசித்த உணர்வுகள் ஆற்றல்மிக்கதாகப் பெருகி
4.அவனுடைய சந்தர்ப்பம் அதை அறிவதற்காகச் செல்கின்றான்.
அந்த உணர்வின் வேகத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலையில் பல பல தாவர
இனச் சத்தை நுகர்ந்தறிந்து விஷத்தின் தன்மையை நீக்குவதற்குண்டான முயற்சிகள் எடுத்தான்.
அன்று காட்டிய நிலைகள் கொண்டு தன் ஏக்கத்தை விண்ணை நோக்கிச்
சூரியனுக்குள் செலுத்தும் போது இவனை அறியாமலே சூரியனின் காந்த அலைகள் இவனுக்குள் கூடி
இவன் எண்ணத்திற்கும் வலு கூட்டி இவன் எந்தெந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டானோ அதன்
வழி கொண்டே விஷத்தின் தன்மைகள் ஒவ்வொன்றையும் தனக்குள் அறிந்துணர்ந்தான்.
நன்றாகக் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆனால் போகனைப் பற்றிய சரித்திரத்தைப் பார்த்தோம் என்றால் அவர் சட்டி
பானை செய்து கொண்டிருந்தார். குயவர் குலத்தில் பிறந்தவர் என்று ஒன்று சொல்வார்கள்.
1.குயவர் என்றால் “பிரம்மம்...!” ஒரு பொருளை உருவாக்குவது.
2.பிரம்மத்தின் தன்மை அடைந்தவன் போகன் என்று அவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு
அந்தப் பெயரை வைத்தார்கள்.
3.பிற்காலத்தில் அதை எல்லாம் அழித்து விட்டார்கள்.
தான் நுகர்ந்த உணர்வின் தன்மைகளைச் சுவாசிக்கும் போது தன் உயிரான
நிலைகள் கொண்டு அந்தச் சக்தியைப் பிரம்மமாக்குகின்றான். அந்தப் பிரம்மத்தின் தன்மை
தனக்குள் ஞானமாக்கி அந்தச் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.
ஒரு குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டானேயானால் அது பெற வேண்டும்
என்று
1.தன் எண்ணத்தை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும்
2.அதே ஒரு குணத்தின் சக்தியை தான் உணர்கிற வரையிலும் அதையே தியானித்தான்.
அந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சூரியனின் காந்த சக்தி கொண்டு
விண்ணை நோக்கி ஏகி ஒவ்வொரு நிலையும் தனக்குள் உணர்ந்தறிந்து அந்த உணர்வின் நுண்ணிய
நிலைகளைத் தனக்குள் கண்டறிந்து விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக
மாற்றினான்.
தாயைத் தீண்டிய விஷத்தின் தன்மையை நீக்க போகர் சிறு வயதில்
எடுத்த அந்த வலிமையான உணர்வே அவர் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக் காரணமாக
அமைந்தது.
அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் சில கடினமான
சந்தர்ப்பங்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடும் வேகத்தை நாம் கூட்டி அந்த மெய்
ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்று முயற்சி செய்தால் அதுவே நமக்கு மெய்
ஞானம் பெறச் செய்யும் நல் சந்தர்ப்பமாக அமையும்.
எந்த ஞானியை எடுத்துக் கொண்டாலும் தன் வாழ்க்கையில் வந்த
கடுமையான நிலைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தின் வலுவைக் கூட்டும் பொழுது தான் அந்த
விஷத்தை வென்றிடும் நுண்ணிய அறிவின் ஞானமும் பேராற்றலையும் அவர்களால் பெற
முடிந்தது.
அந்த ஞானிகள் சென்ற வழியில் நாமும் செல்வோம்...!
போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற்று நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும்
தீமைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ்வோம்.