ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2018

நம்மை இயக்கும் நட்சத்திரங்களின் சக்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்


கதிரியக்கச் சக்தி (RADIOACTIVE POWER) என்றால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதாவது கோளாக இருந்து
1.தான் எடுத்துக் கொண்ட வெப்ப அலைகள் அதன் நடு மையத்திலே கூடிக்… கூடிக்… கூடிக்… கூடி…
2.அது மற்ற பொருளாக… உலோகங்களாக… விளைந்து வருகின்றது.

உதாரணமாக நம் பூமியிலேயும் பல உலோகங்கள் விளைகின்றது. இதனுடைய ஆற்றல் அது எடுக்கக்கூடிய வெப்பங்கள் கூடிக் கூடிக் கூடிக் கூடி இந்த எரிமலைகள் இதெல்லாம் வெடிக்கின்றது.

இப்படி வெடித்தது போக இதைப்போன்ற அலைகளின் தன்மையைத் தனக்குள் எடுக்க எடுக்க இந்த வெப்பத்தினால் உலோகங்கள் அனைத்துமே கரைகின்றது.

அது எல்லாமே கரைந்து கூழாகி அமிலமாகி விட்டால் கோள் நட்சத்திரமாகின்றது. நட்சத்திரத்தினுடைய ஆற்றல் என்பது அது தான். உலோகங்கள் கரைந்து இந்த அலைகளின் தன்மையை அது அதீதமான நிலைகளிலே வெளியிலே வீசுகின்றது. “அது தான் கதிரியக்கச் சக்தி என்பது…!”

அந்தக் கதிரியக்கச் சக்தியும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தமும் மற்ற கோள்களினுடைய வரக் கூடிய நிலைகள் இந்த மூன்றும் சந்தித்து இந்த மூன்று அணுக்களினுடைய தன்மை சேர்க்கப்படும் போது தான் உணர்வின் ஆற்றல் கொண்ட அணுவின் திசுக்கள் அங்கே உருவாகின்றது.

ஐஸ் பெட்டிக்குள் (REFRIGERATOR) நிலைகள் மின்சாரத்தைப் பாய்ச்சியவுடனே எப்படிக் குளுமையாகின்றதோ இதைப் போன்றே தனக்குள் எடுத்துக் கொண்ட இந்தத் திரவகத்தின் சக்தி எந்த வெப்பத்தை எடுக்கிறதோ அந்த வெப்பத்தை அடக்கும் காந்தச் சக்தியாக மாறுகின்றது.

அப்படிப்பட்ட வெப்பத்தை அடக்கும் அந்தக் காந்தச் சக்தியாக மாறும் போது தான் அந்த நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது. பாதரசமாக மாற்றுகின்றது.

அந்த உலோகத்திற்குள் (பாதரசத்திற்குள்) தனக்குள் எடுத்துக் கொண்ட பாறையின் தன்மையினுடைய நிலைகள் அங்கே சூரியனுக்குள் எரிமலைகளாக இருந்தாலும் காந்த அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.

அதனுடைய ஆவியினுடைய நிலைகள் மிகக் கனம் கொண்டதாக இருக்கப்படும் பொழுது சுழற்சியின் நிலைகளால் அந்தக் கனத்தின் எடை தாங்காதபடி இன்றைக்குப் பிரபஞ்சத்திற்குள் வெயிலாக வீசி மற்ற நிலைகளும் உருவாகின்றது..

இந்த நுண்ணிய அலைகளாக இந்த இயக்கத்தின் தன்மைகள் வரப்போகும் போது சூரியனாகும் போது அந்தப் பாதரசங்களாக மாறுகின்றது.

ஒரு நட்சத்திரத்ததில் இருக்கக்கூடிய கதிரியக்கம் எதுவோ அது ஒவ்வொரு பொருளிலும் இந்தக் கதிரியக்கச் சக்தி கலவையாகும் பொழுது தான்
1.அந்தப் பொருளுக்குள் நெருப்பாகப் பட்டவுடனே பொறிகள் துடிக்கும் நிலைகள் வருகின்றது.
2.இது இல்லை என்றால் அந்தப் பொருள் உருவாகாது.
3.அது இயக்கச் சக்தியினுடைய நிலைகள்.

ஆனால் சூரியனில் இருக்கக்கூடிய நிலைகளோ காந்தத்தின் நிலைகள் கொண்டு அதை இழுத்துத் தனக்குள் இணைக்கப்படும் போது மோதும் நிலைகள் கொண்டு வெப்பம் பாதரசம்.

இதற்குள் அந்தப் பொறியின் தன்மை வரப்படும் போது மற்ற உணர்வின் தன்மை கலவையாகி அதற்குத் தகுந்த மாதிரி இயக்கத்தில் பொருளின் உருவங்கள் மாறும்.
1.இப்படி மாறிய அந்த நிலையைத்தான்
2.மீண்டும் இதே பாதரசத்தை மற்றதுடன் கலக்கப்படும் போது அது கவர்ந்து கொள்ளும்.
3.அதற்குள் நாம் மாற்று அழுத்தத்தைக் கொடுத்தால் உருவினுடைய நிலைகள் மாறுகின்றது.
4.அப்படி மாற்றிக் கொண்டு வந்தது தான் “அணுக் கதிரியக்கம்…!”

அதாவது தனித்துப் பிரித்து மீண்டும் இந்த வெப்ப காந்த அலைகளிலே ஒவ்வொரு தாவர இனத்திற்குள்ளேயும் கலந்து வந்தது. சகலத்தையும் உருவாக்க அது உதவியது.

ஆனால் அதை அடக்கித்தான் விஞ்ஞானி என்ன செய்தான்...? ஒருமித்த நிலைகளாகக் குவித்து அணு குண்டாகவும் அணு மின் நிலையங்களில் எரிபொருளாகவும் உருவாக்குகின்றார்கள்.

இயற்கையின் இயக்கச் சக்திகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விஞ்ஞான அறிவுடன் இணைத்து அந்த மெய் ஞானிகள் கண்டதை உணர்த்துகின்றோம்.

“ஒன்றும் புரியவில்லையே…” என்று எண்ணி விடாதீர்கள். ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதைப் பதிவு செய்கின்றோம்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் இதைத் தியானித்தால்
2.தக்க சமயத்தில் இதன் ஆற்றலை நீங்களும் உணர முடியும்.
3.அந்தச் சக்தியாக நீங்களும் மாற முடியும்.