ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2018

பிறர் நம்மைத் திட்டிக் கொண்டும் இடக்காகவும் பேசிக் கொண்டிருந்தால் அப்பொழுது அதை அடக்க “இந்த மருந்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் – நல்ல பலன் கிடைக்கும்...”


எமக்கு (ஞானகுரு) வேண்டியது என்ன...? உங்கள் சந்தோஷம் தான் எமக்குத் தேவை. அதை விட்டு விட்டு என்னைப் புகழ வேண்டும் என்று என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் எல்லாம் போய்விட்டது.

தொழில் செய்தேன். நல்லதாக இருந்தது. சந்தோஷமாக இருக்கின்றேன். அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்குச் சொன்னேன். அவர்களுக்கும் நல்லதாக ஆனது என்ற இந்தச் சந்தோஷத்தைத் தான் யாம் விரும்புகின்றோம்.

சாமி...! உங்களை அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்... இப்படிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்... ஒரு நான்கு ஐந்து பேர் உங்களைக் குறையாகப் பேசுகிறார்கள். அதில் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து கொண்டே இருக்கின்றான்... நீங்களும் பாருங்களேன்...! என்பார்கள்.

அதாவது என்னைப் போற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு எம்மைப் பற்றி (ஞானகுரு) “சுருக்...!” என்று யாராவது குறையாகச் சொன்னால் போதும்.

உடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் திருப்பிப் பேசுவார்கள். அடுத்து பார்த்தால் அங்கிருந்து நான்கு பதில் இங்கே வரும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைத் திருத்துவதற்கு அதை அடக்கத் தெரியாது. என்னை இங்கே போற்றும் பொழுது மற்றவர் குறை சொன்னால் உடனே ஆத்திரம் தான் வரும். “என்னய்யா சொன்னாய்…? இரு நான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்...!” என்பார்.

என்னத்தை நீ பேத்துக்கிறாய்…? உங்கள் சாமி என்ன பெரிய ஆளா...? அவரால் என்ன செய்ய முடியும்...? என்று அவர் சொல்வார்.

கடைசியில் சாமி...! உங்களை இப்படியெல்லாம் அவர் திட்டியதால் என் மனது தாங்க முடியவில்லை. அதனால் நான் அவரை “உதைத்தேன்” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

யாம் விரும்புவது அதுவல்ல...! தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் மற்றவர்கள் அறியாமல் அதைப் பேசுகிறார்கள். அந்த உணர்வு இங்கே வந்து அறியாமலே நம்மை அவர்கள் வழிக்கு இட்டுச் சென்று விடக்கூடாது. அவர்கள் வழிக்கு நாம் போகக்கூடாது. (இது முக்கியம்)

யார் எத்தகைய குறைகளைச் சொன்னாலும் யாம் உபதேச வாயிலாகச் சொன்னபடி ஓ...ம் ஈஸ்வரா... என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

மற்றவர்கள் சொல்லும் குறையான உணர்வு உங்களை ஆட்டிப் படைக்காத நிலைக்காக இதைச் செய்யுங்கள்.

ரொம்ப மோசமான ஆளாக இருந்தால் “அவன் செய்வது அவனுக்கே போகட்டும்...! நல்லது செய்யக்கூடிய எண்ணம் அவனுக்குள் வளர்ந்து நிச்சயம் நல்லதைப் பேசக் கூடிய நிலை உனககு வரும்...!” என்று சொல்லிவிடுங்கள்.

உங்களை யாராவது சதா திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்... இடக்காகப் பேசுகிறார்கள்... உங்களால் தாங்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக ஒரு வேலையைச்  செய்யுங்கள்.

அவர்கள் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டே இருங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
2.எனக்கு ஒன்றும் வேண்டாம். மொத்தமாக நீயே வைத்துக் கொள்.
3.எதை எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.
4.அது தான் உங்களுக்கு ரொம்ப நல்லது. அதை நீங்களை வைத்துக் கொண்டு போங்கள்...! என்று சொல்லுங்கள்.

அத்தனையும் என்ன ஆகிப் போகும் தெரியுமா…? அவர்கள் உணர்வு அவர்களிடம் திருப்பினவுடனே எப்படி இருக்கும்…! உங்களுக்கு ஆத்திரம் வருமோ…? இந்த மருந்தை மட்டும் சுத்தமாக வைததுக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் அவர்கள் சொல்லை அவர்கள் பக்கமே திருப்பியவுடனே அவர்களைப் பார்த்தவுடனே எக்கச்சக்கமாக வரும்.

ஆனால் அவர்கள் நம்மை இப்படிச் சொல்லி விட்டார்களே என்று இந்த எண்ணத்திற்கு வந்தால் நம்மை அது விட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிவிடும். இரு நான் பார்க்கிறேன் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்ற ஆத்திரம் தான் வரும்.

ஏனென்றால் நமக்கு எதுவுமே சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்க வேண்டியது என்ன…?
1.இது வரையிலும் எல்லாவற்றையும்  தெரிந்து கொள்வதற்காகச் பல நிலைகளைச் சொந்தமாக்கி
2.அதாவது தெரியாமலேயே அவைகளைச் சொந்தமாக்கி நாம் மனிதனாக வந்து விட்டோம்.
3.ஆனால் எல்லாவற்றையுமே தெரிந்து கொள்ள வந்த பிற்பாடு
4.எல்லாவற்றையும் தெரியாமல் ஆக்கிக் கொண்டு போவதற்கு என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் என்ன ஆவது…?

கோபம் ஆத்திரம் வேதனை வெறுப்பு பயம் இதுகளெல்லாம் அதிகமாக நமக்குள் வந்து விட்டால் அந்த விஷம் பூராத்தையும் நம்மைத் தெரியாமலே ஆக்கிவிடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் வராதபடிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்ம சுத்தியைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
1.நீங்களும் உயர்ந்த நிலைகள் பெறுவீர்கள்.
2.உங்கள் சொல் பார்வை மற்றவரையும் உயர்த்தச் செய்யும்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.