"என்றும் பதினாறு " என்ற நான்கு மணி நான்கரை மணிக்கு
எல்லாம் நமக்கு இதெல்லாம் உணர்த்தி
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் மனிதனாகத் தோன்றிய
நிலையில் முதன் முதலில் விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறாகத் துருவ
நட்சத்திரமாக ஆனது அகஸ்தியன்.
“அகம்...!” என்பது அணுவிற்குள் இருக்கக்கூடிய ஆற்றலை அறிந்து ஒளியின்
தன்மையாகத் தனக்குள் பெருக்கிக் கொண்டதைத்தான் “அகஸ்தியன்...” என்று காரணப் பெயர்
வைத்தார்கள் பின் வந்த ஞானிகள்.
விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள் என்று சொல்கின்றோமே அதே மாதிரி
மனித உடலுக்குள் இருக்கக்கூடிய அணுவின் இயக்கத்தை உணர்ந்து மெய் ஒளியின் தன்மையைத்
தனக்குள் சேர்த்து பூமி ஆகாரமாக எடுக்கும் அந்தத் துருவத்தின் வாசலை எல்லையாக
வைத்துத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த அகஸ்தியன்.
1.கடலில் போகும் மனிதர்களுக்கு வழி காட்டி அவன்தான்
2.மனிதனுடைய சிந்தனை அழியாமல் பாதுகாத்துக் கொண்டு வருகின்றவனும்
அவன் தான்
3.மனிதன் மெய் ஞானத்தின் தன்மை பெறுவதற்கு வழி காட்டிக்
கொண்டிருப்பதும் அவன் தான்.
4.விஞ்ஞானத்திற்குப் போனாலும் அவன்தான். ஆனால் விஞ்ஞானம் அழிந்தாலும்
அந்த அகஸ்தியன் கொடுக்கும் ஞானத்தின் நிலைகள் என்றுமே அழியாது.
விஞ்ஞானத்தின் விளைவுகளால் இனி வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட
வேண்டும் என்பதற்குத்தான் அந்த அகஸ்தியரின் அருளாற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
இந்தப் பூமியும் சூரியனும் மற்ற நிலைகளும் அழியும் தன்மைக்கு வந்து
கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர் என்ன சொல்கிறார்...! மெய் ஞானத்தினால் என்ன
செய்ய முடியும்...? என்று எண்ணாதீர்கள்.
விஞ்ஞானத்தில் வரக்கூடிய எல்லாவற்றையும் நீங்கள் மடக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்.
நாமெல்லாம் இன்று இப்படி இருக்கிறோம். தியானம் செய்து
சக்தியைப் பெற்று நாம் என்ன செய்யப் போகிறோம்...? என்று நினைக்க வேண்டாம். சிறு குழந்தையிலிருந்து
அனைவருமே அதைப் பெற முடியும். தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
1.உங்கள் தாய் தந்தையைக் கடவுளாக எண்ணுங்கள்.
2.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணுங்கள்
3.உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.
4.நாம் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உரு பெற்றோம் என்று பெருமிதப்படுங்கள்.
மிருக நிலையில் இருந்து நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.
1.இனி நாம் ஒளி நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைவோம்
3.அந்த அகஸ்தியன் காட்டிய அருள் வழியிலே செல்வோம் என்ற இந்த உணர்வை
நீங்கள் பூஜித்துப் பாருங்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்ததன் பலனை நீங்கள் அடையலாம்.