திருஞானசம்பந்தர் தன் இளமைப் பருவத்திலேயே பல ஆற்றல்மிக்க
செயல்களைச் செய்தார். எவ்வாறு அவருக்கு அந்த ஆற்றல்கள் வந்தது என்று பார்ப்போம்.
வெகு நாளாகப் புத்திர பாக்கியம் இல்லை என்று ஏக்கத்தில் இருந்த
அவரின் தாய் சீர்காழியில் உள்ள ஈசனின் கோவிலில் நடக்கும் கதாகாலட்சேபங்களையும் தெய்வ
நிலைகளால் செய்யப்பட்ட மந்திர ஒலியால் நடக்கக்கூடிய சில அற்புதங்களையும் உற்றுப்
பார்க்கின்றது. கேட்டுத் தனக்குள் பதிவாக்கிக் கொள்கிறது.
புத்திர பாக்கியம் பெறவேண்டும் என்ற ஏக்கத்தினால் அந்தத் தாய்
சுவாசித்த உணர்வுகள் கருவாக உருவாகின்றது. சிவனை எண்ணி எண்ணி ஏங்கிய நிலைகள்
அனைத்தும் தாயின் உடலில் ஊழ்வினையாகச் சேருகின்றது.
இவ்வாறு சேர்ப்பித்த நிலைகள் தான் அந்த தாயின் கருவுக்குள் அந்த
அணுவுக்குள் மாற்றம் அடைந்து அது வலுப்பெறும் போது கருவாக உருப்பெறும் உணர்வின் தன்மை
அங்கே வருகின்றது.
அவ்வாறு கருவுற்றதன் காரணம் தான் வணங்கி வந்த அந்த தெய்வத்தின்
கருணையே என்ற நிலையில்
1.கருணைக் கடலே...!
2.நாங்கள் வேண்டியதை அந்த வரங்களை நீ கொடுத்தருளினாய் என்ற உணர்வைத்
தனக்குள் பதியச் செய்து
3.அங்கிருக்கும் விநாயகனை வணங்கும் போதெல்லாம் இதை வினையாகச் சேர்த்துத் கொள்கின்றது.
தெய்வீக அருளால் என்னை ஆசீர்வதித்த விநாயகனே... சிவனுடைய
அருளும் பராசக்தியின் ஆற்றல் மிக்க சக்தியும் எங்களுக்குள் இயக்க வேண்டும். அருள் ஞானம்
இங்கே வளர வேண்டும் என்றும் வேண்டுகிறது.
விநாயகா...! நீ தான் ஞானவான் ஆயிற்றே...!
1.என் கருவிலே இருக்கக் கூடிய குழந்தை பொருள் கண்டுணர்ந்து செயல்படும்
திறன் பெற வேண்டும்
2.உன்னுடைய ஞானத்தின் நிலைகள் என் கருவில் வளரும் சிரு
பெறவேண்டும் என்று
3.அன்றைய பக்தியின் நிலைக்கொப்பத் தனக்குள் எடுத்து வளர்கிறது.
ஆலயத்தில் காவியப் படைப்பால் நடக்கும் யாகங்களையும் வேள்விகளையும்
அதன் வழிகள் கொண்டு பல அற்புதங்கள் நடப்பதையும் கண்டுணருகின்றது அந்தத் தாய்.
அங்கு நடக்கும் அதிசயங்களை மந்திரத்தால் ஏகிய அந்த உணர்வின் தன்மை
கண்டபின் இது எல்லாம் என் கருவுக்குள் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும்
என்று எண்ணி ஏங்குகின்றது.
இவ்வாறு ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் அந்தத் தாய் சுவாசித்த
இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து... தாய் ஏக்கத்தால்
எண்ணியது அனைத்தும் குழந்தை உடலுக்குள் வலு கொண்டதாக விளைகின்றது.
இவ்வாறு விளைந்து பத்து மாதம் முடிந்து குழந்தை பிறந்த பின் ஒரு
மாதமே ஆன நிலையில் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அந்தத்
தாய் ஆலயத்திற்குள் வருகின்றது.
எதையெல்லாம் வேண்டிக் கேட்டோமோ வரம் கொடுத்த ஆண்டவனிடம்... “தன்
பிள்ளையுடன் அணுகி... அவன் அருள் பெற வேண்டுமென்று கையேந்தி வருகின்றது...!”
முதலிலே விநாயகனை பார்க்கப்படும் போது அந்தக் குழந்தை கை கூப்பிச்
சிரித்திடும் நிலை வருகின்றது. அந்தக் குழந்தைப் பருவத்தில் தன் தாயை உற்றுப் பார்ப்பதும்
பின் வைத்திருக்கும் சிலையையும் உற்றுப் பார்க்கின்றது.
1.தனக்குள் சிரித்துக் கொண்டு தவழ்ந்து சென்று
2.அந்த விநாயகனிடம் போக வேண்டும் என்று வேண்டி கண்ணுற்றுப் பார்க்கின்றது
3.ஆலயத்திற்குள் சென்றவுடன் இத்தனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றது.
இவ்வாறு திருஞானசம்பந்தர் தான் வளரும் அந்தக் குழந்தைப் பருவத்திலேயே
யாரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தாலும் மகிழ்ந்திடும் நிலையும் அதே சமயத்தில் அவர்கள்
இந்தக் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் மகிழ்ச்சியும் பேரானந்தம் ஏற்படுகின்றது.
ஒரு சமயம் எதிர்பாராது நஞ்சு கொண்ட பாம்பு திருஞான சம்பந்தரைப்
பார்த்ததும் அஞ்சி ஓடுவதைப் பார்க்கின்றார்கள். அதிசயித்து இந்தக் குழந்தை... “ஆண்டவனால்
கொடுக்கப்பட்ட பிள்ளை...!” என்று அதிசயப்படுகின்றார்கள்.
தாய் கொடுத்த ஞானப்பாலின்
நிலைகள் கொண்டு அவனின் மழலைப் பேச்சும் அவன் வயதிற்கு மீறிய சொல் தொடரும் அங்கு வருவதைக்
கண்டு அனைவரும் பேரானந்தப் படுகின்றனர்.
ஒரு சந்தர்ப்பம் அருகில் இருக்கக்கூடிய குடிசையில் தன்னுடன் விளையாடிக்
கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பாம்பு தீண்ட அதனை உற்றுப் பார்த்த திருஞானசம்பந்தர் ஓடி
வந்ததும் அவரைக் கண்ட பாம்பு அது அஞ்சி ஓடுகின்றது.
இவனுடைய கண் பார்வையில் நண்பனின் உடலில் பாய்ந்த நஞ்சு நீங்குகின்றது.
உற்றுப் பார்த்தோர் பெருமிதம் கொள்ளுகின்றனர். அந்தத் தாய் ஊட்டிய ஞானப்பாலின் நிலைகளில்
ஞானங்கள் அங்கே தொடர்கின்றது.
அதிசயத்தக்க அருள் ஞானக் குழந்தை என்று போற்றும் நிலை வருகின்றது.
இது தான் அந்தக் காலத்தில் திருஞானசம்பந்தருடைய சிறு வயதில் நடந்த நிலைகள்.