
பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது
“ஆதியிலே” உருவான உருவின் (உணர்வின்)
தன்மையை அது எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டவன். அதை எல்லாம் அவன் பாக மண்டலத்தில் (கர்நாடகா காவிரி ஆறு உருவாகும் இடம்) இருக்கப்படும் பொழுது கண்டது.
உணர்வின் அணுக்களின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அதாவது
1.ஒரு உணர்வின் தன்மை “எதனின் பாகம்… எதனுடன் இணைந்து கலந்து
செல்கின்றது…?” என்பதை அறிகின்றான்
2.அதனால் தான் அந்த இடத்திற்குப் பெயர் “பாக மண்டலம்” என்ற பெயரே
வந்தது.
பிரபஞ்சம் எப்படி உருவானது…? தனித்தனித்
தன்மையாக (கோள்கள் நட்சத்திரங்கள்) இருந்தாலும் சுழற்சி
வட்டத்திற்குள் அது எப்படி இயங்குகின்றது…? கூட்டமைப்பாக பிரபஞ்சம் என்ற நிலையை அது எப்படி அடைகின்றது…? என்பதையும் அகஸ்தியன்
அறிகின்றான்.
இதே போன்று தான் நம் உயிரின் தன்மையின் இயக்கமும்…!
1.உடலுக்கு அது சூரியனாக இருக்கின்றது.
2.நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகள் சேர்த்து இது ஒரு
பிரபஞ்சம் ஆகிறது.
நம் சூரியக்
குடும்பத்தைப் போல அண்டத்தில் 2000 சூரியக்
குடும்பங்கள் உண்டு. அதே போல் பல ஆயிரம் குடும்பங்கள்
வளர்ச்சி பெற்றதும் உண்டு. அவை எல்லாம் தனித்தனியாக அகண்ட அண்டமாகச் சுழன்று கொண்டுள்ளது.
சில இடங்களில் பார்த்தோம் என்றால் வான மண்டலத்தில்
நட்சத்திரங்கள் அதிகமாக அடர்த்தியாகத் தெரியும். அது எல்லாம் இன்னொரு
பிரபஞ்சத்தில் உள்ளதைத்தான் நாம் அவ்வாறு காண முடிகிறது.
இது எல்லாம் “பாக மண்டலத்தில் என்னை அமர
வைத்து குருநாதர் காட்டிய நிலைகள்…!”
அது ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழற்சியாகும்
நிலை இங்கிருந்து பார்க்கப்படும் பொழுது வித்தியாசங்களாகத்
தெரிய வரும்.
இதையெல்லாம் விஞ்ஞானிகளும் படம் எடுக்கின்றார்கள். எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிகின்றார்கள்.
அது எங்கே சுழலுகின்றது…? எங்கெங்கு நகர்ந்து செல்கிறது…? என்பதையும்
பார்க்கின்றார்கள்.
எப்போதோ ஓர் காலத்தில்
கோள்கள் அனைத்தும் சந்தர்ப்பத்தில் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய
வாய்ப்பு உண்டு.
1.அப்படி வந்தால் பூமிக்கு அதனுடைய ஈர்ப்பு
சக்தி குறைகின்றது.
2.ஒன்று நகர்ந்து ஓடலாம்… அது எப்படிப்
போகும்…? என்று சொல்ல முடியாது.
3.ஒரு நொடிக்குள் இது நடக்கும். சூரியனுடைய ஈர்ப்பு
சக்தி இல்லை என்றால் டபக்… என்று கீழே இறங்கிவிடும்.
இன்று இருப்பது நாளை இல்லை…! இது போன்று
எத்தனையோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.
வான்வீதியில் உருவாகும் மின்னல்கள் ஒன்றுடன்
ஒன்று மோதும் போது ஏற்படும் இயக்கத்தினால் தான்
உயிரணுவிற்குள் துடிப்பு வருகின்றது. இரண்டும் சண்டை இட்டுக்
கொண்டே இருக்கும்.
எது…?
ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால். கார்த்திகை நட்சத்திரம்
என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் அதைக் கண்டவுடன்
அஞ்சி ஓடுகின்றது.
இப்படி இது இரண்டுக்கும்
ஒத்துக் கொள்ளவில்லை என்ற நிலை வரும் பொழுது
1.வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகள் தாக்கிய உடனே
மூன்றும் சேர்த்து ஒன்றாக இணைந்து
2.இரண்டு என்ற நிலை இல்லாது
மூன்று என்ற நிலை அடைகின்றது.
3.அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.
அத்தகைய துடிப்பின் ஈர்ப்பினால் அதற்கு அருகில்
இருக்கக்கூடியது சிக்கப்படும் பொழுது மற்ற
உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்து “உயிரணுவின் தோற்றமாகின்றது…”
உயிரணுவின் துடிப்பினால் வெப்பம் (உயிர்) உருவாகிறது. ஆனால் கோள்கள்
அனைத்தும் சுழற்சியினால் வெப்பமடைகிறது. அதனால் தான் சூரியனைச்
சர்வேஸ்வரன் என்றும் பூமியைப் பரமேஸ்வரன் என்றும் உயிரை ஈஸ்வரன் என்றும்
ஞானிகள் காரணப் பெயரிட்டு அழைத்தார்கள்.
உயிர் மற்ற ஜீவணுக்களை உருவாக்கும்
சூரியன் அணுக்களை உருவாக்கும். சூரிய பிரபஞ்சத்தில் தான் உயிர் அணுக்கள் துடிப்பின்
நிலைகள் கொண்டு உருவாகின்றது.
அந்தத் துடிப்பினால் மற்ற உணர்வோடு சேர்த்து
இரண்டும் மோதலான பின் அணுவின் துடிப்புகளாகி அந்த அணுவின்
மலம் தான் இந்த உடலாகின்றது.
1.இந்த அணுக்களின் மலத்திற்கு… இந்த உடலைப்
பாதுகாக்கத் தான் இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம்.
2.பல கோடி அணுக்களின் மலம் நம் உடல்.
3.இதைத் தான் மும்மலம் மும்மலம் மும்மலம்
என்று சொல்வார்கள்.
வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றினால் உருவாகும்
அந்த அணுக்களின் மலம் தான் இந்த உடல் என்று தெளிவாக்குகின்றார்கள்.
ஆக…நாம் இந்த உடலை… நமது… எனது… எனக்குச் சொந்தம்…! என்று சொல்லிக்
கொண்டிருக்கின்றோம்… அதைத் தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.ஆனால் நமக்கு சொந்தமானது உயிர் தான்
2.அந்த உயிருடன்
ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றும் அத்தகைய பருவத்தைத்
தான் உங்களுக்கு இப்போது ஏற்படுத்துகின்றோம்.