
துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்
அகஸ்தியன் தன்
வாழ்க்கையில் நஞ்சினைப் பிளந்து… கணவனும் மனைவியும்
இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ
நட்சத்திரமாக ஆனார்கள்.
1.இந்தக் காற்றிற்குள் எத்தனையோ
உணர்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் பிளந்து விட்டு
2.துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
உயிரணு பூமிக்குள் வந்த பின் பல
கோடிச்
சரீரங்களில் தீமைகளைப் பிளந்திடும்
உணர்வுகளைப் பெற்று பன்றியின் உடலை அமைத்து
அதனின் வலுவின் துணை கொண்டு நாற்றத்தைப் பிளந்து வராக அவதாரமாக… நல்ல உணர்வுகளை நுகர்ந்து… அடுத்து
பரசுராம்…!
தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் மனிதனாக உருப்பெற்றது.
இந்தப்
பிரபஞ்சத்திற்குள் எது இருந்தாலும் சமப்படுத்தி…
அதைத் தனக்குகந்ததாக உருவாக்கும்
சக்தி பெற்றவன் மனிதன்.
இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.
அகஸ்தியன் துருவனாகி
துருவ மகரிஷியாகி
கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை
ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து
வரக்கூடிய உணர்வுகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே
உள்ளது.
இந்தப்
பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒடுக்கக்கூடிய சக்தி பெற்றதுதான்
துருவ
நட்சத்திரம்.
அவ்வாறு வரக்கூடிய அந்த
துருவ நட்சத்திரத்தின் ஒளி
அலைகளை நம் பூமி துருவத்தின்
வழியாகக்
கவர்ந்து நமக்கு முன் பரவச்
செய்து கொண்டுள்ளது.
அதை நாம் எடுக்கக்கூடிய
நேரம் எது…?
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி பிரபஞ்சத்தில் பரவி வருவதை சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
2.அதை நம் பூமியின் துருவப் பகுதி வழியாகக் கவரும் அந்த
அதிகாலை நேரம் தான்.
ஈஸ்வரா…!
என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க
வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை
உடலுக்குள் செலுத்த வேண்டும்
இதை உறுதிப்படுத்த… உருவாக்க… உணர்வினை
வலுவாக்க…
உடலுக்குள் அந்த வலிமையைச் சேர்க்க…
தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின்
சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர
வேண்டும் அவருடைய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
அருள் ஒளி
அவருக்குள் படர வேண்டும்.
அந்த அருள் ஒளி
எனக்குப் பாய்ச்ச
வேண்டும் என்று
1.இரு மனமும் ஒன்றுபட வேண்டும்…
இரண்டு பேருமே இவ்வாறு எண்ணிக் கலந்து உருவாக்குதல்
வேண்டும்.
2.இது தான்
ரிஷி… சிருஷ்டிப்பது…!
ரிஷி பத்தினி என்று அன்று சொல்வார்கள்.
3.இருவருமே ஒன்றாகச்
சேர்த்து அருள் உணர்வுகளை
வளர்த்துக் கொண்டால் முழுமை பெறுகின்றோம்.
இதைத் தான் காவியமாகப் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார்கள்
அன்று ஞானிகள்.
காலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சேர்த்துக்
கொண்ட பின்…
நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்
என் பார்வை அவர்கள் தீமையை அகற்றிடும் சக்தியாக வர வேண்டும்
என்று நாம் நினைவுகளைச் செலுத்த வேண்டும்.
அதே சமயத்தில் இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். காற்று
மண்டலத்தில் ஏராளமான நச்சுத் தன்மைகள் பரவி உள்ளது. அது நமக்குள் புகாது தடுத்துத்
தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவை
2.மீண்டும் மீண்டும் நாம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உலகப் போர் என்ற நிலைகளில்
அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டு அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் பரவி எல்லாக் கோள்களும் எடுத்து
சூரியன் அருகிலே சென்றால் அதற்குள் மோதலாகி “இரு
மடங்கு காந்தத்தை”
சூரியன் உற்பத்தி செய்யப் போகிறது.
அத்தகைய இயக்கச்
சக்தி வரும்
போது
1.நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்
2.அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
3.உணர்வின் தன்மை மடியும் நிலைகள் வந்து விடும்.
அது போன்ற நிலை நம்மைப் பாதிக்காது தடுக்க வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை மட்டும்
எப்படிக் கூர்மையாக நுகர்ந்ததோ… அது போல் துருவ
நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அதை மாற்றிப்
பழகுதல் வேண்டும்.
இதை நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும்… இதனுடைய அர்த்தங்களைப் புரிந்து செயல்பட
வேண்டுமென்றால் ஆயுள் பத்தாது. குருநாதர் எமக்கு
கொடுத்த அருள் உணர்வுகளை…
1.பாக மண்டலத்தில் (கர்நாடகா அகஸ்தியன் அமர்ந்த இடம்)
பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்று
2.அகஸ்தியன் கண்ட உணர்வுகளை நானும் எடுத்து அதைக் கண்டு
கொண்டதனால்
3.அந்த உணர்வின்
அறிவு எனக்குள்ளும் வந்து குருவின்
துணையால் இந்த உண்மைகளை அறிய முடிந்த்து.
4.அகஸ்தியன்
கண்டுணர்ந்த
உணர்வின் அறிவுதான்
எனக்குள்ளும் புகுந்து அதையெல்லாம் அறிய
முடிகின்றது.
இதைப் போலத்
தான் நீங்களும் அறிந்து உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும்
சக்தியாக… “அகண்ட அண்டத்தில் நடப்பதை அறிந்துணர்ந்து”
அந்த அருள் ஒளியை உங்களுக்குள் விளையை வைத்துப்
பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.
அதற்குத்தான் திரும்பத்
திரும்ப…
திரும்பத்
திரும்பச் சொல்வது.
முதலிலே சொன்னது போன்று
சூரியனுக்குள் இருந்து இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கும் சந்தர்ப்பமாக அதிக சக்தி வாய்ந்ததாக இனி வரப்போகின்றது.
நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. அந்த உணர்வின் வேகத்
துடிப்பு வரும் பொழுது
உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
அந்தத்
துடிப்பாகும் பொழுது நமக்குள் உணர்வின் தன்மை அதிகரித்து… நம் நல்ல எண்ணங்கள்
அனைத்தும் ஃப்யூஸ் ஆகிவிடும். சிந்திக்கும் தன்மை
இழந்து விடுவோம்.
பூமிக்குள் நிலநடுக்கம்
ஏற்படுவது போன்று தான் ஒரு நொடிக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து விடும். எலெக்ட்ரிக் இரு மடங்காகி சிந்தனைகள் இழந்து விட்டால்…
1.மறுபடியும் நல்ல
சிந்தனைகளைக் கொண்டு வருவது மிகவும் கடினம்.
2.ஆகவே இப்பொழுது இருந்தே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின்
உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக்
கொள்ளுங்கள்.
அதன் உணர்வின் வலிமை கொண்டு எந்த நொடியிலே அந்த விஷத்தன்மையான இரு மடங்கு துடிப்பு
அதிகமானாலும் அதைப் பிளந்து உங்கள் இயக்கத்தைச்
சமப்படுத்தி கொள்ள இது உதவும்.
ஒரு நொடியானாலும் ஒரு
மணி நேரம் ஆனாலும்…
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து சிந்தனை சிதறாது வைத்திருக்கலாம். உங்களையும் காக்கலாம் எதிர்கால மக்களையும் காக்கலாம்.
இயற்கையின் சீற்றங்கள்
வரப்படும் பொழுது…
1.அந்த நேரத்தில் ஞானிகள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்
கொண்டார்களோ
3.அந்த உணர்வை நமக்குள்
செலுத்தினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அந்த நிலை நீங்கள்
அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.