
நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை
கோவிலுக்குச் சென்று யாகங்கள் செய்து வேள்விகள் செய்தால் ஆண்டவன்
காப்பாற்றுவான்…! நீ ஏன் கஷ்டப்படுகின்றாய்…? யாகத்தை வளர்த்தால் தன்னாலே ஆண்டவன் வருகின்றான்…!
என்று ஈப்படிச் செய்வதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.
நெருப்பைத் திகு திகு என்று எரியவிட்டு அதிலே பால் நெய் இன்னும்
என்னென்னமோ பொருளை எல்லாம் போட்டால் ஆண்டவனுக்கு இந்த வாசனைகள் போய் “எனக்கு வேண்டியதெல்லாம்
கிடைக்கும்… அவன் நமக்குக் கொடுப்பா…!” என்ற எண்ணத்திலே தான் நாம் இருக்கின்றோம்.
உதாரணமாக… நெருப்பில்
நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை
நெருப்பிலே போட்டால்… அதை
நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
ஆனால் பக்கத்திலே
சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம்மை இரும வைத்துவிடும்.
நெருப்பிலே
படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.
ஆனால்
நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?
1.எவ்வளவு
பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு
சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத்
தர்மத்தைச் செய்தாலும்
4.நல்ல
உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த
நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.
அப்பொழுது
இதை யார் இயக்குவது…? நமது
உயிர்…!
அதனால்
தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று
ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன்
உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள்
நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.
மிளகாய்த்
தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள்
அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.
இதைப்
போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள்
இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!
யார்
ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை
நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே… நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் உயிரான நெருப்பில் யாகத்தீயாக
அந்த அருள் ஞானிகள் உணர்வுளைப் போட வேண்டும்.
நம்
உயிர் ஒரு நெருப்பு…!
1.உயர்ந்த
ஞானிகள் உணர்வுகளை யாக்க்
குண்டமான உயிரான
நெருப்பிலே செலுத்தி
2.நம் உணர்வுகளை
எல்லாம் புனிதப்படுத்திச்
சொல்லின் நிலையாக அதை
வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.நமக்குள்ளும்
தீமைகள் நீங்குகின்றது நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகளும்
நீங்குகின்றது
4.தீமையை
நீக்கும் எண்ணங்களாக இந்தக் காற்று மண்டலத்திலே
பரவுகின்றது… எல்லோருக்கும் நன்மை செய்யும் சக்திகளாக…!
இதுதான்
ஞானிகள் சொன்னது.
இதைப் புத்தகத்தில் எழுதிக் காட்ட முடியாது.
நெருப்பு எப்படி வேலை செய்கின்றதோ…
அப்படித்தான் நமது உயிரும் வேலை செய்கிறது…!
என்று அன்று இப்படித்தான்
சொல்லிக் கொடுத்தார்கள்.
உயிரின்
நிலைகள் வேலை செய்யும் என்று சொல்லவில்லை… அதற்குப் பதிலாக “நெருப்பு தான் செய்யும்…” என்று நெருப்பிலே பொருளைப் போட்டு ஆண்டவனுக்கு மணமாக
அனுப்பி விட்டால் போதும்
என்று இப்படி மாற்றி விட்டார்கள்.
ஆனால்
அந்த நெருப்பிலே பொருளைப்
போட்டால் எப்படி மணங்கள் வெளி வருகின்றதோ
அதைப் போன்று தான்
1.நமது
உயிரான நெருப்பிலே நாம் எண்ணத்தால்
எடுத்து அந்த உயர்ந்த எண்ணங்களைப்
பரப்பிச் சொல்லாகச்
செயல்படுத்தி
2.உணர்ச்சிகளின்
தன்மையாக நம் உடலுக்குள் விளைவிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.
இந்த
உயிர் என்ற நிலைகளை விட்டு விட்டார்கள்…
நெருப்பு தான் எல்லாம் செய்கிறது…!
என்று அதைப் பிடித்துக் கொண்டார்கள்.
கல்யாணம்
செய்யும் பொழுது எல்லாம் இந்த நெருப்பைப்
போட்டு அக்னி சாட்சியாகச்
செய்கிறோம் என்பார்கள்.
புதிதாக வீட்டைக்
கட்டி அங்கே புகுந்தாலும் இதைப் போன்ற அக்னியைத்தான் அங்கே வளர்க்கின்றார்கள். கோவிலிலும் மற்ற இடங்களிலும் இந்த யாகங்களைத் தான் செய்கின்றார்கள்.
ஆனால்
அதனுடைய உட்பொருளே
நமது உயிர் ஒரு நெருப்பு அந்த
நெருப்பிலே உயர்ந்த உணர்வுகளைப்
போட்டு அந்த மணங்களைப்
பெருக்கி அதைத் தானும் மற்ற
எல்லோரும் பெறும்படியாகத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாகச் சாஸ்திரமாகக்
கொடுத்துச் சென்றார்கள்.
1.நெருப்பை
மட்டும் தான் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்
2.ஆனால்
உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.
நம்
குருநாதர் காட்டிய அருள் வழியில் மறைந்த உண்மைகளை எல்லாம்
உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.