நம் பூமி கூழாகிக் கொண்டே வருகின்றது.
ஏனென்றால் விஞ்ஞானத்தின் அணுக் கதிரியக்கத்தினால் நம் பூமி மட்டுமல்ல சூரியனுக்குள்ளும்
இதனுடைய பிரதிபலிப்பு அதிகமாகி விட்டது.
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாக்
கோள்களிலும் நம் பூமியைப் போல் நில நடுக்கங்கள் அதிகமாகிவிட்டது. நடு மையத்தில் வெப்பங்கள்
அதிகமாகிக் கரையும் நிலை மேல் ஓடு வரைக்கும் வந்தாகிவிட்டது. எல்லாமே மாயும் தன்மை
வந்துவிட்டது.
அதே சமயத்தில் நம் சூரியக் குடும்பபத்தைச்
சேர்ந்த 27 நட்சத்திரங்களும் அதனதன் உணர்வுக்கொப்ப “கிரேதா யுகம்…,” அதாவது தன் உணர்வின்
தன்மையைக் கவர்ந்து அதன் அடிப்படையில்
1.நம் சூரியப் பிரபஞ்சம் எப்படி
உருவானதோ அதைப் போல
2.ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனாக
மாறிக் கொண்டிருக்கின்றது.
3.ஒரு ஏழு நட்சத்திரம் வரை சூரியனாக
(குடும்பமாக) மாறிவிட்டது.
4.மீதி நட்சத்திரங்களும் முழுமையாகச்
சூரியனாக மாறும் தன்மைக்கு வந்து கொண்டிருக்கின்றது.
ஏனென்றால் அடுக்கு வரிசையில்
தன் உணர்வுகளை எடுக்கும் பொழுது மேல் வரிசையில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் அனைத்தும்
முதலில் சூரியனாக மாறுகின்றது.
அதன் உணர்வை எடுத்து அடுக்கு
அடுக்காக வரப்படும் பொழுது இந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பங்களாக மாறும்
தகுதியும் வருகின்றது.
அதற்கு முன் இந்தச் சூரியக் குடும்பம்
சூரியனே கரைந்து குழம்பாகி விட்டால் அதனுடன் சேர்த்த நம் பூமி சுக்குநூறாகிவிடும்.
பின் சூரியனின் ஈர்ப்புக்குப் போய் ஆவியாக மாற்றிப் புயல் போல் எல்லாமே மாற்றப்பட்டுவிடும்.
இந்த 27 நட்சத்திரங்களும் நாம்
வாழும் இந்தச் சூரியக் குடும்பத்திலிருந்து அது வளர்ந்தது தான்.
1.புயலாகக் கரையும் உணர்வுகளை
(இதில் சமைத்த உணர்வுகள்) எடுத்து
2.இந்த 27 நட்சத்திரங்களுக்கும்
27 விதமான பிரபஞ்சங்களாக சூரியக் குடும்பமாக
3.இன்றைய செயல் நாளைய செயலாக
மாறிக் கொண்டிருக்கின்றது.
இதைப் போன்ற உலகில் தான் நாம் வாழ்கின்றோம். ஆனால்
என்றுமே ஏகாந்த நிலையில் நாம் வாழ வேண்டும் என்றால் நம்முடைய கடமைகள் எதுவாக இருக்க
வேண்டும்…?
1.நம் உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
2.மகரிஷிகள் உணர்வை எடுத்து நம்
உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக
மாற்ற வேண்டும்.
இவ்வாறு உயர்ந்த உணர்வுகளை நாம்
நுகர்ந்ததைத்தான் கிரேதா யுகம். நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகளை நமக்குள் மாற்றியமைக்கின்றது.
நம் உடலுக்குள் சென்றால் “திரேதா…!”
எதை நுகர்ந்து… “கிரேதா…” சேர்த்துக் கொள்கின்றோமோ உடலுக்குள் அந்த நல்ல உணர்வின் எண்ணங்களை
எடுக்கும் பொழுது நல்ல எண்ணங்கள் கொண்டு தீமைகளை நீக்குகின்றோம்.
அதாவது “துவாரகா…!” நம் உடலுக்குள்
தீமை என்ற உணர்வு வந்த பின் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொண்டால் “கல்கி…!”
இங்கே துவாரகா யுகத்தில் வேதனை
என்ற உணர்வானால் “கலி…!” இந்த மனித உடலை மாற்றி விஷம் கொண்ட உயிரினமாக அமைத்துவிடும்.
ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை எடுத்தால் கல்கி. இந்த உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்த நிலையான அழியா ஒளிச் சரீரம்
பெறலாம். ஆகவே
1.இந்த மனித உடலுக்குப் பின்
“பிறவியில்லா நிலை…!” அடைவதே
2.மனிதனின் கடைசி நிலை…!