துருவ மகரிஷிகளையும்,
துருவ நட்சத்திரத்தையும்,
சப்தரிஷி மண்டலங்களையும்,
நாம் கூர்மையாக எண்ணி, நமக்குள்
பதிவாக்கி,
அந்த உணர்வினை நுகர்ந்து,
நம் உடலுக்குள் அணுவாக மாற்றிடல்
வேண்டும்.
அவ்வாறு மாற்றும் உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கும், இதற்கு முன் நம்
உடலை உருவாக்கிய அணுக்களில், அந்த சக்திகள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
நாம் தியானித்து, கண்ணின் நினைவாற்றலை உடலுக்குள் செலுத்த
வேண்டும்.
உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
பெறவேண்டும் என்ற நினைவினை உள்முகமாகச் செலுத்தும் பொழுது, நமது கண்கள், நமது உடலுக்குள் உணர்ச்சிகளை ஊடுருவி, நினைவின் ஆற்றலை
உடலுக்குள் பரப்புகின்றது.
உதாரணமாக ஒரு நண்பனிடத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றால், அவர் நன்மை
செய்தார் என்று எண்ணும்பொழுது, அவருக்கு விக்கல் பாய்கின்றது. அதே சமயம், துரோகம் செய்தார்
என்று எண்ணினால், இங்கே புரையோடுகின்றது.
இதைப் போன்றுதான், அருள் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து, உடலுக்குள்
பதிவாக்கி, மீண்டும்
அந்த உணர்வை நுகர்ந்து, நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவெண்டும்
என்று உணர்வினைப் பாய்ச்சும்போது, இந்த
உணர்வுகள்,
நம் நினைவாற்றல்களை, அந்த அணுக்களில் உள் செலுத்துகின்றது.
உதாரணமாக, நம் உடலில்
வேதனைப்படுகின்றோம் என்றால், நம் கண்ணின் நினைவுகள், அந்த வேதனைப்படும் இடங்களுக்கே
செல்கின்றது.
அந்த உணர்வினை நமக்குள் நுகரச்
செய்கின்றது. அதைக் குறி வைத்துப் பார்க்கும்படியும்
செய்கின்றது.
இதைப் போன்றுதான், நாம் எடுக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களும்
பெறவேண்டும் என்ற நினைவினை,
உள்முகமாகப் பாய்ச்சும் பொழுது,
அந்த உணர்வுகள்,
அந்த அணுக்களில் இணைக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கும் உணர்வுகள், நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும், அந்த அணுக்கள்
பெற்ற உணர்வுகள், அது தீமையை நுகரும் உணர்வுகளை மாற்றி, அந்த மகரிஷிகளின்
உணர்வை நுகரும் ஆற்றலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
இப்பொழுது செடிகளுக்கு நாம் உரமிடும்போது, அது நீருடன் கலந்து, அது மரத்துடன்
ஆவியாக மாற்றி, அதனுடன்
இணைந்துவிட்டால், எதன் உரத்தை நாம் இணைத்தோமோ, அந்த உரத்தின் வலிமை கொண்டு, தன் சத்தைக் காற்றில்
இருப்பதைக் கவர்ந்து,
அந்த மரத்தைச் செழிப்பாக வளர்க்கின்றது.
அதைப் போல நமக்குள்
இருக்கும் அணுக்களில், எத்தனையோ விதமான பகைமை உணர்வுகள், சலிப்பு உணர்வுகள், வேதனை உணர்வுகள், இப்படி அறியாமல்
சேர்த்துக் கொண்ட பல உணர்வின் அணுக்கள், அது எதன் வழிகளில் எந்தெந்த குணங்களில்
உருவானதோ, அந்த
உணர்வின் தன்மை கொண்டு, அந்த அணுக்கள் இரைக்காக ஏங்கும்.
அவ்வாறு ஏங்கும் பொழுதுதான், நாம் அதை நுகர்ந்து, நம்மை அறியாமல்
மனக்கலக்கங்களும், வெறுப்பும், வேதனையும் என்ற நிலைகள் உருவாகி, அதற்குத்தக்க நம் உடலின் இயக்கமும், செயல்களும்
உருவாகின்றது.
இதை மாற்றியமைப்பதற்கே, நம் குரு காட்டிய
அருள் வழியில். செடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று, காலை நேரத்தில் இதைப் போன்று அருள் ஒளியை, நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் பாய்ச்சுவதற்காக, நாம் அனைவரும்
துருவ தியானம் இருக்கின்றோம்.
இவ்வாறு தியானிப்பதனால், நம்முடைய
நினைவின் ஆற்றல்,
நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களிலும் ஊடுருவி, அந்த
மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடிகின்றது.