பல கோடிச் சரீரங்களைக் கடந்து, இன்று மனிதனாக வந்தபின், பச்சையாக எதைச் சாப்பிட்டாலும், வாயில் அந்த வாசனைதான் வருகின்றது. உடலிலும் அந்த வாசனை வரும்.
வெங்காயம் சாப்பிட்டால், எப்படி அந்த வாசனை வருகின்றதோ, இதைப்போன்று அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின், அந்த உணர்ச்சிகள் இயக்குகின்றது.
இதைப்போலத்தான், பச்சையாகச் சாப்பிடக்கூடிய உடல்களிலே அதாவது, ஆடு மாடுகளில், இந்த மணம்தான் வரும்.
நாம் பச்சையாகச் சாப்பிட்டோம் என்றால், உடலை விட்டுப் போனோம் என்றால், ஆடு எத்தனை வகையான இலையைச் சாப்பிட்டதோ, அதே மாதிரிச் சாப்பிட்டவுடன், நாம் அங்குதான் போவோம். ஆடாகப் பிறப்போம்.
நாம் பச்சையாகச் சாப்பிட்டோம் என்றால், உடலை விட்டுப் போனோம் என்றால், ஆடு எத்தனை வகையான இலையைச் சாப்பிட்டதோ, அதே மாதிரிச் சாப்பிட்டவுடன், நாம் அங்குதான் போவோம். ஆடாகப் பிறப்போம்.
அதே ஆட்டை அறுத்துச் சாபிட்டாலும், நமக்கு ஆட்டின் நினைவு வரும். உடலை விட்டுப் போனால், அந்த ஆட்டிடம்தான் செல்ல வேண்டும்.
ஆட்டை வேகவைத்துச் சாப்பிட்டாலும் சரி.
பச்சை இலைகளைச் சாப்பிட்டாலும் சரி.
அதே சமயம் இந்தப் பச்சிலைகளை வேக வைத்து விட்டால், இந்த வீரியசக்தி குறைகின்றது. பல பொருளோடு சேர்த்து, இணைத்து ருசியாகச் சாப்பிடும் பொழுது, அதற்குத்தக்க அளவை நம் இரத்தங்களிலே கலந்து, நல்ல அணுக்களாக உருவாகின்றது.
இந்த அணுக்கள் இரத்தங்களிலே கலந்து, நம் உடலிலுள்ள அணுக்களுக்குச் சேர்க்கப்படும் பொழுது, கொஞ்சம் விஷம் தோய்ந்த உணர்வின் நிலைகள் மாறி, அணுக்கள் திடகாத்திரமாக மாறும் என்ற உண்மையை, அகஸ்தியர் முதல் முதலில் கண்டுபிடிக்கின்றார்.
ஒவ்வொரு செடியையும் நுகர்ந்தறிந்து, அதனுடைய இயக்க நிலைகளை அறிந்து கொண்டு வருகின்றான். அறிந்தபின், காய்கறிகளை வேகவைத்து, ருசியாகச் சாப்பிடப் பழகினான்.
அப்புறம் கனிகளைச் சாப்பிட்டான். கனிகளின் உணர்வினை அதிகமாகச் சாப்பிட்டாலும், அதன் உணர்வு கொண்டு, உணர்வுகளின் அணுக்கள் மாறி, அந்த கனியைச் சாப்பிட்ட உயிர் அங்கே சென்றபின், அதனைக் கவர்ந்து மாறிவிடும் (தனித்துச் சாப்பிட்டால்).
இதையெல்லாம் உணர்ந்தபின், இன்று புல் இருக்கின்றது. பயிராகி வருகின்றது. அதில், இதைப் போல எடுத்து உணவாக உட்கொள்ளவும், பல செடிகளை இணைத்து, புதுப் புதுச் செடிகளை உருவாக்கினார் அகஸ்தியர். ராகி, சோளம், அரிசி, அவைகளையெல்லாம், மற்ற புல் பூண்டிலிருந்து எடுத்து, உருவாக்கினார்.
இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ வகையான சோளம், இதெல்லாம் மாற்றுவதுபோல் மாற்றி, அதனை வேக வைத்து, மனிதன், கலவையாகச் சாப்பிடுவதும், தாவர இனங்களில் உருவாவதைச் சேர்த்து ருசியாக சாப்பிடப் பழகினார்.
என்று நெருப்பைக் கண்டுபிடித்தானோ,
அதன் தன்மை கொண்டு,
வேக வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது.
இப்படி மாற்றியமைத்தவன் அகஸ்தியன்.
முதன் முதலில் நெருப்பைக்
கண்டுபிடித்தவன் அகஸ்தியன். வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியவனும்
அகஸ்தியன் தான்.
அகஸ்தியன் வேகா நிலை அடைந்து
ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளான்.