ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2013

மெய்ஞானிகளின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தி, தீமையைப் பிளக்க முடியும்

1. கதிரியக்கப் பொறிகளும், அதனுடைய அதிர்வின் தன்மையும்
இன்று விஞ்ஞானிகள் எலெக்ட்ரானிக்கின்  நிலைகள் கொண்டு, லேசர் கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு, இன்று மற்றொரு நாட்டினுடைய நிலைகளையும் ஊடுருவப்பட்டு, அந்த எலெக்ட்ரிக், அந்த எலெக்ட்ரானிக்கினுடைய நிலைகளை கதிரியயக்கங்களைப் பாய்ச்சியபின்,
அது மின் அணுவாக
அதனுடைய அதிர்வின் நிலைகள் கொண்டு,
அங்கே இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்
இயந்திரத்தின் மூலமாகக் காண்கின்றான்.

ங்கே ஒரு ஊசியை, நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும், ஊசி முனையின் எந்த அளவுகோல் என்ற நிலைகளையும் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு, விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயும் வந்துவிட்டது.

காரணம், இதனை நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு, இதனின் நிலைகள் கொண்டு பிளக்கின்றான். இதைப்போல, இப்பொழுது சாதாரணக் கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு, இந்தக் கதிரியக்கத்தால் அலைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் அளவுகோல்களை அவன் பிளந்து அறிகின்றான்.

ஆக, ஒரு அலையின் தன்மை, அது எந்த அளவு இருக்கின்றதோ,
அந்த நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து,
அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான் என்று அவன் காணுகின்றான்

இதைப்போலதான், பூமிக்குள்ளும் கதிரியக்கச்சக்திகளை ஊடுருவச் செய்து, அதனின் நுண்ணிய அளவுகோல், மற்ற உணர்வின் இயக்கங்களின் அளவுகோலைக் கண்டு, இன்னென்ன பாகங்கள் இன்னென்ன உணர்வின் உறுப்புகள், உருபெறும் சக்திக்குத் தகுந்த, ங்கே பொருள்கள் விளைகின்றது என்ற கண்டுபிடிக்கும் உணர்வும், விஞ்ஞான அறிவால் வந்துவிட்டது.
2. தீமைகளைப் பிளந்திடும் கதிரியக்கங்களாக தனக்குள் மாற்றியர்கள் மெய்ஞானிகள்
மெய்ஞானிகளோ, அவர்கள் கண்ணின் நிலைகளை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ, ஊடுருவி, அதனின் உணர்வின் தன்மையை அறிந்து, தனக்குள் நுகர்ந்து, தான் யார்? என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்.

ஆக, விண்ணுலக ஆற்றலும், பேரண்ட உணர்வுகளும், தனக்குள் அவர்கள் கவர்ந்து, ஆக மனிதனான பின் தீமைகளைப் பிளந்து, தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகள், அதாவது கதிரியக்கங்களாக மாற்றினார்கள்.

தன் உணர்வின் செயல் அனைத்தும், தன் எண்ணங்களை ஊடுருவி, ஒவ்வொன்றும் தனக்குள் கவர்ந்து, அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக, அணுக்களை வளர்ச்சி செய்யப்பட்டு, இதைப்போன்றுதான் தீமையான நிலைகளைத் தன் உடலில் சுட்டுப் பொசுக்கினான் மெய்ஞானி.
ஆக, இருளைப்போக்கும் உணர்வை தனக்குள் விளைய வைத்தான்,
உயிருடன் ஒன்றினான், துருவ நட்சத்திரமானான்.
அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும்,
தீமையை விலக்கிடும் நிலையாக
அந்த மெய்ஞானிகளின் உணர்வு சென்றது.

விஞ்ஞானிகளோ இன்று அணுவைப்பிளந்து, அணுவின் தன்மை கொண்டு அது கதிரியக்கங்களாக மாற்றி, அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும் போது, ஒளியலைகளைக் கண்டுணர்ந்து, அதனின் லேசரை அதன் இயக்கம் எவ்வாறு? அதனுடன் கலந்த நிலைகள் எது? என்று தனக்குள் விரிவுபடுத்தி இன்று விஞ்ஞானிகள் அறிகின்றனர்.

னென்றால், உங்கள் விஞ்ஞானப் பொறிகளில், நீங்கள் யார் விஞ்ஞானத்தில் இருந்தாலும் சரி, யாம் சொல்லும் அந்தப் பொறிகளினுடைய நிலைகளை அங்கு சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோல் இன்று யாம் சொல்லுகின்றோம். அந்தப் பொறியின் அளவுகோல்களை, விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

னென்றால், அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்ற நிலைகளை, அதனுடன் தொடர்கொண்டு, இந்த விண் அணுக்களுடைய நிலைகளையும், அதேசமயத்தில் கதிரியக்கப் பொறிகளுடைய நிலைகளும், உணர்வுகள் எதனுடன் ஊடுருவுகின்றதோ, அது எவ்வாறு பிளக்கின்றது? பிளந்த நிலைகளை எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்? அது இணைத்துக்கொண்ட பின் எவ்வாறு இயக்குகின்றான்? என்ற நிலையைத் தெளிவாக நமது குருநாதர் எடுத்துரைத்தார் அதைத்தான் உங்களுக்குள் யாம் சொல்வது

இவ்வளவும் சொன்னாலும், நான் படிக்காதவன் சொல்லி விட்டேன் என்றால், அப்புறம் படித்தவர்கள் இதிலே இன்னொரு விஷயத்தை, நிறைய எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய ஆராய்ச்சிக்குக் கொண்டு போவார்கள் ஆக, விஞ்ஞான அறிவுக்குத்தான் பயன்படும்

மெய்ஞானிகளின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தி, இந்த உணர்வின் எண்ணத்துடன் பாய்ச்சப்படும்போது, தீமையைப் பிளக்க முடியும்.