ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2013

சாமி (ஞானகுரு) சொன்ன வழி

1. இந்த உடலுக்குபின் இன்னொரு பிறவி வேண்டாம்
இந்த மனித உடலுக்குப் பின், இன்னொரு சரீரம் பெறவேண்டாம். அது ஒளிச் சரீரமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆக, முடிவாக அந்த ஒளிச் சரீரம் பெறவேண்டுமென்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு, “மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறவெண்டும்” என்ற இந்த உணர்வினை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது, இந்தப் புவிக்குள் நம் எண்ணங்கள் சுழலாது.

ஆக, நாம் அடிக்கடி நாம் அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் அலைகள் வரும். இதற்காக வேண்டி,
நாம் மணிக்கணக்கிலே உட்கார்ந்து ஜெபமிருந்து,
சப்தரிஷி மண்டலத்திற்குப் போகவேண்டுமென்பதில்லை.
2. மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டிய சரியான முறை
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும், எப்பொழுதெல்லாம் “கடுமையான எண்ணங்கள்” நம்மைத் தாக்குகின்றதோ, அப்பொழுது நாம் எடுக்கும் தியானத்தின் வலுக் கொண்டு,
“மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்”
என்ற உணர்ச்சியைத் தூண்டுங்கள்”

“இப்படி ஆகின்றதே” என்று கோபம் வரும் பொழுது, அதே உணர்ச்சியின் வலுக் கொண்டு, “மகரிஷிகளின் அருள் சக்தியை பெறவேண்டும்” என்ற உணர்ச்சியைக் கூட்டுங்கள்.

ஏனென்றால், இந்தக் காரமான கோபமான நிலைகள் ஏற்படும் பொழுது, “ஈஸ்வரா” என்று அந்த வேகத்தைக் கூட்டுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். இந்த உணர்ச்சி அதை (அருள் சக்திகளை) எடுக்க உதவவேண்டும்.
               
பிறர் நம்மைத் திட்டிய உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டியவுடன்,
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நீங்கள் அங்கே செலுத்தப்படும் பொழுது,
அந்த உணர்வை “வேகமாக இழுத்து”,
உங்கள் கோபத்தை அடக்கி,
உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

உங்களுக்குள் சொல்லின் நிலைகள் எங்கிருந்து அவர்கள் தோற்றுவித்தாலும், உங்கள் சொல்லால் சொல்லும் பொழுது, அங்கேயும் அடங்கும், பார்க்கலாம். உங்கள் அனுபவத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.
3. சாமி செய்து தர மாட்டார், சாமி சொன்ன வழிகளிலே, நமக்குள் நாம் தான் வளர்க்க வேண்டும்
ஆகையினாலே, இந்த மனிதனுடைய சந்தர்ப்பத்தை, இந்த உடலின் சந்தர்ப்பத்தை இழக்காத நிலைகளிலே, ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க, உங்கள் எண்ணத்திற்கு வலுக்கூட்டுங்கள்.

சாமி (ஞானகுரு) “எனக்குச் செய்து கொடுப்பார்” என்று எண்ணாதீர்கள்.

யாம் உங்களுக்கு உணர்வைக் கொடுத்திருக்கிறோம், அதை நீங்கள் எடுக்க வேண்டுமல்லவா.
யாம் சாப்பாடு போட்டால்,
நீங்கள் சாப்பிட்டால் தானே நல்லது.

இங்கு வந்தவுடன், தலைவலி, மேல்வலி போய்விட்டால், இன்று தலைவலி போய்விட்டது மீண்டும் நாளைக்கு சாமியைத்தான் தேடி வரவேண்டும் என்று எண்ணுகிறோம்.

சாமி சொன்ன வழிகளிலே
எல்லாத் தீமைகளையும் போக்குவதற்கு,
நம் எண்ணத்தை வலுக்கூட்ட வேண்டும்
என்ற எண்ணத்திற்கு வரவேண்டும்.

அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதைத் தான் யாம் விரும்புகின்றோம். எமது அருளாசிகள்.