1. அரசர்கள் நமக்குள் உருவாக்கிய
மதத்தின் தன்மைகள்
இப்பொழுது, நீங்கள் சாஸ்திரங்களையும், மதத்தின்
அடிப்படையில் காட்டிய அதாவது, சாங்கிய சாஸ்திரங்கள் அதில் எடுத்துக்கொண்ட
வேதங்களையும் நீங்கள் படித்துப் படித்து, அதனை உருவாக்கி விட்டால், அந்த மதத்தின் பிடிப்பில் இருந்து நீங்கள் விலகுவது இல்லை.
ஆனால், மதத்தின் தன்மை பிடிப்பாக வரப்போகும்போது, அதிலே வரும்
நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான், அந்த மதத்தை விட்டு அடுத்த
மதம் தாவினாலும், அதனின்று
“எனக்கு அந்தக் கடவுள் செய்வாரா?” என்ற நிலைகள்தான்,
இன்று
பிரிந்து செல்லும் நிலைகளில் வருகின்றது.
ஆகவே, இன்று ஜாதகமும், மதங்களால் உருவாக்கப்பட்ட வேதங்களும்,
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. இந்த வேதத்தின் தன்மையை, தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள்
தொகுக்கப்பட்டு, இந்த மதத்துக்கென்று அரசனாகி,
அந்த அரசன் வழிகளிலேதான் அந்த நாட்டின் தன்மைகள் வந்தது.
அவ்வாறு
விளைந்த உணர்வுகள், அதிலே விளைந்த உணர்வின் தன்மைதான் இன்று
நம்முள் விளையப்பட்டு, அவர்கள் செருகிய வித்தின் உணர்வுகள் கொண்டு,
இன்றும் நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வாக,
இயக்கிக்கொண்டே உள்ளோம்.
ஆகவே, இதைப்போன்று ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு அந்த மந்திர ஒலிகளின்
தன்மை செருகப்பட்ட உணர்வு கொண்டுதான்,
அதனதன்
மதத்தை இறுக்கிப் பிடித்து,
மற்ற
மதத்தைப் பழிக்கச் செய்கின்றது.
ஒரு
தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு, எவ்வாறு தன் சத்தை
அது கவர்ந்து கொள்கின்றதோ, தன் உணர்வால் அது கவர்ந்து கொள்கின்றது.
தன் மணத்தால், மற்றவைகளை அணுக விடுவதில்லை.
மதத்தால்
கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தும், அது தன் எண்ணத்தால்
கவர்ந்து கொண்டாலும், அதில் ஏற்பட்ட மணம் தான் அது. ஆக மற்றவர்கள் எது சொன்னாலும், அந்த மணம் தடுக்கத்தான்
செய்யும்.
அந்த மதத்தின் தன்மை கொண்டு,
மற்ற மதங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாது.
அதே
போன்று மற்ற இனங்களில், இதே போன்று தான் இனத்தின் தன்மை எதனால்
மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மைதான் மணத்தால் மணம் அதிகமாகிவிடும்
அந்த உணர்வின் தன்மை கொண்டு, தான் உணவாக எடுத்துக்கொண்டு அது
விளைகின்றது.
2,.
மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் ஒன்றச் செய்வதற்குத்தான், யாம் உபதேசிக்கின்றோம்
இதைப்போன்றுதான்
மகரிஷிகள் காட்டிய அருள்வழிப்படி, உங்களில் மீண்டும் மீண்டும், அந்த விண்வழி சென்ற இந்த உணர்வின் ஆற்றலை
உங்களில் பருகிப் பருகி, இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் திறனை, உங்களுக்குள்
உரமாக ஊட்டுவது இதற்குத்தான்.
ஆகவே, வீண் என்ற பேச்சு இல்லை, விரையமாக்கும் தன்மை இல்லை. அருள்ஞானியின் உணர்வுகள், அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தனரோ, அதைப்போல அந்த மகரிஷியின் அருள்சக்திகளை, உங்களுக்குள் இணைத்து
இணைத்து, இந்த இணைப்பின் வளர்கொண்டு அதை உங்களுக்குள் உரமாக்கச் செய்கின்றோம்.
அப்படி
உரமாக்கிய நிலைகள் கொண்டு, அதில் எண்ணத்தால் நீங்கள் வளரும் அந்தப்
பருவம் வந்துவிட்டால், உங்கள் நினைவின் ஆற்றல்
அங்கே வருகின்றது. பேரானந்தப் பெரும் செல்வத்தை
உங்களில் வளர்த்திட, இது உதவும். இதற்குத்தான்
இதைச்சொல்வது.
ஆகவே, ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு
விதமாக இருப்பினும்,
அந்த
மகரிஷிகள் காட்டிய நிலைகளை
நாம்
இயங்கிடும் உணர்வுடன் இணைத்து,
அதன் நினைவினை உற்றுநோக்கி, அந்த நினைவுடன்
அந்த மகரிஷியின் உணர்வை ஒன்றச்செய்வது தான்,
யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள்.
ஆக, கடந்த கால நலன்களும், வாழ்க்கையில் வந்த தீமைகளும்,
மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளும், அதனால் ஏற்பட்ட நாம், அதைக் காத்திடும் உணர்வாக விளைய வைத்த நிலைகளை அது உணர்த்தி, அந்த உணர்வின் நினைவைக் கொண்டு, மகரிஷியின் அருளுணர்வை இதனுடன் இணைக்க வேண்டும். அதற்குத்தான்
யாம் தொடர்ந்து, தொடர்ந்து, சொல்வது.
இப்படி, மகரிஷிகள் காட்டிய உணர்வுகளை இணைத்து வந்தபின்,
நீங்கள் சிந்திக்கும் திறனும், இதிலிருந்து அருள்ஞானிகள்
அவர்கள் எப்படி அது மதத்தால் வந்த நிலைகளைப் பிளந்து, தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவருக்குள்
விளைய வைத்தார்களோ, அந்த உணர்வை நுகரும் நிலையும்,
உங்களுக்குள் கவர்ந்திடும் நிலைக்குத்தான் இதைச்
செயல்படுத்துவது.
ஆகவே, இதை ஒவ்வொரு நாளும் நீங்கள் நினைவுகொண்டு, நமது எல்லை
எது? இன்று நாம்
உயிருடன் ஒன்றிடும் உணர்வின் தன்மை கொண்டு,
எல்லையாக
அது ஒளியான நிலைகள் கொண்டு,
இன்று
எங்கு சென்றடைந்து,
அதனுடைய குழுவாக, “கூட்டமாக”
இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ,
அதைத்தான் நம் எல்லையாக வைக்க வேண்டும்.
இன்று
நாம் இந்தக் கூட்டமைப்பில், அதாவது, புழுவில் இருந்து
மனிதனாக வந்த நாம், மீண்டும் எதனுடைய நிலைகளைள் எடுத்துக் கொள்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மையயாக,
வேதனை என்ற நிலைகள் வந்தால் பாம்பினக் குழுவில் நாம் சேர்ந்து,
அதனுடைய கூட்டமைப்பிலேதான் இணைவோம்.
அதைப்போல, கடுகடுப்பென்ற நிலையான உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால்,
நம்முடைய எல்லை எதுவாக வைப்போம் என்றால், தேள்
இனத்தில் தான் போய் வைப்போம்.
பல்லியினுடைய மலத்தை நாம் உணவாக உட்கொண்டால் நம்மைக் கொல்லுகின்றது. இதைப்போல, நாம் நஞ்சினை மனதில், மனிதன் நிலைகள் கொண்ட, தாயினம் தனக்குள் தன்னை வளர்த்த
நிலைகள் நஞ்சென்று பாய்ச்சியபின், தாயையே
கொன்றிடும் நிலைகள் வருகின்றது
ஆகவே, நஞ்சில் உருவான இந்த உணர்வுகள், அதே பல்லியின் மணம் அதில் உள்ள நஞ்சு நமக்குள் வந்துவிட்டால்,
அது நம்மைக் கொன்று விடுகின்றது.
இதைப்போலத்தான், தாயின்பால் இருக்கும் வெறுப்பினை ஊன்றிவிட்டால், தன்னை
வளர்த்த இந்த உணர்வே, அதிலே விளைந்த உணர்வுகள் தாயைக் கொல்ல வைக்கின்றது
இதைப்போன்ற நிலைகளிலிருந்து
நாம் மீள்தல் வேண்டும்.