ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2013

குருநாதர் காட்டிய 2000 சூரியக் குடும்பம்

1. குருநாதர் காட்டிய 2000 சூரியக் குடும்பம்
பேரண்டம் என்பது, 2000 சூரிய குடும்பங்கள் சேர்த்துத்தான் ஒரு பேரண்டமாக இருக்கின்றது. இந்தப் பேரண்டத்தில் இருந்து, நாம் அனைத்தும் நுகர்ந்தெடுத்து, இது எல்லாம் வடித்து எடுத்துக் கொண்ட நிலைகள்தான் ஒரு உயிரணுவின் தோற்றம்

சூரியகுடும்பம் என்பது, ஒரு பிரபஞ்சம்
ஆக, இந்த 2000 சூரிய குடும்பங்கள் சேர்ந்து
ஒரு பேரண்டமாக மாறுகின்றது.
இதைக் காட்டிலும் பெரியது, அகண்ட பேரண்டம்.

பேரண்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட எல்லைகள் கொண்டது அகண்ட பேரண்டம் என்கிற போது, இந்தப் பேரண்டத்தில் எல்லையே இல்லாத நிலை தான், அகண்ட பேரண்டம் என்பது

பேரண்டம் என்பது, ரெண்டாயிரத்துக்குள் ஆயிரம் ஆனாலும், இது பேரண்டம் தான் ஆகவே, இவ்வாறு இதனில் வடித்த நிலைகள், ஒவ்வொரு சூரிய குடும்பமும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி, அதில் இருந்து உமிழ்த்திய நிலைகள் வடிகட்டி, இந்த நட்சத்திரங்கள் அதற்குள் சேர்த்து, அதனதற்குத் தகுந்தவாறு, ஒவ்வொரு சூரியக் குடும்பமும் மாறுகின்றது.

இதைப்போல தான், மனிதன் ஒவ்வொரு உயிரும் நமக்குள் இருப்போரும், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு சோக நிலைகளோ, வேதனை நிலைகளோ சார்ந்த நிலைகளாக இருப்பினும், அது  நாம் பழகும் சூழ்நிலைக்கொப்பத்தான் அமைகின்றது.

அதாவது, நாம் யாரிடம் அதிகமாகச் சேருகின்றமோ, அவருடைய தீமைகளை, விருப்பு, வெறுப்பு, உணர்வைக் கொண்டுதான் நாம் உயர்ந்த நல்லவராக இருப்பினும், பலருக்கு உதவி செய்தாலும், பிறருடைய கஷ்ட உணர்வுகளை எல்லாம் கேட்டுணர்ந்தால், அந்த நஞ்சுகொண்டு உணர்வின் தன்மை கொண்டு, நம்முடைய உடலும் கெடும். அதைப் போன்றுதான் இந்தச் சூரிய குடும்பமும் கெடும். பின் இதனின் நிலைகள் மாற்றமாகின்றது.

குருநாதர் காட்டிய அருள்வழியில், இன்று 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி வெளிப்படுத்துகிறோம். இதையெல்லாம் நான் இலேசாகச் சொல்லுகிறேன் என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச்சென்றார் நம் குருநாதர், மாமகரிஷி ஈஸ்வரபட்டர்.
2. 2000 சூரியக் குடும்பத்தில் உள்ள மனிதனின் நிலை
அந்த அண்டங்கள் எவ்வாறு இயக்குகின்றது? அது எடுத்துக் கொண்ட உயிர் இனங்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது? இந்த 2000 சூரியக் குடும்பங்களில்
முடி இருப்போரும் உண்டு.
கூழையாக இருப்போரும் உண்டு
தன்னைக்காட்டிலும், நம் பூமியைக்காட்டிலும்
மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.

அங்கே விஞ்ஞான அறிவினுடைய நிலைகள், இங்கே நுண்ணிய அலைகள் கொண்டு, நாம் எப்படி, எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் செயல்படுகின்றமோ, அதைப்போல ஒரு இயந்திரத்தை மாற்றுகின்றோமோ, இன்று மந்திர ஒலி கொண்டு, மனிதனை உருகுலையச்செய்து ஆவியாக மாறுகின்றானோ, கூடு விட்டு கூடு பாய்கின்றானோ, இதைப்போன்று இந்த பூமியில் இருப்பது போல, இந்த 2000 சூரியகுடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில், அவர்கள் இதைப்போல முயற்சிகள், தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, உடலையே ஒளியாக மாற்றி, எங்கே வேண்டுமென்றாலும் செல்லும் தருணம், மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்டவர்கள், அவர்கள்.

நம் நாட்டைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகள் கொண்டு, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி, அங்கே ஊடுருவல் நிலைகள் செயல்படும் தன்மைகள் உண்டு.

இதை எல்லாம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான், யாம் சொல்கின்றோம். னென்றால், சாமி முன்னாடி தையெல்லாம் சொல்லவில்லை என்று நினைப்பார்கள். எதை எதைச் சொல்வது? எதை மனதில் வைப்பது? அந்தந்தக் காலம் வரும் போது தான், இதை உங்களுக்குள் யாம் பதிவு செய்கின்றோம்.

ஆகவே, இதைப்போல எலெக்ட்ரானிக்”, ஒரு பொருளின் தன்மை கூட்டி, ஒரு பொருளின் தன்மையை ரூபமாகத் தனக்குள் மாற்றி, ன்று எலெக்ட்ரானிக்கில் எப்படிக் காட்டுகின்றார்களோ, இதைப்போலத்தான் அவர்கள் விண் விசையின் தன்மையை எலெக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி, இன்று நமது பூமிக்கும் வந்து செல்லுகின்றார்கள். பறக்கும் தட்டு அந்தத் தட்டு என்றும் சொல்லாம். 
இதை எல்லாம் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மை இழுக்கின்றார்கள், குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலை, அடுத்தவர் வருவதற்குள் மறைந்துவிடுவார்கள். இதைப்போன்று எலெக்ட்ரானிக் இவர்கள் செய்யும் (நம் பூமியில் உள்ள) விஞ்ஞான அறிவைப்போல, அவர்கள் விஞ்ஞான அறிவிலே மேன்மை கொண்டவர்கள்.

ஆக, அதைப்போல நம் பூமியில் வந்து செல்கின்றார்கள். அதே உணர்வலைகளை இன்று நம் பூமியில் கவர்கின்றது. ஒரு எலெக்ட்ரானிக் நிலைகளை ஒரு மனிதனை எடுத்துவிட்டால், ரு அலைகளாகப் பிரிக்கப்படும் நிலைகளும், இன்று நம் நாட்டிலே, நம் பூமியிலும் இது நடக்கின்றது.

உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்கில் இணைத்தபின், ரு அலைகளாக மாற்றி, மீண்டும் இங்கேயும் ஊடுருவி, அந்த உணர்வின் தன்மை எங்கே வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு, அந்த எலெக்ட்ரானிக்கின் கருவி கொண்டு, மற்ற இயந்திரங்களையோ, சாதனங்களையோ இயக்கிவிட்டு, இனம் புரியாத நிலைகளில் செல்லும் நிலைகள் உண்டு.