ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2013

ஈஸ்வரன் - வெப்பம் - கடவுள் (ஞானகுருவின் தெளிவான விளக்கம்)

1. காருக்குள் இருக்கும் இஞ்சின் எப்படி இயங்குகின்றது?
இப்பொழுது நம் பூமி சுற்றிக் கொண்டிருக்கின்றது சுற்றும் பொழுது சூடாகின்றது சூடாகும் பொழுது, அதில் இருந்து இந்த வெப்ப அலைகள் உள்ளே வந்து, மற்ற அணுக்கள் பூமிக்குள் மோதி, அது எல்லாமே விளைகின்றது

வெளியிலிருந்து காற்றும் எடுத்துக்கொள்கின்றது சுற்றும் பொழுது சூடாகின்றது. இதைப்போல, நம் உயிர் இருந்த இடத்திலிருந்தே பல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது உயிர் துடித்துக்கொண்டே இருக்கப்படும் பொழுது, என்ன நடக்கின்றது?
காருக்குள் இருக்கும் இஞ்சின் என்ன செய்கின்றது?
அதற்குள் இருக்கும் பிஸ்டன், அது ஒன்றை இழுத்தவுடனே,
அது இழுத்து, முன்னும் பின்னுமாக அது அசைக்கப்படும் பொழுது
சக்கரத்தைச் சுற்றச் செய்கின்றது.

ஏனென்றால், உள்ளே காற்றைக் கொண்டுபோய்ச் செலுத்தியவுடன்,
ஒரு பக்கம் தள்ளுகின்றது,
ஒரு பக்கம் அமுக்குகின்றது.
2. தண்ணீர் இறைக்கும் பம்பு (PUMP) எப்படி வேலை செய்கின்றது?
தண்ணீர் அடிக்கும் பம்பை (Pump), இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? பம்பை நாம் கீழே அடிக்கின்றோம் அடித்தவுடனே காற்று என்ன செய்கின்றது?

தண்ணீரை ஊற்றி அதற்குள்ளே போனவுடனே, இது அடித்து இழுக்கப்போகும் பொழுது, கீழே ஆழத்தில் இருக்கின்ற தண்ணீரை இழுக்கின்றது. கீழே இருக்கின்ற தண்ணீரை, கை பம்பை வைத்து நாம் அழுத்தமாக்கினால், தண்ணீர் அது மேலே வருகின்றது.

அதே மாதிரி ஒரு மோட்டார் பம்பைச் சுற்றச் செய்கின்றோம். அது இழுக்கக்கூடிய பகுதியை அது என்ன செய்கிறார்கள்? இழுக்கும் பொழுது, வெளியில் தள்ளக்கூடிய பகுதியுடன் (Delivery) இணைத்தவுடன்,
ஆழமாகிணற்றிலிருந்து
தண்ணீரை இழுத்து, அது மேலே தள்ளுகின்றது.

இதைப்போலத்தான், நம் உயிர் என்ன செய்கின்றது? உயிரின் அந்த இயக்கத்துக்குப் பெயர் ஈஸ்வரா. ஆனால், அதற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. ஆகவே, ஈஸ்வரா என்று, மெய்ஞானிகள் உயிருக்குப் பெயர் வைக்கிறார்கள்.
நம் பூமி சுற்றும் பொழுது, சூடாகின்றது. நம் உயிர் இப்படி இயக்கப்படும்பொழுது அதற்குள் சூடாகின்றது.

அப்படிச் சூடாகும் பொழுது, இயக்கியவுடனே மோட்டார் எப்படித் தண்ணீரை இழுக்கின்றதோ, அதே மாதிரி வெளியில் இங்கிருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது அப்படி மோதும் பொழுதுதான், பூமி சுற்றுகின்றது.
மோட்டாரில் காந்தம் இருக்கின்றது.
இன்னொரு காந்தத்தை எதிர்நிலை வைத்துச் சுற்றும் பொழுதுதான்,
வெளியிலிக்கும் காந்தத்தை இழுக்கின்றது.
இந்த காந்த அலைகளை – “மின்சாரம்”
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தம் என்று சொல்கிறோம்.
3. பூமியின் நடு மையத்தில் உருவாகும் “வெப்பம்” தான், பூமிக்கு உயிர்
வெப்பமும், காந்தமும் உண்டாகக்கூடிய சக்தி. நாம் வெயில் என்று சொல்கின்றோமே, இதெல்லாம் அங்கே சூரியனிலிருந்து, மலை மலையாகக் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

ப்படிக் கொட்டுவது பவெளியில் படர்கின்றது. படர்ந்து வரும் பொழுது, நம் பூமி அங்கே போகும் பொழுது, இதில் மோதுகின்றது. இது மோதும் பொழுது  என்ன செய்கின்றது? வெப்பமாகின்றது.

அது வெப்பமான சக்தி கீழே வருகின்றது அது வேகமாக வீசும் பொழுது சூடாகின்றது. மற்றொன்றுடன் மோதும் பொழுது. சூடாகின்றது பூமியில் மோதும் பொழுது சூடாகின்றது. பூமி சுற்றும் பொழுது, அந்தச் சூடு என்ன செய்கின்றது?

எல்லாம் மத்தியில் அதற்குள் வெப்பமாகச் சேர்ந்துவிடும் இதே மாதிரி, பூமியின் நடு மையத்தில் இருக்கின்ற அந்த வெப்பம்தான், இத்தனை சக்தியையும் உருவாக்கச் செய்கின்றது 

காலையில் விழும் பனியைப் பாருங்கள்.
பனிகாலத்தில் பார்த்தோம் என்றால்,
பூமிக்கடியில் இருக்கும் தண்ணீர்
வெது வெது வெதுஎன்று இருக்கும்.
காரணம், கீழேருக்கக்கூடிய அந்தச் சூடுதான், அது உண்டாக்குகின்றது
அப்பொழுது அந்த வெப்பம்தான், பூமிக்கு உயிராகின்றது

அந்தச் சூடு இல்லையென்றால் இந்த பூமி விளையாது. அந்தச் சூட்டுக்கு பெயர்தான் பராசக்தி. தை திடமான பொருளாகப் பார்க்கும் பொழுது, சிவம் “சிவலிங்கம்என்று சொல்கிறார்கள். இதற்குப் பெயர் சீவலிங்கம்.