மகரிஷிகளின் அருள்சக்தியை எடுத்துக் கொண்டால், நமக்கு இடையூறு கொடுப்பதை
எல்லாம் வேண்டாமென்று தள்ளிவிட்டு, அங்கே (சப்தரிஷி மண்டலம்) போகலாம் என்று, நாம் இதை அரசாட்சியாகப்
பிடிக்க வேண்டும். இதைப்போன்ற நிலைகளில் நாம் வர வேண்டும்.
நாம் உயிரைப் பற்ற வேண்டும்.
அவன் நம்மை எங்கே அழைத்துச் செல்கின்றானோ, அங்கே செல்வோம் துயர்ப்படும் உணர்வின் நிலைகளுக்கு
நாம் அடிக்கடி சென்றால், அது அங்கேதான் அழைத்துச் செல்லும். நாம் வேதனைப்படுவோருடைய
நிலைகளை அடிக்கடி சிந்தித்தால், நமது உயிர் அங்கேதான் அழைத்துச் சென்று, அதனின் நிலைக்கேதான்
மாற்றும்.
ஆகவே, இதைப்போன்ற நிலைகளை
எல்லாம் விடுத்து, நாம் மனிதனின் வாழ்க்கையில், சிலபேர் இருந்தால் போதும். “அவர்கள் கேட்கவில்லையே”
என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அந்த வருத்தமே கூடாது.
நமக்குள் இருப்போர் ஒருவர்
தவறு செய்தாலும், அந்தத் தவறின் நிலையை,
“தவறு செய்கின்றானே,
இங்கே வந்து தவறு செய்கின்றானே”,
என்று எண்ண வேண்டாம்.
அந்தத் தவறிலிருந்து அவன் மீளவேண்டும் என்று நாம் எண்ணினால்,
அந்த தவறிலிருந்து
நாமும் மீள்வோம்.
அது இல்லாது, அவன் தவறு செய்கின்றான்
என்றால், அவன் வழிக்கே இங்கே கூட்டம் பெருகும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா!
இதைத்தான் நாம் பெருக்க முடியுமே
தவிர,
சாமியைத் தூக்கிக் குப்பையில்
போட்டுவிடுவீர்கள்.
ஆக, அவன் பெற வேண்டுமென்ற நிலைக்கே நாம் வர வேண்டும்.
இருப்பது குறைந்த காலம்.
அவர் தவறிலிருந்து விடுபட வேண்டுமென்றால், அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை, நமக்குள்
பருக வேண்டும். இதைப் பருகும் சந்தர்ப்பம்,
எத்தகைய தீமை வருகின்றதோ, தீமையிலிருந்து விடுபடும் எண்னம், மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பெற வேண்டும் என்று, நாம் எண்ண வேண்டும். இதை எண்ணினால், நாம் அங்கே செல்கின்றோம்.
ஆகவே, யாம் இதை, பலகாலம், பல இன்னல்களுக்கு மத்தியில்தான் அறிய முடிந்தது. உங்களுக்குள் ஏற்படும்
இன்னல்களில் இருந்து விடுபடுவதற்குத்தான், அந்தச் சக்தியைக் கொடுப்பது.
“இன்னல் எப்படித் தாக்குகின்றது.
“இன்னல் எப்படி, மனிதனைத் தீமையான செயலுக்கு மாற்றுகின்றது” என்று அறிந்த நிலைகளில்,
நல்லவர்களை, தீமையான செயல்களுக்கு அழைத்துச் செல்கின்றது. அந்தத் தீமையிலிருந்து நீங்கள்
விடுபட, மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்காதத்தான், இதைச் சொல்வது.
ஆகையினாலே, இங்கே, நீங்கள்
வந்த நிலைகள், உங்களுக்கு இந்த அருள் சக்தி கிடைக்கச் செய்தோம். அனாவசியமாகச் சொன்னது
என்று எண்ண வேண்டாம்.
மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையாக,
நீங்கள் எந்த விருப்பத்திற்கு வந்தீர்களோ,
அந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு
உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
மீண்டும் நினைவுபடுத்தினால்
எல்லாமே கிடைக்கும் “ஓம் ஈஸ்வரா குருதேவா!”