வானுலக ஆற்றலையும், புவியின் செயலாக்கங்களையும், முதன்முதலாகக்
கண்டுணர்ந்தவர் அகஸ்தியர். ஏனெனில், அவர்தம் தாய் தந்தை உடலில் விளைந்த சத்து அவருக்குள் இயங்கி, தாவர இனங்களின் வளர்ச்சியையும், தாவர இனங்களில் செயல் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் அணுக்களின் தன்மையும் தெளிவாக
அவரால் அறிய முடிந்தது.
கற்று அல்ல, உணர்வின் இயக்கம், சந்தர்ப்பத்தால் நுகர்ந்த
உணர்ச்சியின் தன்மை கொண்டு, அது அறிவின் தன்மையாக அகஸ்தியரிடத்தில் விளைந்தது.
அனைத்தையும் அறிந்துணர்ந்த அகஸ்தியர்,
துருவத்தை எல்லையாக வைத்து,
துருவத்தை உற்று நோக்கி,
அதனின்று வருவதைத்
தமக்குள் உருவாக்கி
ஒளியின்
கற்றைகளாக மாற்றியமைத்தார்.
மின்மினிப் பூச்சி,
தான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப, அதனுடைய அடிப்பகுதியில் ஒளிக்கற்றைகள் வெளிப்படும். அதைப்போன்று, அகஸ்தியர் துருவப்பகுதியில் வரும் சத்தினையும், மின்பொறிகள் ஒன்றுடன்
ஒன்று மோதப்படும்பொழுது உருவாகும் மின் கற்றைகளை நுகர்ந்து, அந்தப் பொறியின் உணர்வுகளை தமக்குள்
விளையச் செய்தார்.
இதுபோன்றுதான், அகஸ்தியர்
நுகர்ந்த உணர்வுகள், அவருடைய உடலில் உள்ள அணுக்களில் கலந்து, ஒளிக்கற்றைகளாக மாறியது.
இதன் தொடர் கொண்டு, அவரிடத்தில் இதனின் பெருக்கம் ஆகும்போதுதான், உடல் பெறும் உணர்வை ஒளியாக மாற்றி அமைத்தார் அகஸ்தியர்.