குருநாதர் காட்டுக்குள்ளே செல்லும்போது, சில இடங்களிலே கூட்டிக் கொண்டு போவார். “இங்கே படுடா” என்பார்.
இந்தப் பக்கம் படுத்தால், கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலே, காட்டிலே இருந்து தவம் பண்ணி, தன்னைப் பெரிய சித்தானக்கிக் கொள்ள வேண்டும் என்று, தவத்திற்கு வந்தவர்கள், இந்த இடத்தில், பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.
அவர்கள், இந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள். தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அந்த எல்லை வரையிலும் கொசுக்கள், பாம்புகள் மற்றவை வருவதில்லை.
அங்கே, சுத்தமான மனிதன் போனால்தான், போக முடியும். தவறான ஆசையுடன் போனால், அவனைத் தூக்கி எறிந்துவிடும். நான் போனேன்.
“அங்கே உட்காருடா” என்றார்.
தூக்கி எறியப்பட்டேன். “என்ன சாமி பேயோ, பிசாசோ இருக்கு போலிருக்கு” என்றேன்.
பேயுமில்லை, பிசாசுமில்லை அந்தக் காலத்தில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால், விஷத்தன்மை பரவிவிடும் என்று, இந்த உணர்வுகள், உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.
“நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்” என்றார். “அப்படிப் போய் உட்கார்” என்றார்.
போய் உட்கார்ந்தால், கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.
அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ, அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது. இதைப்போலத்தான், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, இந்த தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது, இங்கே பதிவாகின்றது.
இதைப்போல, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, உங்கள் வீட்டில் நன்றாகப் பதிவு செய்து விட்டீர்கள் என்றால், விஷத்தன்மைகளை எல்லாம் போக்கும் நிலைகள் வரும்.