அன்றைக்கு மெய்ஞானிகள், அவர்கள் சொன்னதை விடுத்து,
இறந்தவர்களின் சாம்பலைக் கொண்டு போய், கங்கையில் காசைக் கொடுத்து கரைத்தால், அவர்கள்
செய்த பாவமெல்லாம் தண்ணீருடன் கலந்து, கடலில் போய் கலந்துவிட்டால், பாவமெல்லாம் போய்விடும்
என்கிறார்கள்.
சாம்பலைக் கொண்டு
கரைத்துவிட்டால் எல்லாம் போய்விடுமா? இந்த உடல் அழிந்தபின், உயிராத்மாவில் எல்லாம்
போய்ச் சேர்ந்து விடுகின்றது. அதில் சேர்ந்த அழுக்கை, எதிலே கொண்டு துடைப்பது?
நாம் எந்த மதமானாலும் சரி, நாம் பிறப்பதிலிருந்து இறப்பது
வரையிலும்
பாலூட்டுவதிலிருந்து, சாகும் வரையிலும்,
எல்லா மதத்திலும், மதத்தின் அடிப்படையில்தான்,
மந்திரத்தில் சிக்க வைத்து,
அதன் வழியில்தான், நடந்திருக்கின்றோம்.
கடைசியில் போகும் பொழுது, அதற்கான குருவிடம் ஒப்படைக்கின்றோம்.
எமது அப்பாவை, “மந்திரத்தில் மோட்சத்திற்கு அனுப்பு” என்கிறோம். மந்திரத்தினால் அவர்கள்
பிடித்து வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த மந்திரம் சொல்லி ஜெபிப்பவர்கள் எல்லாம் ஆற்றல்மிக்கவர்கள்
என்றும், “ஆகா.., என் அப்பாவை மோட்சத்திற்கு அனுப்பினார்” என்கிறோம். அவர்களிடம் சென்றால்,
இந்த மனிதனுடைய உணர்வை வைத்து, அந்த மந்திரத்தின் நிலைகளில் நல்ல காரியம், கெட்ட காரியம்
செய்வார்கள்.
இப்படித்தான், அந்த அரசன் காட்டிய நிலைகளே தவிர, நம்மைப்
பிடியில் சிக்கவைத்து, காசையும் கொடுத்துவிட்டு, அம்மா, அப்பாவை மீண்டும் இருளில் கொண்டு சிக்க வைக்கின்றோம்.
அடுத்து அவனுடைய வேலைகளுக்கு, நம்மைக் கொண்டு ஒப்படைப்பதற்குத்தான்,
அரசன் மதத்தின் அடிப்படையில் எந்த மதத்தை சிருஷ்டித்தானோ, அந்த உணர்விலிருந்து இன்றும்
மீளமுடியாத நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இதையெல்லாம் மனதில் வைத்து, ஒவ்வொருவரும் நம் தாய் தந்தையை,
தெய்வமாகக் கருதி, நமக்குள் உயிரை ஈசனாக மதித்து, அந்த மெய்ஞானிகள் காட்டிய வழியில்
முன்னோர்களை விண் செலுத்தப்பழக வேண்டும்.
யாம் சொன்ன முறைப்படி கடைப்பிடித்து, அந்த ஆத்ம சுத்தி
செய்து அதை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுத்த ஆத்ம
சுத்தி என்ற ஆயுதத்தை, சரியாகப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
அதே சமயம் நாம் ஐக்கியப்படுத்தி, ஒரே உணர்வுடன் இயக்கப்படும்
நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தோருடைய நிலைகளை விண் செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறு விண்
செல்லும் முயற்சியின் தன்மைதான், “பௌர்ணமி தியானம்”.
ஆகையினாலே, இந்த எண்ணத்தினுடைய தன்மையை மேலோங்கச் செய்து,
இந்த உணர்ச்சியின் தன்மையை உங்களுக்குள் விண்ணிலே செலுத்தச் செய்து, நம்முடைய மூதாதையர்களை
விண் செலுத்தச் செய்வதும், அந்த உணர்வின் நிலைகளை சுலப நிலைகளில் பெறச் செய்வதற்குத்தான்
இந்த பௌர்ணமி தியானம்.