ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2013

"ஓம்.." - நம் உயிர் எப்படி இயங்குகின்றது? இயக்குகின்றது...?

1. மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகின்றது?
நாம் நுகரும் உணர்வுகள் நம் உயிருக்குள் பட்டவுடனே, "ஓம்" அது பிரணவம்  அதாவது, ஜீவன் பெறுகின்றது

அப்பொழுது நம் உயிர் என்ன செய்கின்றது? தை இயக்குகின்றது. இப்பொழுது நம் உயிருக்கு,  
இந்த வெப்பத்தை உருவாக்கக்கூடிய சக்தி எப்படிக் கிடைக்கின்றது?
விஞ்ஞானம் எப்படி இருக்கின்றது?
அன்றைமெய்ஞானம் எப்படி இருக்கின்றது?
இந்த இயற்கை எப்படி விளைகின்றது? என்று,
தையெல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்றால், மின்சாரத்தை உருவாக்க ஒரு காந்தக் கட்டையை வைத்து, அது சுற்றுகின்றார்கள். தண்ணீரை விட்டு சுற்ற வைக்கிறார்கள். அப்பொழுது, இதில் இருக்கக்கூடியது என்ன செய்கின்றது?

எது ஒன்று, இயந்திரத்துடன் தை வைத்திருந்தாலும், உள்ளே இருக்கின்ற கட்டையில், காந்தத்தை வைத்திருப்பார்கள். அடுத்து, இடைவெளியில் சந்து விட்டு இருப்பார்கள்தைச் சுற்றப்படப்போகும் பொழுது, இந்தப் பக்கம் கொஞ்சம் தாண்டிப் போனால், அந்தப் பக்கம் அதிகமாகின்றது.

அது வெடுக்” என்று அந்தப் பக்கம் இழுக்கும்.
இது கொஞ்சம் கரைந்ததென்றால்,
அந்தச் சதுரம் (magnet) என்ன செய்கின்றது? அது அதிகமாகின்றது.
அந்தக் காந்தம் என்ன செய்கின்றது? அதில் இருப்பது பாடியுடன் (BODY) கலந்திருப்பது இழுத்துக் கொள்கின்றது

அப்படி விசுக்” என்று இழுத்தவுடனே, அந்த இடைவெளியானது இதனுடன் உராயப்போகும் பொழுது, இந்த காந்தத்தில், வெளியிலிருக்கக் கூடியதை இழுக்கின்றது.

காந்தத்தை, இந்தக் காந்தம் இங்கே விசுக் விசுக்” என்று இழுத்தவுடனே, அதில் வைத்திருக்கக்கூடிய வயரை, பூமியோடு சேர்த்து, “எர்த்வைத்து இழுத்தவுடனே வந்துவிடுகின்றது. அது இழுத்தவுடனே, இப்பொழுது கம்பியில் மின்சாரம் (CURRENT) வருகின்றது
நெகட்டிவ் பாசிட்டிவ் என்று வைத்தவுடனே, இரண்டும் உராய்ந்தவுடன் அததற்குத் தகுந்த மாதிரி விளக்கு எரிகின்றது, மோட்டார் சுற்றுகின்றது. அங்கே சுற்றச் செய்கிறார்கள் அதே இது, மறுபடியும் கம்பி வழி கூடி வருகின்றது. அதை நாம் சுற்றச் செய்கின்றோம்

இது செயற்கை. விஞ்ஞானிகள் இயற்கையில் விளைந்ததை பல பொருளாகச் சேர்த்து, செயற்கையில் செய்திருக்கிறார்கள். அப்பொழுது மின்சாரம் உற்பத்தியாகின்றது.
2. நம் உயிர் எப்படி இயங்குகின்றது? இயக்குகின்றது? 
இதைப்போல, நம் உயிருக்குள் வெப்பமும், ஒரு கதிரியக்கச் சக்தியும் இரண்டும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டேருக்கின்றது அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.

இது அதைக் கொல்ல ஆரம்பிக்கிறது. அது இதைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறது. இந்தப் போர் முறையினால்தான், அங்கே வெப்பம் ஏற்படுகிறது.

அப்பொழுது, வெப்ப காந்தமும், கதிரியக்கச்சக்தியும் அதற்குள் சேர்த்து, அந்தத் துடிப்பின் நிலை ஏற்படுகின்றது அந்தத் துடிப்புக்குள் ஏற்படக்கூடிய வெப்பம், துடிக்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய காந்தம் என்ன செய்கின்றது?

மற்ற ஏதாவது ஒரு பொருள் இருந்ததென்றால் இழுக்கின்றது  அதில் சேர்ந்தவுடனே, அந்த வெப்பத்துக்குள் பட்டவுடனே,
இந்தக் காந்தம், “லட்சுமி
இப்படி இயக்கக்கூடியது, “ஈஸ்வரன்
அது உற்பத்தி செய்கின்றது, இயங்குகின்றது

அந்த இயக்கத்துக்குள் ஏற்படுகிற வெப்பம், “விஷ்ணு”, இயக்கப்படும் பொழுது ஈர்க்கக்கூடிய ஈர்ப்பு லட்சுமி. ஈர்த்த அந்த உணர்வுகள் வெப்பத்துடன் இணைந்தவுடனே, அந்தப் பொருளாக மாறுகின்றது.

பராசக்தி, இதில் வெப்பமாகும் பொழுது பராசக்திகின்றது அதேசமயம், அதில் இருந்து வரக்கூடிய மணம், என்ன மணமோ அதை எடுத்துக் கொள்கின்றது.  நாம் வேப்ப மரத்தின் மணத்தைச் சுவாசித்தோம் என்றால், அந்த வாசனை வருகின்றது
3. உயிர், நாம் சுவாசிப்பதை எப்படி உடலாக உருவாக்குகின்றது?
உதாரணமாக ஒரு பையன் வேதனைப்படுகின்றான்.
தைச் சுவாசித்து, உயிரில் பட்டவுடனே,
அவன் உடலில் விளைய வைத்து,
என்னுடன் அது கலந்து,
வெளியில் காந்தத்தை எதை இழுத்தானோ,
அது இழுத்து என் உயிரில் ட்டவுடனே,
என் உடலில் வந்து ஜீவன் பெறுகின்றது
எனக்கும் உடலில் வேதனை வருகின்ற மாதிரி,
தே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அடிபட்ட அவன் உடலில் வேதனை வரும் பொழுது, “..” என்று அலறி அவனிடமிருந்து மூச்சு வெளிவருகின்றது. அப்பொழுது, அந்தக் காந்த அலைகள் அதை எடுத்துக் கொண்டதை நான் பார்த்தவுடனே, எனக்குள்ளும் அந்த வேதனையாகி, அவனைக் காப்பாற்றச் சொல்லுகின்றது

ப்பொழுது, அந்தப் பாச உணர்வுடன் காப்பாற்றுகின்ற எண்ணம் வரும் பொழுது, இந்தக் குணம் எனக்குள் பட்டவுடனே பிரணவம், “ஓம்”. எனக்குள் காப்பாற்றுகின்ற சக்தி ஏற்படுகின்றது.

அப்பொழுது “ம்”. தாவது நாம் ஒரு சரக்கைப் போட்டு வேக வைக்கும் பொழுது, அதில் இருக்கின்ற சத்தை என்ன செய்கின்றது? உறிஞ்சி தண்ணீருடன் கலந்துவிடுகின்றது. நாம் வேக வைத்தால் என்ன செய்கின்றது? ஒரு பொருளைப் போட்டவுடனே, அது கரைந்து மற்றதுடன் கலக்கின்றது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது இதேமாதிரி, தில் மோதியவுடனே, அவன் வேதனைப்பட்டது எந்த சக்தியை எடுத்து அதனுடன் கலந்தானோ, அதைச் சுவாசித்து என் உயிரிலே பட்டவுடனே, அந்த உணர்வுகள் என் உயிரில் பட்டு மோதியவுடனேஅது பிரிந்து விடுகின்றது
அவன் உடலில் வேதனை எது பட்டதோ,
அந்த  வேதனையான சத்து
என்னிடம் உமிழ்நீராக மாறி,
என் உடலில் சேர்ந்து விடுகின்றது, “இது ஓம்

அப்பொழுது, ன் கண்ணுக்குப் புலப்படாத இந்த சக்தி என் உயிரிலே பட்டவுடனே ஜீவனாகி, அது என் உடலுடன் சேர்த்து இணையும் பொழுது, ஓம் நமச்சிவாய நமதாக, எனதாக மாறுகின்றது.

இப்படித்தான் நம் உயிர் இயங்கி, நாம் சுவாசிப்பது அனைத்தையுமே பிரணவமாக்கி, நமக்குள் ஜீவன் பெறச் செய்து, நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மெய்ஞானிகள் அவர்கள் தன்னைத்தான் எப்படி அறிந்தார்களோ, அதை நாமும் அறிய முடியும். எமது அருளாசிகள்.