தாய் தந்தை தனக்குக் குழந்தை வேண்டும், தன் இனம் பெருக
வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி, அந்த எண்ணத்தின் உணர்வின் தன்மையிலேதான் கருவாகி
உருவாகியபின், அவர்கள் நம்மை ஈன்றார்கள்.
அதன்பின், நல்லது
கெட்டது என்று உலகத்தையும் அறிவித்து, நமக்கு குருவாகவும் நின்றவர்கள் “தாய் தந்தைதான்”.
ஆக, அவர்கள் நம்மை ஈன்று, உலகை அறிவிப்பதற்கும், நல்வழி
காட்டும் நல் நிலைகளில் இரவும் பகலும், எத்தனையோ வேதனைகள்பட்டு, நமக்காக வேண்டி துன்பப்பட்டிருப்பார்கள்.
முதலிலே கல்யாணம்
பண்ணியபின், ஆரம்பத்திலே அவர்களுக்கு மகிழ்ச்சி. குழந்தைகள்
வேண்டுமென்று ஏங்கிப் பெற்றபின், குழந்தைச் செல்வங்களுடன் தவழ்ந்து நிற்கின்றோம் என்று,
அந்த மகிழ்ச்சியினுடைய நிலைகளில் நம்மை வளர்க்கின்றனர்.
அப்படி வளர்த்துவரப்படும் பொழுது,
தாயின் துடிப்பின் நிலையைப் பார்க்கலாம்.
இரவும் பகலும் நம்மை எண்ணி வேதனை கொண்டு,
தனக்குள் எடுத்து விளைய வைத்து,
தனக்குள் விஷத்தைச்
சேர்த்துக் கொள்கின்றார்கள்
(வேதனை என்பது
விஷம்).
இதைப் போன்று, தாய் தன் பாசத்தால் எடுத்துக் கொண்ட விஷங்கள்
சிறுகச் சிறுகச் சேர்ந்து வளர்ந்து அது மனிதனாகப் பிறந்த நிலைகளிலிருந்து தனக்காக வேண்டி,
அது நஞ்சைக் கூட்டிக் கொள்கின்றது.
அப்படி மாறுபடும்
நிலைகளிலிருந்து மீட்டுத்தருவது “தன் குழந்தையே”. அவ்வாறு
மீட்டுத் தருவதற்காக வேண்டித்தான், தாய் தந்தையை உயர்த்தும் நிலைகளை, அன்று மெய்ஞானிகள்
சொன்னது
ஆனால், தாய் தந்தையரை வணங்கும் நிலை இன்று இல்லை. கடந்த
காலங்களில் இருந்தாலும் இன்று சீராடும், நீராடும் பூமியைப் பற்றித்தான் பேசுகின்றார்கள்.
சீராட்டும் தாலாட்டும் பாட்டுகளும், மெய்ஞானத்தினுடைய
நிலை அல்லாது, இந்த பூமிதான் தாயாகிப் போய்விட்டது. ஈன்ற தாயினுடைய நிலைகள்
எங்கேயோ போய்விட்டது. மெய்ஞானிகளினுடைய நிலைகளை “எல்லாமே மறைத்து விட்டார்கள்”.
இதைப்போன்ற நிலைகளிலிருந்து மீண்டு,
தாய் தந்தையின் உயிரை, கடவுளாக நீங்கள் மதித்து,
தாயின் கண்ணை, கண்ணணாக மதித்து,
தாயின் உடலை, எடுத்துக்கொண்ட வினைக்கு விநாயகனாக மதித்து,
தாயின் உடலை, சிவனாக மதியுங்கள்.
தாயின் எண்ணம் கொண்டு, நமக்கு வழிகாட்டிய நிலைகள் ஆறாவது
அறிவின் தன்மையை, முருகனாகக் கருதுங்கள் உருவாக்கிய நிலையும், நமக்கு நெளிவு சுளிவுகளை
அந்த உணர்வின் உணர்ச்சியாலே நமக்கு வழிகாட்டி, சதா நமக்கு உணர்த்திய நிலைகள் ஆறாவது
அறிவு.
ஆகையினாலே, தாயை ஆறாவது அறிவை முருகனாகவும் மதித்து, பேரண்டமும்
பேருலகாகவும், இதற்குள் சிருஷ்டித்து, நமக்கு சிருஷ்டித்துத் தந்தது தாய் என்றும்,
அதன் வழிகளிலே நாம் உணர்ச்சியினுடைய நிலைகளில் நாம் தெரிந்து கொண்டபின், தாய் தந்தையை விண் செலுத்துவதே
மெய்.
நாம் எப்படி குழந்தைப் பருவத்திலே நம்மை வளர்த்தார்களோ,
அதைப் போல அவர்கள் இன்று இந்த உடலைவிட்டுச் சென்றபின், தன் இனமான நிலைகள் அந்த மெய் ஒளிக்கு அவர்களை
நாம் அனுப்பினால், அந்தத் தாயின் பாசம், நம்மை மெய்வழிக்கு இட்டுச் செல்லும்.
இல்லையென்றால், நாம் பாசத்தின் நிலைகள் கொண்டு, நம் தாய்
தந்தை இருளில் சூழ்ந்து, அவர்கள் வேதனையினுடைய நிலைகள் கொண்டு, வேதனை விஷத்தின் தன்மையை
உடலுக்குள் சேர்த்துக் கொண்டபின், இருண்ட உலகத்தைத்தான் அது சிருஷ்டித்து, இருண்ட உலகத்திற்குத்தான்
அது செல்கின்றது.
இந்த மார்க்கத்தை நாம் பின்பற்றி, இது ஏதோ சுலபமாகக் கிடைக்கின்றது
என்ற நிலைகளில் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள்.
ஆக, உங்களுக்குள் கிடைக்கும் நிலையை நமது குருநாதர் எமக்கு
சுலப நிலைகளில்தான் எமக்குக் கொடுத்தார். யாம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை. பனிரெண்டு
வருடம் கஷ்டப்பட்டு, அனுபவத்தின் மூலம் கண்டுகொண்டேன்.
அந்த அனுபவத்தின் நிலைகளைத்தான், யாம் உங்களுக்குச் சொல்லுகின்றோம்.
இந்த அனுபவத்தின் மூலம் யாம் பெற்ற, அந்த உண்மையின் நிலையை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து,
உங்கள் வாழ்க்கையில்
வரக்கூடிய துன்பத்தை,
நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.
எமது அருளாசிகள்.