ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2013

குருவினுடைய வேலை என்ன?

எந்த உடலில் எந்த நிலையில், இருந்தாலும் இந்த உயிர் எதை எண்ணுகிறதோ, அந்த உடலைக் காக்கும் நிலைகளில், அது தாயாக வருகின்றது.

அதைத் தன் சேயாக இணைத்துக் கொள்வதும், தாயாக நின்று காத்துக் கொள்வதும், என்கிற நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான், உபதேசிக்கும் இந்த விளக்கமெல்லாம் முன்பு சொல்லவில்லை, கற்றுணர்ந்த உணர்வுகள் இது,

இந்த உணர்வின் இயக்கங்கள் என்ன என்கிற வகையில், உங்களுக்கு இந்த உயிரின் இயக்கமும், அது தாய் என்ற நிலையும், அது எப்படிச் செயல்படுகின்றதென்ற நிலையை, நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது, என்ற நிலையில் உபதேசிக்கிறோம்.

குருவின் வேலை என்ன என்று கேட்டீர்களானால், அந்தக் காலத்தை ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு ந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன், இருப்பார்கள். அந்த உணர்வுக்குத் தக்கவாறு, பதிவு செய்கிறோம். அதற்குத்தான் இந்த நிலைகளில் உபதேசிக்கிறோம்.

யாம் உங்களிடம் சாதாரண நிலைகளில்தான் இருக்கிறோம். காரணம், உங்களுடன் ஒன்றியிருந்தால்தான் நீங்கள் இதைக் கேட்பீர்கள்.

யாம் கொஞ்சம் ஜபர்தஸ்து பண்ணிக் கொண்டிருந்தால், பக்கத்தில் வரப் பயம் வரும். சொல்வதன் உண்மை நிலைகளை, இதுவே தடைப்படுத்திவிடும். உங்களை அறியவிடாமல் செய்யும்.
எம்மை உயர்த்திக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைத் தாழ்த்திக் கொண்டேதான் இருப்பீர்கள்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா?
ஆகையினாலேதான், உங்களை அணுகி வருகிறோம்.

நமது குருநாதர் பித்தனைப் போல இருந்தார். இப்படி இருக்கிறாரே, என்ன சொல்லப் போகிறார்? என்று யாம் அவரை அறிய ஆரம்பிக்கின்றோம்.

இதைப் போலத்தான், எம்மை அணுகி வரப்படும்போது, அந்தப் பற்றே வரும். எமது மேலே பற்று வரவில்லை என்று சொன்னால், இதை எடுக்க முடியாது. உண்மையான பற்று அங்கே வரவேண்டும்.
         
எனவே, உண்மையான பற்றை உங்களிடம் ஏற்படுத்தச் செய்கிறோம். ஆக, என்னைப் போற்ற வேண்டுமென்றால், ஜபர்தஸ்துதான் வரும்.

உண்மையான இயக்கம், எதன் வழியில் எதைப் பெற்றது? என்ற நிலையை, நாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால், நாளை “இந்தச் சாமி இப்படி இருந்தார்”, “அந்தச் சாமி இப்படி இருந்தார்” என்று எத்தனையோ பேர் சொல்வார்கள்.

இது எந்தெந்த வழிகள்? என்ற ஞானம் உங்களுக்கு வரும். ஆக, இந்த ஞானம் வரத்தொடங்கி விட்டாலே, மெய்ஞானம் உங்களுக்குள் தன்னாலே வளரும்.

நம்மில் வளர்ப்பவர்கள் எல்லோரும் எந்தக் காவியத்தைப் படைத்தாலும், அதைப் பிளந்து, அதில் உண்மையை உணரும் தன்மையே வரும். இது வர வேண்டும். இல்லையென்றால், அந்த மெய்ஞானம் நமக்குள் வராது.

ஆக, ஒருவனுடைய நிலைகளில் தீமை விளைகிறதென்றால், அது “மெய்” அந்தத் தீமையின் உணர்வுகளை நுகர்ந்ததனால், தீமையின் செயலாக இயக்குகின்றது. 

ஆனால், தீமை அகன்றால், அவனுக்குள் எதை இணைக்கின்றோமோ, அந்தத் தீமையை அகற்றியபின், எதை இணைக்கின்றோமோ, அது இயக்குகின்றது. இது மெய். இந்த மெய்யை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.