1. தியானம் செய்பவர்கள்
சாமியாராகப் போய்விடுவார்களா?
ஆண்கள்
தியானத்துக்குப் போய்க்கொண்டிருந்தால், பக்கத்து வீட்டுப் பெண்கள் பிடிக்காதவர்கள் இருந்தார்களென்றால், “தியானம்
இருந்தார்களென்றால் என்ன செய்வது? நீ சாமியாராகப் போய்விடுவாய் பார்த்துக்கொள்”, என்று சொல்வார்கள்.
ஆனால், பெண்கள் உட்கார்ந்து தியானம் செய்தார்கள்
என்று சொன்னால், ஆண்கள் என்ன செய்வார்கள்?
“பெண், நீ இந்த அளவுக்குத் தியானம் இருப்பதா?
வீடு உருப்படுமா?” என்று கேட்பார்கள்.
ஆக, குழந்தைகள் போய், “சாமி ஏதோ நல்லது
சொல்கிறார் என்று கேட்டு’, அது மனதிற்கு தகுந்த மாதிரி உட்கார்ந்து,
புத்தகத்திற்கு முன்னாடி உட்கார்ந்தால்,
“இந்த வயதிலேயே உனக்கு என்ன தியானம்?
நீ
சாமியாராகப் போய்விடுவாய்,
நீ
உட்கார்ந்தால் உதைப்பேன்”
என்கின்ற
நிலையில் தான் இருக்கின்றது.
அந்த
அளவுக்குப் பக்குவம் பெற்றிருக்கிறோம்.
2. யாம் தியானம் செய்யச் சொல்வதன்
காரணம் என்ன?
நல்ல
ஒழுக்கத்தை நாம் எடுக்க வேண்டும்.
நமக்குள்ளே
நல்லதைச் சேர்க்க வேண்டும்
நாம்
நல்லதைப் பேச வேண்டும்
நல்லதைப் பேசுவதற்குண்டான சக்தி வேண்டும்
இதற்குத்தான், யாம் இதைச்சொல்கிறோம்.
தியானம் என்றால் என்னமோ பெரிய மலை
என்று எண்ணுகிறோம்.
நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான்
அது.
திரும்பத் திரும்ப நினைத்து,
அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.
அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு, குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக்
கொடுத்தார். அந்தச் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.
அப்படி யாம் வளர்த்த சக்தியை,
சொல்லாலே, பேச்சாலே, இந்த உணர்வாலே
கொடுத்து,
உங்களுக்குள், நீங்களும் வளர்த்துக் கொள்ள
வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.
யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
தெரிந்து கொண்ட நிலையை, மற்றவர்களுக்குச் சொல்லிக்
கொடுங்கள்.
வாத்தியார் பாடத்தைச் சொல்லிக்
கொடுத்து, இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும்
என்று சொல்லிக் கொடுத்ததை, மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம்.
இதைப் போலத்தான், இந்த தியானம் என்பதின் நிலைகள்.