ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2013

குருநாதரை எந்த எண்ணத்துடன் நாம் அணுக வேண்டும்?

1. பல பேரின் வேதனை, கஷ்டங்களைக் கேட்டால் என்னவாகும்?
இப்பொழுது, உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பேரின் துயரை நீங்கள் கேட்கின்றீர்கள் அவர்கள் சொல்லும் வேதனை, கஷ்டங்கள், உங்களிலே இணைந்து விடுகின்றது.

இதைப்போன்று, ஒரு ஆற்றிலே நல்ல தண்ணீர் போகிறதென்றால்,
அந்த ஆற்றுக்கு மீறிய நிலைகளில் சாக்கடை கலந்தால் என்னாகும்?
அதில் அந்தச் சாக்கடை மணம் தான் வீசும்.

ஆற்றைப்போல, ஒரு வாய்க்காலில் ஒரு வீட்டின் கழிவுநீர் சென்றால், அந்த வாய்க்காலின் நீரே கெட்டுவிடுகின்றது. அதைப்போல பெரும் வெள்ளமாகச் சென்றாலும், அதிலே பல ஊர்களில் இருந்து வரும் சாக்கடைகள் சேர்க்கப்படும் போது, அது என்னவாகும்? அந்தச் சாக்கடையின் நாற்றமே, அந்த ஆற்றில் கலந்துவிடும்.

ஆகவே, மெய் ஞானியான மகரிஷி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள்சக்தியை, எமக்குள் சதா எடுத்துக்கொண்டாலும், எம்மிடம் வருவோர் அனைவரும் என் கஷ்டம், என் துன்பம்”, என்கின்ற வகையில் அடிக்கடி அவர்கள் எம்மிடம் சொல்லி, அந்த ஆறாக ஓடும் நிலைகள் கொண்டு இதை இணைத்தால் அது என்னவாகும்? இதை யாம் பிளப்பதற்கு, எத்தனை கஷ்டப்படவேண்டும்?

சாமி எனக்கு நல்லதாகி விட்டது என்று ஒருர் சொன்னால் போதும். அங்கிருந்து வந்தவுடனே, கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே என்று அழுவார்கள்.

யாம் திரும்பித் திரும்பி, நல்லாகிப்போகும் என்று சொன்னாலும் கூட, “எங்கெங்க நல்லதாகின்றது? என்றுதான் சொல்கிறார்கள். ஆக அந்த நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

ஆக இதைப்போன்று யாம் எதைச்சொன்னாலும் அந்த உணர்வு முன்னணியில் விளைந்துவிட்டால், இந்த உணர்வுகள் மாறிவிடும்.
2. குருநாதரை எந்த எண்ணத்துடன் நாம் அணுக வேண்டும்?
ஆகையினால்தான் யாம் சொல்லுகின்றோம். நீங்கள் யாரிடத்தில் சொன்னாலும், நீங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும். உங்களின் உணர்வின் தன்மை கேட்டாலும், அவர்களிடம் நீங்கள் எவ்வாறு குருவை அணுக வேண்டும்? அது எப்படி என்ற நிலைகளைச் சொல்லவேண்டும்.

குடும்பத்தில் சிரமங்கள் எதுவாக இருப்பினும், அந்தச் சிரமங்கள் எல்லாம் இதுவெல்லாம்,
இன்னது என்னை இயக்குகின்றது.
இதிலிருந்து நாங்கள் மீள வேண்டும்,
குரு அருள் வேண்டும்,
மகரிஷிகளின் அருள் வேண்டும்,
நாங்கள் பொருள்காண வேண்டும்,
ப்படி வேண்டும் என்று வேண்டிக் கேட்க வேண்டும்.
3. குருநாதர் எம்மை அடித்து, அவருக்குள் இருக்கக் கூடிய உணர்வை உணர வைத்தார்
ஒவ்வொரு நொடியிலேயும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் இதைப்போலத்தான் எனக்கு உபதேசித்தார். உணர்ந்றியச் செய்தார்.
ஒவ்வொரு காலத்திலேயும் என்னை அடிப்பார்.
சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்தும்படி உணர்த்துவார்.
அவருக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை உணர வைப்பார்.

தையேதான், யாம் உங்களை அடிப்பதில்லை. சில நேரங்களில், நீங்கள் தவறு செய்வதை யாம் கண்டுணர்ந்தபின் இந்த உணர்வை நீக்க, அதற்கு அதிர்வின் நிலைகள் ஊட்டி, அருள்ஞானி உணர்வுகளை நீங்கள் பெறவேண்டும் என்றுதான், உங்களிடத்தில் நான் கோபிப்பது.

ஆகவே, அருள் உணர்வின் தன்மை பதிந்து, அறியாத இருளைப் பிளந்திடல் வேண்டும். இது நினைவுக்கு வர வேண்டும் என்றுதான், குரு என்னை அடித்தார்.

ஒரு சொல்லால், உங்களில் உள்ள தீமைகளை அது பிளக்கும்படிதான் சொல்லின் வாக்கினைக் கடுமையாகச் சொல்லுவேன். தை நீங்கள் வேறுவிதமாக, அது வாழ்க்கையின் நிலைகள் தவறாக எடுத்துக்கொண்டால், உங்களுடைய பிழைகள்தான்.

சந்தர்ப்பத்தால், உங்கள் அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான், யாம் இதைச் செய்கின்றோமே தவிர, இதனால் பல நிலைகள் உண்டு.