இப்பொழுது, செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு, ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு உரங்கள் உண்டு. இதைப்போலத்தான், நாம் இங்கே
இருப்போர் அனைவரும், பல கோடித் தாவர இனங்களின்
சத்தை உணவாக உட்கொண்டு, அந்த உணர்வின் சத்தே உடலானது.
ஜீவ அணுக்களாக மாற்றியது, அதனின் மலம் கொண்டு நாம்
சரீரமானவர்கள்
ஆகவேதான்
இதைப்போன்ற உணர்வுகளில், வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு.
வாடிய உணர்வுகள் பலவும் உண்டு அருள்ஞானியின் உணர்வுகளை நினைவுகொண்டு, நிலைகொண்டு,
இதனுடன்
ஒன்றுடன் ஒன்று இணைத்து, இணைத்து,
இணைத்திடும்
உணர்வின் தன்மை கொண்டு,
வாடிய பயிரை நீக்கி,
அருள் ஞானிகளின் உணர்வுகளை வளர்க்கச்
செய்கின்றோம்.
இன்று
விவசாய நிலைகளில் (AGRICULTURE), பல அணுக்களின் வீரிய உணர்வின் சத்துகொண்ட
உணர்வை இணைத்து, புதுப் புது வித்துக்களை
உருவாக்குகின்றனர்.
இதைப்போலத்தான், அருள்ஞானியின் உணர்வின் தன்மைகளையும், மகரிஷிகள்
உணர்த்திய காட்டிய நிலைகளையும், மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணைகொண்டு, எளிதில் பெறலாம்.
ஏனென்றால்,
பேரண்டத்தின் நிலைகளை அறிந்து,
அந்த
உணர்வின் தன்மையை நுகர்ந்து,
உணர்வின்
நிலைகள் தீமைகளைப் பிளந்து,
தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தன்னுள் விளைய வைத்து,
விளைந்த
உணர்வு கொண்டு
உயிருடன்
ஒன்றி நிலை கொண்டிருக்கும்,
ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை
நினைவுகொண்டு,
உங்களுடன் இணைத்து இணைத்து,
அந்த உணர்வின் தன்மையை
உங்களுக்குள் அது உரமாக இணைப்பதே இந்த நிலை.