ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2013

கோடிக் கோடி கோடிக் கோடி...! - ஈஸ்வரபட்டரின் பரிபாஷை

1. விண்ணின் ஆற்றலை எமக்கு உணவாகக் கொடுத்தார், குருநாதர்
நம் குருநாதர் சொல்வார், கோடி கோடி, கோடி கோடி’, என்று விட்டாரென்றால் “டபீர்” என்று எம்மை அடிப்பார்.
அப்பொழுது எங்கே போகும் என் நினைவு?
என்னை, அந்த மிளகாயில் காரத்தில் கோடி,
னிப்பிலே கோடி என்று, அது என்னமோ சொல்வார்.

ப்படிக் “கோடி கோடிஎன்று அடித்தாரென்றால், கோடி என்று அவர் சொல்லும் பொழுதே எமக்கு அடி விழும் என்று தெரியும். இந்த அடி விழுந்தவுடனே, எம் நினைவெல்லாம் அவரிடம், அவர் நினைத்த இடத்தில் கொண்டுபோகும் அதை வைத்துத்தான், இப்பொழுது உங்களிடம் சொல்வது. இல்லாவிட்டால், நானும் இதைப் பார்க்க முடியாது.
அவர் சொல்லி எம்மை இப்படி அடித்தவுடனே,
அவர் உணர்வுகள் எதுவோ
ஆழப்பதியச் செய்து,
அந்த உணர்வின் சக்தி,
எம்மை விண்ணை நோக்கிச் செல்லும்படி செய்யும்.

அப்படி எம் நினைவுகள் விண் சென்று, பேரண்டம் ஆனதும் முதலில் மண்ணுக்குள் ஆன நிலையும் இதிலிருந்து தொடர்ந்து, இதனுடைய உணர்வுகள்
இந்தப் பிரபஞ்சத்துக்குள் எப்படி ஆனது? என்றும்,
பிரபஞ்சத்திற்குள் ஆனபின் இந்த பேரண்டம் எப்படி உருவானது? என்றும்,
பேரண்டத்திற்கு முந்தி அகண்ட பேரண்டம் எப்படி இருந்தது? என்றும்,
அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருந்தது? என்றும்,
அறியும்படி செய்தார் குருநாதர்.

இதை எல்லாம் யாம் பட்டினியுடன் கிடந்து பார்த்தோம்.
எமக்கு உணவாக எதையும் கொடுக்கவில்லை.
ந்த விண்ணின் ஆற்றலை
உணவாகக் கொடுத்தார்.
அதைத்தான், உங்களுக்கும் உணவாக யாம் கொடுக்கின்றோம்.
2. பிறவியில்லா நிலை அடையச் செய்யும் உணர்வின் பொறிகள்
இந்த உணர்வின் பொறிகள் உங்களுக்குள் ஜீரணமாகி, து முளைக்கத் தொடங்கினால், அந்த ஞானிகள் கண்ட உணர்வுகள் அனைத்தும், உங்களுக்குள் விளைந்து அவர்கள் அடைந்த நிலையை, பிறவியில்லா நிலையை, நீங்களும் எளிதில் அடைய முடியும்

னென்றால், இப்பொழுது வாடிய செடிக்கு எப்படி உரமிடுகின்றமோ, இதைப்போலத்தான், உங்களிலே இந்த உரச்சத்தை அருள்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வினை, உங்களுக்குள் உரமாக இணைக்கச் செய்கின்றோம். சாதரணமானதல்ல.

ஆகவே, அண்டத்தின் அகண்ட விரிவின் தன்மையை அறிந்துணர்ந்த ஞானி, தன் உணர்வின் தன்மை தனக்குள் தெளியச் செய்து, ந்த உணர்வின் அலையால், இன்றும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைகொண்டுமுழுமை அடைந்துள்ளான், அது கல்கி.
அந்த நிலையை நாம் அனைவரும் பெறமுடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான், இதை உபதேசிக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள், எத்தனையோ எத்தனையோ இருக்கும். உங்கள் உடலில் கோடிக்கணக்கான குணங்கள் இருப்பினும், அந்தக் கோடி குணங்களும் இது எவ்வாறு உருவானது? என்ற நிலையை, உங்களுக்குள் நினைவுபடுத்துகின்றோம்.

அப்படி அதை நினைவுபடுத்தி,
இந்த அண்டத்தையும், பேரண்டத்தையும் இணைத்து,
இதனுடன், மனிதனான நாம் மனித உணர்வு கொண்டு,
அந்த மகரிஷியின் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து,
அந்த இணையும் தன்மையை
உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

தனக்குள் அப்படி அதைப்  பெருக்கப்படும் பொழுதுதான், ஒவ்வொரு செடிகளுக்கு ஒவ்வொரு விதமான உரமும், இதைப்போலத்தான் அருள்ஞானியின் உணர்வினுடைய நிலைகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக, யாம் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வின் துணைகொண்டு, என்றும் இந்த மனிதனின் நிலைகளில் அருள்ஞானம் பெற்று, அந்த உணர்வின் தன்மை கொண்டு, இருளைப் பிளந்து பொருள் காணும் நிலைகளும், அந்தப் பொறிகள் உங்கள் இடத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான், யாம் இதை இணைத்து இணைத்து, உங்களில் இதை இணையச்செய்வது.

காரணம், நாம்  நீண்ட நாள்  இந்த உடலில்  இருப்பதில்லை. யாருமே இருந்ததில்லை. ஆக, அந்த மெய்ஞானிகள் நீண்ட நாள் இன்றும் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் இந்த உடலை வைத்துத்தான் உணர்வினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் பேரானந்த பெருநிலை என்ற நிலையில், முழுமை அடைந்தவர்கள் நாம் அனைவரும் அதைப் பெறவேண்டும்.

மனிதர்கள் நாம் பல நிலைகளை, பொருள்களை, ன் தேவைக்குத்தக்க உருபெறச்செய்யத் தெரிந்து கொண்டவர்கள். நாம் மனிதனானபின் தீங்கினை நீக்கிவிட்டு, ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

ஆகவே, இதையெல்லாம் (விஞ்ஞான அறிவுடன்) உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். ஆனால், மெய்ஞான அறிவினுடைய நிலைகளை, நீங்கள் அறிந்துகொண்டால் போதும்.