ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2013

ஆற்றல் மிகுந்த காந்த சக்தி

நம் உயிரின் துடிப்பு ஒரே சீரான நிலைகளில் இருந்தாலும், நாம் இப்பொழுது எடுத்துக் கொண்ட இந்த காந்த சக்திகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த எலும்பின் சில பாகங்களில்
உயிரை அணுகி உள்ள நிலைகளிலும்,
செவிப்புலன் அருகில் செவியின் ஒரங்களிலும்,
கண்ணில் இருக்கக் கூடிய கருவிழிகளுக்குள்ளும்,
இந்த காந்த சக்திகள் உண்டு.

யாம் இப்பொழுது, உபதேசிக்கும் பொழுது, புலனறிவுகளில் முக்கியமாக கண், செவிகள் இதைப் போன்ற நிலைகளிலும், உயிரில் இருக்கக் கூடிய பாகங்களுக்குள்ளும் அந்த காந்த சக்திகள் பெருகுகின்றது.

நாம் எந்த நினைவின் தன்மை பெறுகின்றோமோ, கண் விழிகளினுடைய நிலைகளும், ஆற்றல்மிக்க உணர்வுகளைப் பிரித்து எடுக்ககூடிய சக்தி அந்தக் கண்ணுக்கு உண்டு

அதைப் போல, நம் உயிரின் தன்மையினுடைய நிலைகள் அந்தக் காந்தச் சக்திகள் அதிகமாகக் கூடும் பொழுது, உயிரின் துடிப்பு இலேசான நிலைகளில் இருந்தாலும், இந்த உணர்வின் தன்மைகள் அது காந்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் பொழுது, ஞானிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நாம்  பெறுகின்றோம். அப்படிப் பெறுவதற்கு காந்தத்தை அதிகமாகக் கூட்ட வேண்டும்.

ஞானிகள் காந்தத்தைப் பெற்றுத்தான்,
விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து,
ஆற்றல்மிக்க சக்தியாக தன் உடலில் சேர்த்து, உயிரின் தன்மையில்
உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றார்கள்.

அவர்கள் எதை எண்ணினாலும், அந்த உணர்வின் சக்தியைக் கவர்ந்து, திடீரென்று மழையை வரவழைக்க வேண்டுமென்றாலும், மழை வர வைப்பார்கள்.

எந்த எண்ணங்கள் கொண்டு, அந்த உணர்வின் தன்மையைக் கண் ஒளியாலே பாய்ச்சி, இந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சினாலும், ஒன்றை உருமாற்றக் கூடிய சக்தியும் அவர்களுக்கு உண்டு.
அவர்கள் எந்த எணணத்தைக் குவித்தாலும், மகரிஷிகள் எதையுமே சிருஷ்டிக்க வல்ல சக்தி பெற்றவர்கள். அவர்கள் இந்தப் புவியின் ஈர்ப்பில் இல்லாதபடி, அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, விண்ணிலே வரும் பேராற்றல் மிக்க விஷத்தின் தன்மையையும் ஒளியாக மாற்றி, ஒளிச் சரீரமாக இருக்கின்றார்கள்.

ஆக, அந்த ஒளி சரீரத்திற்குள் நின்று இன்றும் ஜீவித்துக் கொண்டு, விண்ணிலே தோன்றக் கூடிய, உணர்வின் சத்துக்களை இன்றைக்கும், நம் குருநாதர் முதற்கொண்டு பெற்று, வளர்த்து வருகிறார்கள்.