பெண்கள், நீங்கள் சமையல் செய்யும் பொழுதெல்லாம் உங்களுக்குச்
சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, “நான் செய்யும் சமயல் அனைத்தும், அதை உணவாக உட்கொள்வோர்
அனைவருமே மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும்.
அவர்கள் புனித நிலைகள் பெறவேண்டும், அவர்கள் உடல் நலம் பெறவேண்டும், மகரிஷிகளின்
அருளால், புனிதம் பெறவேண்டும் என்று நீங்கள், இதை எண்ணி எண்ணி, உணவு பரிமாறுங்கள்.
பெண்களுக்கு இந்த நினைவலைகள், ஈர்ப்பலைகள் அதிகமாக உண்டு. ஆகவே, தாய்மார்கள்
ஒவ்வொருவரும் இதை நினைவில் கொண்டு,
உங்களையறியாமல் துக்கப்படச் செய்யும்,
உணர்ச்சி வசப்படச் செய்யும்,
சங்கடப்படச் செய்யும் இந்த உணர்வுகளை மாய்க்க
ஒரே வழி இதுதான்.
நீங்கள் சமையல் செய்யும் பொழுது, சமையல் அறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களுக்குத்
துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும், உங்கள் குடுமபத்திற்குள் துன்பமூட்டும் நிலைகள்
இருந்தாலும், அதையெல்லாம் நீங்கள் நினைவில் வைக்காதபடி, ஈஸ்வரா என்று, அந்த ஆத்ம சுத்தியினுடைய
நிலைகளைச் செய்துவிட்டு சமையலைச் செய்யுங்கள். ஆகாரம் சாப்பிடும் பொழுதெல்லாம் இதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஆத்மசுத்தி
செய்துகொண்டு,
நம் வீட்டிலே மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
வீட்டிற்கு வருவோர் அனைவரும், நலமும் வளமும் பெறவேண்டும்.
நம் வீட்டில் இருப்போர் அனைவருக்கும், மகரிஷியின் அருளாலே,
சொல்லாலும் செயலாலும், இனிமை பெறும் ஆற்றல்
அவர்கள் பெற வேண்டும் என்று மூச்சின் அலைகளை
அந்த வீட்டில் இருந்த நிலைகள் கொண்டு,
ஏங்கி எடுத்தாலே புவியின் ஈர்ப்பிற்குள், உங்கள் அலைகள் படருகின்றது. உங்கள் மூச்சின் அலைகள் சுவர்களிலே படர்கின்றது.
அங்கு எவ்வளவு பெரிய நிலைகள் இருந்தாலும், உங்கள் சொல்லாலே உங்கள் குடும்பத்தில்
புனித நிலைகள பெற உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு.
இந்த முறையில் செய்தீர்களென்றால், இதை நீங்கள் அதிசயம் என்று எண்ண வேண்டாம்.
ஆச்சரியமான நிலைகளில் உங்கள் வீட்டிலே மகிழ்ச்சியினுடைய நிலைகள் தோற்றுவிப்பதை, நீங்கள்
பார்க்கலாம்.
நீங்கள் இட்ட மூச்சலைகள், உங்களுக்குள் நல்ல நறுமணங்களாக வளர்ந்து, எப்பொழுதும் மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்க்கலாம்.
தியானமிருந்தோர் வீட்டினுடைய நிலைகள், நறுமணங்கள் அடிக்கடி சுழன்று வருவதை நீங்கள்
பார்க்கலாம்.