ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2013

மிளகாய் காரம் என்றால், அதைத் தூக்கி எறிந்துவிடுகின்றோமா?

1. மிளகாய் காரம் என்றால், அதைத் தூக்கி எறிந்துவிடுகின்றோமா?
மிளகாய் காரம் என்றால், தூக்கி எறிந்து விடுகின்றோமோ? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

அந்தக் காரம் என்ற உணர்வு, கோபப்படுபவர்களை, வேதனைப்படுபவர்களை, வெறுப்படைபவர்களை, துயரப்படுபவர்களைஇந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, தெரிந்து கொள்கின்றோம்.

தனித்துவிட்டால், அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்து, கார உணர்ச்சிகள் அதிகமாகி, நம் அணுக்களில் பெருக்கிவிட்டால், இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.

சில வீடுகளில், “இப்படிப் பேசுகிறானே, உருப்படுவானாஎன்று சொல்லிச் சொல்லி, இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே, நிறைய சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே, உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும், இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும், இதேபோல உருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு, நண்பர்களுக்கும், இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு, காரம் என்ற நிலைகளை எடுத்தால், நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால், நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். ஆகையினால், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால், இதன் வழி நமக்கு, இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது, இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும்,
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும்,
தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும்,
என்று உங்கள் இடத்திலே உட்கார்ந்து, ஒரு பார்வை பார்க்க வேண்டும். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2. விஷ்ணு தனுசு – விஷத்தை அடக்கும் நிலை (சுவைபடுத்தும் நிலை)
நாம் வேதனை என்ற உணர்வை உடலில் பெற்றபின், சிவ தனுசு உடலாகி இந்த உணர்வு வலுப் பெற்றுவிட்டால், நல்லதை எடுக்க விடுகிறதோ? எடுக்க விடவில்லை. நமது உயிர் விஷ்ணு. துருவ நட்சத்திரம் இந்த உயிருடன் ஒன்றி, உணர்வுகளை ஒளியாக மாற்றியது. பல தீமைகளை வெல்லக்கூடிய சக்தி பெற்றது

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும்ஈஸ்வராஎன்று, இங்கே புருவ மத்தியில் அனுப்பும் பொழுது, இந்த உணர்வுகளை எடுத்து ஒளியாகின்றது இதற்குப் பெயர் விஷ்ணு தனுசு. இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்தவுடனே, தீமையான உணர்வின் அணுக்களைச் செயலற்றாதாக்குகின்றது.

ஆகையால், வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், “ஈஸ்வராஎன்று அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இணைத்துவிட வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று சொல்கிற பொழுது, இது விஷ்ணு தனுசு.

பையன் வேதனைப்படுவதை, வேதனைப்படுமாறு செய்வதைப் போன்று, குடும்பத்தில் இப்படி நிலை வருகிறதென்றால், இது சிவ தனுசு. எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைதான், சொல்லாக வருகின்றது. நாம் கேட்டவுடனே என்ன செய்கிறது? இதே உடலைத்தான் இயக்குகிறது.

ஆனால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, உடலுக்குள் பெறவேண்டும் என்கிற பொழுது, அந்த விஷ்ணு தனுசு என்ன செய்கிறது? சிவ தனுசை அடக்குகின்றது.

இவ்வாறு நாம் அறிந்துகொண்ட பின், நம் உயிரின் இயக்கத்தால் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமானான் என்று தெரிந்தபின், தெரிந்தும் அதை விட்டுவிட்டால் என்ன ஆகும்?

எனவே, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று, தூய்மை செய்யப்படும் பொழுது, அந்த வலுவைக் கூட்டியபின்
அவன் அறியாமை நீங்க வேண்டும்,
அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்,
சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்,
தெளிவான மனம் பெறவேண்டும்,
என்று அவனை எண்ணி இதை எடுத்தோமென்றால்,
இதைப் பெருக்கிக் கொள்கிறோம்.
நமக்குள் சுவையாக மாற்றிக் கொள்கின்றோம்.