ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2013

நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒவ்வொன்றும் எப்படி ஆகாரம் எடுக்கின்றது?


1. நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒவ்வொன்றும் எப்படி ஆகாரம் எடுக்கின்றது?
வீட்டிலே, நாம் வேலைக்கு அவசரமாகப் போக வேண்டும் என்று நினைப்போம். அந்த நேரத்தில், சந்தர்ப்பத்தில் மனைவிக்கு முடியாமல் இருக்கலாம். அப்பொழுது, “இன்னும் எழுந்து, அவர்கள் ஒன்றும் செய்யவில்லை பார்என்று கோபத்தை எடுத்தால், அவர் உடலில் முடியாமையை அறிய முடியாது.

அப்பொழுது, உடனே நமக்குக் கோபம் வரும். அப்பொழுது, எதற்கு ஊட்டம் கொடுக்கிறோம்? எனெனில்,
நம் உடலில் கோபத்தை ஊட்டும் அணுக்கள் உள்ளது.
அதற்கு ஆகாரம் தேவை.
இந்த சந்தர்ப்பம் பார்த்து, ஊடே புகுந்து கொள்ளும்.
நாம் சிந்திக்க முடியாத நிலையில், அது சாப்பாடு எடுக்கின்றது.

புலி, பத்து நாள் பட்டினி போட்டவுடன், ஒரு ஆளைக் கண்டவுடன் எப்படித் தாவுகின்றதோ, மற்றும் மழை இல்லாமல் பூமிக்குள் பதிந்திருக்கும் செடி, கொடிகள், மழை பெய்தவுடன் எப்படி, கிடு கிடுவென விதைக்காமலே முளைக்கின்றதோ, அதிலேயும், இந்த விஷ வித்துக்கள், கிடு கிடு என்று முளைக்கும்.

நல்ல வித்துக்கள் போட்டால், சீக்கிரம் முளைக்கின்றதா? அதற்கு வேண்டிய பக்குவ நிலையும், சூழ்நிலையும் உருவாக்கினால்தான், அது விளைகின்றது.

ஆகையால், நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த ஞான வித்துக்களை, வளர்த்துப் பழக வேண்டும். இது, மனிதன் ஒருவனால்தான் சாத்தியமாகின்றது.

நாம் ரோட்டில் போகும் பொழுது, பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி விட்டால், அதற்குச் சாப்பாடு தேவை. நம்மை அறியாமலேயே, நுகர்ந்து, அந்த வெறுப்பின் உணர்வுகளச் சுவாசிக்கச் செய்யும்.

இத்தகைய உணர்வுகளை நீங்கள் சுவாசித்தவுடனே, தொழில் செய்யப் போகும் பொழுது, அவனைப் பார்க்கப்படும் பொழுதே, அவன் மேல் வெறுப்பு வரும். நமக்காக வேலை செய்யும் பொழுது, இந்த வெறுப்பின் உணர்வுகள் அவனுக்குள் சென்று, தவறாக வேலை செய்வான்.

அதே சமயத்தில், இந்த உணர்வின் தன்மை கணக்கு எழுதப்படும் பொழுது, என்ன செய்கிறது எனில், கணக்கைத் தவற விட்டுவிடுகிறது. நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்மை அறியாமலேயே, அதனுடைய உணர்வுக்காக, அந்த உணர்ச்சிகளைத் தூண்டி, அது வளர்கின்றது.

நல்ல குணங்களை, நாம் நமக்குள் தேடித் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல குணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா?
2. பிறிதொரு மனிதனின் உணர்வு, நமக்குள் உருவாகக் கூடாது
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனில், அந்த உணர்வு தூண்டுகின்றது என்றால், நமக்குள், நம்மை எது இயக்குகின்றது? அவன் உடலில் பிறிதொரு உணர்வுகளைக் கேலி பண்ணிப் பழகியிருப்பான். அவன் முகத்தை நாம் பார்க்கவில்லை. நாம் பேசவில்லை. அவன் உடலைச் சுற்றி, அந்த ஆன்மாவில் இருக்கும். உற்றுப் பார்த்தால், நமக்குள் பதிவாகி, நுகரச் செய்கிறது.

அவனை அறியாமலேயே, குற்றவாளியாகப் பார்க்கிறான். அப்பொழுது, இதை எது செய்கிறது? இந்த உணர்வின் அணுக்கள் உந்தப்படும் பொழுது, அதைக் கவர்ந்து, நம்மையறியாமலேயே சாப்பாடு எடுக்கின்றது.

நுகர்ந்தபின் என்ன செய்கின்றது? மாம்பழத்திலிருந்து, வாசனை வருகிறது. நல்ல பழமாக இருந்தால், “ஆகாஎன்கிறோம். அதிலே புளிப்பு கலந்தால், புளிப்பாக இருக்கிறது என்கிறோம். எதிலே வருகிறது? காற்றின் நிலைகளில் வருகிறது. அதனை உணர்ந்து நுகர்ந்தவுடனே, பழம் இதுவென்று பார்க்கிறோம்.
 
ஒரு பூச்செடியிலிருந்து வரக்கூடிய மணத்தைப் பார்த்தவுடன், நன்றாக உள்ளது. பச்சிலையிலிருந்து வரும் மணத்தைக் கண்டு, நமக்குப் பிடிக்கவில்லை என்றால், வாந்தி வரும்போல உள்ளது.

நம் உடலிலுள்ள அணுக்கள், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால், வாந்தி வருகின்ற மாதிரி உள்ளது. இதையெல்லாம் எது செய்கின்றது?

இதையெல்லாம் நுகர்ந்து, நாம் இரத்தத்தில் கலந்தபின், நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும், அந்தத் தீங்கு விளைகின்றது. அந்த அணுக்கள் வளர ஆரம்பிக்கும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கும் நிலை வருகின்றது. கெட்ட அணுக்கள் எடுக்கும் பொழுது, அது வளர்கின்றது. அப்பொழுது, நம்மையறியாமலேயே மயக்கம் வரும். அந்த நேரத்தில், நாம் இந்த ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

ஈஸ்வராஎன்று, உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட்டு, எங்கள் உடலிலே அது பரவ வேண்டும், என்று எண்ணிவிட்டு, யார் இந்த மாதிரி நடந்தனரோ, அவர் பொருளறிந்து செயல்படும் சக்தியும், சிந்திக்கும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணினால்,
அவன் செய்த செயலும்,
நாம் எண்ணிப் பார்த்து நுகர்ந்தது,
இரண்டும் உயிருக்குத்தான் வருகின்றது.

உயிர் ஒரு நெருப்பு. நெருப்பை வைத்து, ஒரு பாத்திரத்திலே எந்த சரக்கைப் போடுகிறோமோ, அதை இரண்டறக் கலந்து, ஓர் கலவையாகின்றது. ஆகையால், பிறிதொரு மனிதனுடைய உணர்வுகள், இங்கே உருவாகக் கூடாது.

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் பொழுது
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை
உயிர் வழி நுகர்ந்து, சுவாசித்து,
அதை நமக்குள் வளர்த்து,
இந்த உடலில் ஏகாந்த நிலை என்று மகிழ்ந்து வாழ்ந்து, உயிருடன் ஒன்றி, ஒளியின் சரீரமாகி, மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும். எமது அருளாசிகள்.