1. கோலமாமகரிஷி
கண்ட துருவத்தின் ஆற்றல்கள்
கோலமாமகரிஷி அவர்கள்
கண்டுணர்ந்த நிலைகளை, துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின்
ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப்
பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.
நாமும்
இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை
கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை,
நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு
உணர்வையும் கொடுக்கிறோம்.
துருவத்தை
நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.
விண்ணின் ஆற்றலைப் பார்க்க
முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம்.
அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம்
சென்றோமென்றால், நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக
வைக்கிறோம்.
யாம், குறைந்தது ஆறு வருடங்கள்
கொல்லூரில் இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின்
இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.
ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள்
இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப்
பெற முடியும்.
நாம் இங்கிருந்து சொல்கிறோம்
என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும்
போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.
நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த
நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள
மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச்
சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.
2. மூகாம்பிகை கோவிலில் உள்ள முருகனும், வீரபத்திர சாமியும்
மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக
இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே
அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க
முடியும்.
அணுகுண்டை உருவாக்கியவனும்
மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி
வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.
இவர் யாக வேள்விகள்
நடத்தப்படும்போது, பல
அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம்
முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக
இருக்கிறார்கள்.
ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப்
பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.
ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின்
(வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.
ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே
கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.
இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள்
செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல
எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.
தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால்
விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர
குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், கோலமாமகரிஷி
சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.