1. ஜாதகம், ஜோதிடம் எல்லாம்
மந்திர ஒலிகளே
விஞ்ஞான
அறிவு வருவதற்கு முன், மந்திர ஒலிகளே அதிகமாக
இருந்தது. மந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான், உணர்வின் எண்ணங்கள் எப்படி? என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் சொல்லும் போது, இந்த பூமியைப் பிளந்து,
அதே சமயத்தில்
இந்த
உணர்வின் தன்மையை
தனக்குள்
விளையவைத்து விளையவைத்து,
இந்த
உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.
அதுதான், இந்த ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும் இதையெல்லாம்
இவன்
கற்பித்த உணர்வும், இதனுடன் இணைத்துக்கொண்ட உணர்வும் எதுவோ,
எவர் பதிவு செய்து கொண்டாரோ, அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வுகள் இங்கே இயக்குகின்றது.
ஆகவே, அதிலே
நன்மை என்ற நிலைகள் வராது,
தீமை
என்ற உணர்வுகள் பதிவுசெய்து கொண்டது.
தீமையின்
நினைவாற்றலைக் கூட்டும்
தீமை
செய்யும் உணர்வே தான் வருமே தவிர,
ஞானிகள்
தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது
நீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி, சாஸ்திர விதிப்படி
ஜாதங்கள் குறித்தாலும் சரி, இவன் உருவாக்கப்பட்ட நிலைதான்.
இயற்கையில், ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை.
ஜாதகம் கணிப்பது மனிதன் எண்ணத்தில்தான்.
இவர்கள்
சொன்னது மாதிரி, எதை எதையோ கூட்டி,
கழித்து, உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ, அந்தப் பதிவின்
நிலைகளை நாம் தலைவிதியாக வைத்து, அதனை மீண்டும் விதியாக மாற்றி,
அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்
2. ஜாதகம் பார்த்து, நம்முடைய ஆசையைத்தான்
கூட்டிக் கொள்ளமுடியும்
ஒரு
மனிதன் ஒரு செடியின் வித்தை உருவாக்கி, அப்படி உருவாக்கிய வித்தைப் போட்டபின், எதனைக் கலந்து அந்த உணர்வின் சத்து வித்தாக முளைத்ததோ,
அதைப் போன்றுதான்,
இந்த ஜாதகம், ஜோசியம் இவைகளும்,
எண்ணங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு,
அதிலே நம்பிக்கைகள் ஏற்படுத்தியது.
இந்த
உணர்வின் தன்மை பதிவாகி விட்டால், ஒரு வித்தாகி விடும். அந்த வித்தின் விளைவுகள் நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால், நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள், மீண்டும் ஜாதகத்தைத் தேடி.
இன்னும்
நல்ல நேரம் வருகின்றதா?
கெட்ட
நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்லமுடியும்.
ஆக, நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கென்று, நேரமென்று தேடி அலைவீர்கள்.
பதிந்த உணர்வுகளில், ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.
அது
நிறைவேறவில்லை என்றால், வேதனைகள் கூடிக்கொண்டு இருக்கும்
தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின்
நிலைகள், மனித உருவைச் சீர் குலையச்செய்யும்
நிலைதான் வரும்.
3. உயிருடன் ஒன்றி, ஒளியாக
ஆவதுதான் உண்மையான ஜாதகம்
மனிதனாகப் பிறந்து, அறிந்திடும் அறிவு ஏழாக இருப்பினும்,
ஏழாவது நிலைகள் பெறவில்லையென்றால், அறிந்திடும்
அறிவின் துணைகொண்டு இருளைப்போக்க வேண்டுமே தவிர, இருளைச் சேர்த்திடுதல் அல்ல
ஏழாவது
அறிவின் தன்மை கொண்டு, பொருளைக் காணுகின்றோம் மனிதன் பொருளைக்கண்ட
பின் இருளை நீக்கிட வேண்டும் ஆக மனிதனான நாம், உணவாக உட்கொள்ளும்
உணர்வுக்குள் நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல
உணர்வை உடலாக மாற்றுகின்றது.
ஆக, நல்ல உணர்வின் தன்மை கொண்டு, அறிந்திடும் அறிவு வருகின்றது
அந்த அறிந்திடும் அறிவு கொண்டு, நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள்
இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
இருளை நீக்கி, ஒளியின் தன்மையாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும் என்பதுதான், ஞானிகள் காட்டிய அந்த அறநெறிகள். அதனை நீங்கள் அனைவரும் பெறவேண்டும்.
ஆக
விண்ணுலக நிலைகளில், உயிரின் உணர்வின் தன்மையை தீமையைப்
பிளந்திடும் உணர்வு பெற்ற மனிதன், தீமையைப்
பிளந்து உணர்வின் தன்மை, உண்மையில் உயிர் ஒளியாக ஆவதுதான் “உண்மையான ஜாதகம்”.