இமயமலையிலே தபசு இருந்தார் என்றால்,
“இமய” என்றால் என்ன? இமை என்பது,
இரண்டு கண்களின் மையம் - “உயிர்”
உடல் உயர்த்தியான
நிலைகள் மலை.
இமயம் என்று அவர்கள் பாடியிருந்தால் இமயமலையிலே போய் நான்
தபசு இருக்கவேண்டும் என்றால் என்ன அர்த்தம்?
ஆக உட்பொருளின் தத்துவத்தை அவர்கள் கொடுக்கப்படும்போது
இமயமலையிலே போய் தவம் இருக்கச் சொன்னார். தவம் இருந்தார் என்றால், தவம் என்றால் என்ன?
இந்த இமய மலையிலே,
புருவ மத்தியிலே நாம் எதையெல்லாம் உயர்த்தி
எண்ணுகின்றோமோ,
இந்த தவத்தை நீ
கூட்டி,
இங்கே சேர்க்க
வேண்டும்.
இதுதான் பொருள்.
அந்த காவியத்திற்குள் இருக்கக்கூடிய பொருள். இமயமலையிலே
போய் தவம் இருந்தார்கள். பெரிய பெரிய தவயோகிகள் என்று வர்ணித்துக் கொண்டேயிருக்கின்றோம்.
ஆனால்,
ஓவியங்களில் அவர்கள் நெற்றியைக் காட்டப்படும்போது,
இது தெரியாமல்தான் எங்கெங்கோ சுற்றித் திரிகின்றோம்.
ஆக, ஒளியாக இருக்கும்
நம் உயிரான ஈசனை,
புருவ மத்தியில்
எண்ணி,
அவனோடு ஒன்றி அவனாக மாறும் (ஒளியாக மாறும்) பக்குவத்தைத்தான், மெய் ஞானிகள் அன்று
காட்டினார்கள்.