ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2013

இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் - ஞானகுரு

இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டுமென்றால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

யார் எந்தத் தீமை செய்தாலும், அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.
தீமை செய்கிறான். தீமை செய்கிறான் என்றால்,
நம்மைத் தீமை செய்ய வைக்கும்.

ஆக அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும். இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

குறைகளைக் கூறுவதற்குப் பதில், நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆக இது ஒருதலைப்பட்சமாக, நமக்குள் வரப்படும் போது, நம் இயக்கத்தில் வரப்படும் போது, மற்றவர்களும் இதைச் சிந்திக்க வேண்டும்.

சிலர் விடாப்பிடியாக இருப்பார்கள்.
ஆக அதைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
அவர்கள் நிலை எதுவோ, மீண்டும் நாம் முயற்சிக்கிறோம்.

தவறு செய்கிறார் என்றால் சரி.
அவருடைய விதி அதுவாக இருக்குமோ,
என்ற நிலைகளில் நாம் அகற்றிட வேண்டும்.
அதைக் கவர்ந்திடக் கூடாது.
அவருடைய விதி அதுவாக இருக்கும்.

அது அதிகமாக இருந்தால், மீட்டுவதற்கு நாம் முயற்சி செய்யக் கூடாது, துடைப்பதற்கு அவர்தான் முயற்சி செய்ய வேண்டும். 

இல்லையென்றால், அவர், அதன் வழியில் செய்த பிழைகள், அது அரசனாக இருந்து அதன் வழிக்கே கொண்டு செல்லும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து, அதை அரசனாக்கி, இதைத் தனக்குள் தணிய வைக்க வேண்டும்.

தவறு நாமும் செய்யவில்லை. அவரும் செய்யவில்லை. நமக்குள் உட்புகுந்த தீமைகளே, அந்தத் தவறுகளைச் செய்கின்றது, என்ற நிலையை, இதை அடக்க வேண்டும். எதை வைத்து?

அந்த சப்தரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டுமென்று உட்புகுத்தி, அதைக் கவர்ந்து, தீமையை ஒடுக்க வேண்டும். இவ்வாறு நாம் அடக்கிக் கொண்டோமென்றால், நாம் அங்கே செல்வது உறுதி.