1. பணத்தைக் கொடுத்து, சொர்க்கத்திற்கு அனுப்ப முடியுமா?
நாம் எந்த வகையில் சொர்க்கத்திற்குப் போகப் போகிறோம்,
சாமியாரிடம் போய் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ஆசி கொடுங்கள் என்றாலும் ஒன்றும் நடக்காது.
நீங்கள் உங்களுக்குள் இருக்கக்கூடிய
ஈசனுக்கு, யாம் சொல்லிய முறைப்படி செய்தால்தான் அங்கே போக முடியும்.
சாமி, யாம் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புகிறோம் என்றால்
அது ஏமாற்று வேலைதான். சொர்க்கத்திற்குப் போகமுடியும் என்று யாம் சொன்னால், அது ஏமாற்றுகிறோம்
என்று அர்த்தம்.
நாம் எல்லோரும் சேர்ந்து, அந்த முறைப்படி செய்து அந்த
உணர்வை ஏற்றினால்தான் போகமுடியும். ஆனால்,
எல்லாச் சக்தியும்
யாம் பெற்றிருக்கிறோம்,
உங்களை எல்லாம்
சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்.
“எனக்குக் காசு
கொடுங்கள்” என்று பெருமையாகச் சொன்னால்
உங்களை ஏமாற்றுகிறோம்
என்றுதான் அர்த்தம்.
இதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
நம் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து தியானித்து,
முறைப்படி நாம் செய்தால்தான்,
கூட்டுத் தியானத்தில் செய்திருந்தால்தான்
உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை, விண் செலுத்த முடியும்.
இந்த உணர்வின் இயக்கம் இல்லை என்றால்
ஒன்றும் செய்யமுடியாது.
2. ஆன்மாக்களை விண் செலுத்த, மெய்ஞானிகள் காட்டும் ஒரே வழி
பௌர்ணமி தியானத்தில் நாம் சரியான முறையில் தியானமிருந்து,
நம் மூதாதையர்களை விண் செலுத்துகின்றோம். அவ்வாறு விண் செலுத்துவதற்குண்டான பக்குவ
நிலைகளை, நாம் கூட்டுத் தியானங்களிலிருந்து பெறவேண்டும்.
இதற்கு முன் இறந்த நம் முன்னோர்கள், அவர்கள் வேறு உடலிலே
சென்றாலும், அந்த உயிராத்மாக்களின் உணர்வுகள்தான் உங்கள் உடல். ஆக, இதை வளர்த்துக்
கொண்டு, விண் செலுத்தும் நிலைகளைச் செயல்படுத்தும் பொழுது, உங்களுக்கு இரட்டிப்பு லாபம்.
உணர்ச்சியின் தன்மை கொண்டு விண் செலுத்தும் பொழுது, நாம் அங்கிருந்து பெறமுடியும்.
இன்று கம்ப்யூடர்
என்ற நிலைகளில், இயந்திரத்தை இங்கே வைத்து, லேசர் என்ற ஆயுததைக் கொண்டு, அந்த ஒளிக்கதிரினுடைய, ஒளிக்கற்றைகளினுடைய
நிலைகள் கொண்டு, இன்று விண்ணிலே இராக்கெட்டை அனுப்புகின்றார்கள்.
அந்த இராக்கெட்டிற்குள் இருக்கக்கூடிய அலைவரிசை கொண்டு,
எந்த உணர்வின் தன்மையை
அங்கே பதியச் செய்திருக்கின்றார்களோ,
அதன் வழியில் அதை விண்ணிலே மிதக்கச் செய்து,
உணர்வின் அலையை,
ஆற்றல்மிக்க அலைவரிசை கொண்டு,
இங்கே தரையிலிருந்தே எடுக்கின்றார்கள்.
முன்னோர்களுடைய
உணர்வுகள் சூட்சம நிலைலயில் எடையற்றது. ஆனால், உணர்வின்
இயக்கம் உண்டு. நமக்குள் உணர்வின் இயக்கம் உண்டு, இயந்திரத்தைப் போன்று, “இயக்கச் சக்தியும்”
நமக்குள் உண்டு.
அந்த உயிராத்மாவிற்கு, இயங்கும் ஆற்றல்தான் உண்டு.
இன்னொரு இயந்திரத்திற்குள் போனால்தான், அது வேலை செய்யும்.
ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் பெருக்கி,
இந்த உணர்வின் அலையை மாற்ற முடியும்.
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் பேரருள் பேரொளியை
நாம் தியானித்து, அதைக் கவர்ந்து,
இழுத்து, சுவாசித்து,
அந்த ஆற்றல்மிக்க சக்தியை, உடலை விட்டுப் பிரிந்த
ஆன்மாக்களின் முகப்பில் இணைத்து,
அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
என்று எல்லோரும் சேர்ந்து உந்தித் தள்ளவேண்டும்.
இப்படிச் செய்யும் பொழுது, அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தின்
ஈர்ர்ப்பிற்குள் சென்று, உடல் பெறும் உணர்வுகள் கரைந்து, அழியா ஒளி சரீரம் பெறுகின்றது.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும், உடலைவிட்டுப் பிரிந்து சென்ற
முன்னோர்களின் உயிராத்மாக்களை, இவ்வாறு விண் செலுத்திப் பழக வேண்டும். அதற்கு இந்தத் தியானம்
இருக்க வேண்டும்,
அந்த விண்ணின் ஆற்றலை, மெய் ஒளியை நமக்குள் சேர்த்தால்தான்
அதை மாற்றமுடியுமே தவிர, அது அல்லாதபடி செயல்படுத்த முடியாது.