
உயிர் உணர்வு உடல் - இயக்கம்
ஒரு மரம்
பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்… அதில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த
உணர்வின் தன்மை பூமியின் பரத்தில்
பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது…
பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து
தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக
விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.
இதைப் போல
தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள்
தொடர்ந்து எதன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும்… மரம் ஒன்றுடன்
ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும்… தாவர இனங்களும் மாறுகின்றது.
இதைப் போன்று…
நம் உடலுக்குள் இருக்கும் உயிர் “நாம்
எண்ணியது எதுவோ… அதை ஜீவ அணுக்களாக
மாற்றி…” அந்த உணர்வின் மலமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.
சூரியனைப் போல
உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால்
நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.
நாம் எண்ணியது
எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே உருப் பெறுகின்றது.
பல கோடி
வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல
நமக்குள்ளும் விளைகின்றது.
ஒருவன்
தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து
சொல்லாக வருகின்றது… அவனில் விளைந்த
வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை
உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள்
பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.
ஒரு வித்து
தன் சத்தைக்
காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள்
எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின்
சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய
பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது
உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் உந்து விசையால் நம் உடல்
அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.
நாதத்தின்
சுருதி கொண்டு வாத்தியங்களை
இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு
தரம் பதிவாக்கி விட்டால் அந்த ராக இணைப்பிற்கு
அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.
வாசிக்கத்
தெரியவில்லை என்றால்… சீராகப் பதிவு
செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது
வராது.
இனிமை
கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு
செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய
அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும்
பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும்
நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.
இதைப்
போன்று தான்
1.ஒரு மனிதன்
கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு
செய்து கொண்டால்
2.அந்த
உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் அங்கங்களை இயக்குவதும்
3.அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும்
நிலையோ… இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.
அவ்வாறு
தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும்
தருணம் வருகின்றது.
பிரபஞ்சத்தில்
சூரியன் இயக்குவது போல
1.நாம்
எண்ணிய உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும்
2.உயிர்
உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.