
உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்
நாம் செய்ய வேண்டிய அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நமது
பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது
பார்வை அவர்களுக்குள் ஞானத்தைத்
தோற்றுவிக்க வேண்டும்.
இதை நாம் வளர்த்தோம் என்றால் என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.
அந்த மகரிஷிகள் அருள் ஒளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். என்னைப் பார்ப்பவருக்கு மன மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாம் செயல்படுத்த
வேண்டும்.
“மன
மகிழ்ச்சி” கிடைக்க வேண்டும் என்றால் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.என்
(நம்முடைய) சொல்லால் பேச்சால் செயலால் பார்வையால்…
2.நான் நல்லதானேன்…
எங்களுக்கு நல்லதானது…! என்று அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு
வர வேண்டும்.
3.உங்கள்
பார்வை பிறரைப் புனிதப்படுத்தும் நிலையாக
வர வேண்டும்.
4.உங்கள்
உணர்வின் தன்மை தூய்மைப்படுத்தும் உணர்வின் ஆன்மாவாக மாற்ற வேண்டும்.
சப்தரிஷி
மண்டலம் என்பது தீமை தனக்குள் வராதபடி ஒளியாக மாற்றிக் கொண்டது தான்.
நமது
பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்ற பிற மண்டலங்களில் வருவதை ஒடுக்கி
துகள்களாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.
அது தூசிகளாக
மாறுவதைக் கோள்கள் எடுக்கின்றது. அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து துகள்களாக
மாற்றுகின்றது… பின் அதனின் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனைச் சூரியன் ஒளிச் சுடராக
மாற்றுகின்றது.
இதைப்
போன்று தான்
1.மகரிஷிகளின்
அருள் உணர்வை உங்களுக்குள் வலுக் கொண்டதாக
மாற்றி…
2.பால்வெளி மண்டலங்களாக உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்காத
குணங்களில் இணைத்து இணைத்து
3.எத்தகைய
நிலையிலும் அது உங்களுக்குள் தூய்மைப்படுத்திடும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான்
4.எமது
குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குக்
காட்டுகின்றேன்.
ஆகவே… தீமையை
அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மையை நீங்கள் விளைய வைத்து இந்த
உடலை விட்டு அகன்றால் அழியாச் செல்வமான பேரருள் பேரொளியாக நீங்கள் நிச்சயம்
வருவீர்கள் என்ற “தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் இதைச் செய்கின்றேன்…”
அருள் செல்வம்
நீங்கள் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்… இந்த அருள் உணர்வு உலகம் முழுவதும் பரவட்டும்.