ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2026

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்


இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.
 
இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றதுஎன்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.
 
ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
ஆகையினால்
1.மற்றவர்கள்யார் தவறு செய்கின்றார்கள்?
2.எப்படிச் செய்கின்றார்கள்? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.