ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2026

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி


ஒருவர் மிகவும் கடினமாக வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்க்க நேருகின்றது. அப்போது நன்மை செய்யும் பருவத்தில் அவருக்கு உபகாரம் செய்கின்றோம்.
1.இப்படிப் பதிவான உணர்வுகள் சித்திர புத்திரன். அதாவது…
2.அவருடைய எண்ணம் நமக்குள் பதிவாகின்றது நம்முடைய எண்ணம் அவர்கள் உடலில் விளைகின்றது.
 
சந்தர்ப்பத்தால் அந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் அவர் உடலில் விளைந்த உணர்வுடன் நம் உடலுக்குள் அது வந்து விடுகின்றது.
 
உடலுக்குள் வந்தபின் அவர் உடலில் விளைந்தது நமக்குள் ஊன்றிப் பதிவாகி விடுகின்றது. ஒன்றிய குணங்கள் இருப்பதனால் நம்மை அறியாமலே இப்படி ஆகின்றது.
 
மனித வாழ்க்கையில் இதைப் போன்று இன்னொரு ஆன்மா மனிதனுக்குள் வந்து தான் அடுத்து அது மனிதனாகப் பிறக்க வேண்டும்.
 
பரிவால் பண்பால் இரக்கத்தால் ஈகையால் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்தாலும் அவர்களிடம் விளைந்த நஞ்சின் தன்மை
1.நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகள் பதிவான பின்… தன் இனத்தால்
2.நம் உடலில் இருப்பது அந்த நினைவாற்றல் வெளி வரும் பொழுது
3.இந்த உணர்வின் துணை கொண்டு நம் உடலுக்குள் வந்தே தீருகின்றது.
 
எவ்வளவு பழகினாலும் சரி இந்த உணர்வின் துணை கொண்டு இங்கே வந்து விடுகிறது. வந்து விட்டால் கோடாங்கியோ ஜோதிடமோ மற்ற மந்திரங்களாலோ அதை வெளியேற்ற முடியாது.
 
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணத்தை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்தி
1.அதனின்று வெளிப்படும் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
3.எனக்குள் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
ஜீவான்மா என்பது இன்னொரு உயிரில் விளைய வைத்த அது நமக்குள் சுவாசம் செய்யும் நிலை. ஜீவ அணு என்பது எந்தக் குத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் ஜீவித்து அந்த அணுவின் லமாக நம் சரீரம் ஆகிறது.
 
எந்த உடலில் இருந்து ஜீவான்மா வந்ததோ அந்த நோயின் தன்மை கொண்டு நமக்குள் பரப்பி அந்த உணர்வின் நினைவாற்றல் ஆக நம் ஜீவணுக்களையும் அதுவாக மாற்றிவிடும்.
 
அதைப் பெருக்க விடாது தடுக்க வேண்டும்.
1.நம் உடலில் எத்தகைய ஆன்மாக்கள் புகுந்திருந்தாலும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் வேண்டும்
2.எனக்குள் இருக்கும் ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று “அடிக்கடி…” எண்ணுதல் வேண்டும்.
 
ஜீவான்மா என்கிற பொழுது உயிருடன் ஒன்றிய அந்த நிலைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் நிலை. மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
 
எனக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த ஆன்மாக்களுக்கு அந்தச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்…”
 
ஒருவர் சாபமிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்… அது ஜீ அணுவாக மாறுகின்றது.
1.எந்த மனித உடலில் இருந்து அந்தச் சாப அலைகள் தொடர்ந்ததோ அதை அந்த அணு உணவாக எடுக்கும்.
2.அந்த உடல் இல்லை என்றாலும் அலைகள் இங்கே இருக்கும்… அதை எடுக்கும்.
 
ஒரு மரம் பட்டுப் போய்விட்டாலும் அதில் விளைந்த சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருப்பது போல மனிதன் வெளிவிட்ட அந்த சாப அலைகள் இந்தக் காற்றில் பரவியே இருக்கும்.
 
அதில் விளைந்த வித்து மீண்டும் அந்தச் சத்தை எடுத்து அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
நம் மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காது சாபம் இட்டிருப்பார்கள். அதை நாம் கேட்டறிந்தால் வம்சத்தில் அது வரும். பின் தொடர்ந்து இங்கே வம்ச வழியில் வந்து கொண்டே இருக்கும். அது வளர வளர அதனுடைய தீமைகளைச் செய்து கொண்டிருக்கும்.
 
மரம் அழிந்தாலும் அதிலே விளைந்த வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து வளர்வது போல மனித உடலில் விளைந்த சாப அலைகள் வித்துக்களாகப் பெருகிக் குடும்பத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
அதையெல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.