ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2026

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி

“முருகு…” மாற்றி அமைக்கும் சக்தி


மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது.  நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.
 
இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான்.
 
பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.
 
வராகனுக்குப்பின் (பன்றி) பரசுராமன் மனிதன் என்ற நிலைகள் ஆன பிறகு
1.எல்லோரும் பேரன்போடு வாழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
2.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை. 
3.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்கின்றோம். 
 
ஒரு குழம்பு வைக்க வேண்டுமென்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.
 
இதைப் போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும் அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்தச் சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இதை உபதேசிப்பது.
1.இதன் மூலம் உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையையும் உங்களால் அறிய முடிகின்றது.
 
கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல.
 
நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல நம்முடைய எண்ணம் தான் நம்மை இயக்குகின்றது.
 
வேதனைப்படுவோரையோ கோபப்படுவோரையோ எண்ணினால் அது வாலி. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை அதன் வழிகளில் இயக்குகின்றது.
 
இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 
இது வலுவானபின்
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும் தெய்வீக அருளைப் பெற வேண்டும்
4.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்
5.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
       
கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் நரசிம்ம அவதாரம்… நாராயணன் வாசற்படியில் அமர்ந்து மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.
 
சூரியனான நாராயணன் 27  நட்சத்திரங்கள் வெளிப்படுத்துவதை… பால்வெளி மண்டலங்களிலிருந்து தான் கவர்வதைத் தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம். 
 
ஆனால் மனிதனோ வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது வேதனைப்பட வைக்கின்றது. நமது அந்தச் சந்தர்ப்பம் உடல்களில் உள்ள உணர்வுகளைப் பலவீனமடையச் செய்கின்றது.
 
ஆனால்…
1,பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.
 
பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும்.  நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக கண் வழி கவர்ந்து இதை இணைக்க வேண்டும். 
 
1.இது வலிமையானபின் உணர்வின் பிராணயாமம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம்.
3.இது தான் முருகு…!” மாற்றி அமைக்கும் சக்தி.
 
தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.
 
அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும் போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மை விட்டு அகலும். 
 
துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித்
2.தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.
 
அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.
 
சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்அது சீதாராம். ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்கிரீவனின் மந்திரி. 
 
சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று எல்லோரும் பெற வேண்டும் என்று சொல்லும் போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்)  வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.