
நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி
பெண்கள் நகையைப்
போட்டுக் கொண்டு செல்கின்றார்கள். திருடன் உற்றுப்
பார்க்கப்படும் பொழுது அபகரிக்கும் நோக்கத்தில் அங்கே வரும்
சந்தர்ப்பமாக உருவாகிறது.
இது நடந்த
நிகழ்ச்சி…! என் காலோ ஆணிக்கால். ஆனால்
திருச்சியில் கால்நடையாக நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.
ரோட்டிலே ஒருவன்
ஒரு பெண்ணை “அடி…அடி…” என்று அடித்துக்
கொண்டிருக்கின்றான்… போக்கிரி அவன்…!
என்ன…? ஏன் இந்தப் பெண்ணை அடிக்கிறாய்…? என்று கேட்டேன்.
அந்தப் பெண் சப்தம் போடுகிறது.
1.நான்
பித்தளை நகையைப் போட்டிருக்கின்றேன்.
2.ஏன்
தங்க நகையை போட்டுக் கொண்டு வரவில்லை…? என்று இவன்
அடிக்கின்றான் என்று சொல்கிறது.
தங்க நகையைப் போடாது நீ எப்படி
ரோட்டில் வரலாம் என்று சொல்லி அவன்
உதைக்கின்றான்.
நான் என்ன
நினைத்தேன்…? என்றால் வீட்டிலே நகைகளப் போட்டு இருக்கின்றார்கள். செலவுக்காக அடகு வைத்து விட்டது… அதனால் உதைக்கின்றான் என்று.
அப்போது
திருடன் சொல்கின்றான் நாங்கள் திருட வந்தால் பித்தளை நகையைப்
போட்டு ஏமாற்றுகிறாயா…? என்று சொல்லி உதைக்கின்றான்.
நான் போய்
அவன் கையைப் பிடித்தேன். ஆளைப் பார்…! உன்னைக் கத்தியால் குத்தி விடுவேன்…! என்றான். ஆமாம் குத்தி விடுவாய்
என்றேன் நான்.
பின்… இழுத்து சொத்… என்று கீழே விழுந்தான். கத்தியை எடுக்க முயற்சி செய்தான். கையும் வரவில்லை… காலும் வரவில்லை… கீழே
விழுந்து கிடக்கின்றான்.
அங்கிருப்பவர்கள்
எல்லாம் அவன் பெரிய ரவுடி. ரோட்டில் போய்க் கொண்டிருக்கும்
நீ அவனை என்ன செய்ய முடியும்…? அவன் உன்னைத்
தீர்த்து விடுவான் என்று சொல்கின்றார்கள்.
1.அவன்
தீர்க்கட்டும்…! அவன் எண்ணம் தீர்ந்து போகும் என்று சொன்னேன்.
2.தவறான
எண்ணம் கொண்டால் அவனுக்கு இது தான் கதி.
3.அவன் என்றைக்குத்
திருந்துகின்றானோ அன்று அவன் கை வரும் என்று சொன்னேன்.
அந்தப் பெண்
சொல்கிறது. ஐயா நீங்கள் இன்று இவனை அடித்து விட்டீர்கள்…! நாளைக்கு என் வீட்டிற்கே வந்து அவன் உதைப்பான் போல்
தெரிகிறது. எழுந்து வந்து அடிப்பான்.
ஐயா அந்தக்
கூட்டமே பெரிய கூட்டம் பல தடவை இப்படி வந்து திருடுகின்றார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் உதைக்கின்றார்கள் என்று
அந்தப் பெண் சொன்னது.
அவன் உன்னை
அடிக்க மாட்டான்… கையும் வராது காலும் வராது கெட்டது இத்துடன்
போய் விட்டது. நல்லதை நினைத்தால் தான் எழுந்து வருவான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்… உன்னை உதைக்க மாட்டான் என்று சொன்னேன்.
காவல்
நிலையத்திற்கு அழைத்துச் சென்று “இந்த மாதிரி இருக்கின்றதே… நீங்கள் என்ன செய்கிறீர்கள்…? என்று கேட்டேன். நாங்கள் என்ன செய்வது…? புகார் அளித்தால் தானே
நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.
ஆக மொத்தம்
1.நகையைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே சென்றால் திருடனுக்கு வழி
காட்டியது போல் ஆகிவிடுகிறது
2.உலக
நடப்பு இவ்வாறு இருக்கின்றது.
நடந்த
நிகழ்ச்சி இது.