
பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.
நாம் மெய்யுணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளில்…
1.எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ
2.அதையெல்லாம் “உங்களுக்கு
நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படி…?
‘’இப்படி என்னைத் திட்டிவிட்டானே… இரு
நான் பார்க்கின்றேன்…!’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அல்லது நம் பையனே “இப்படிப் பேசிவிட்டானே…” என்ற உணர்வுகள் ஆத்திர உணர்வுடன்
தீர்க்கப்படும்போது அது நமக்குக் ‘’கெட்ட நாள்…”
நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.
நம்மை யாராவது திட்டினால் இந்த உணர்வின் தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்
1.‘’ஓம் ஈஸ்வரா…’’
என்று உயிரை எண்ணுங்கள்.
2.“மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்…’’ என்று ஏங்குங்கள்
3.”எங்கள் ஜீவாத்மா அந்த சக்தி பெற வேண்டும்…’’ என்று உங்கள் உடலுக்குள்
செலுத்துங்கள்.
அப்பொழுதே இது அடங்கும்.
அதாவது ஒருவர் உணர்ச்சிவசப்படும்படியாக நம்மைத் தூண்டும் நேரத்திலும் நாம் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில்
எடுத்துக் கொண்டால்
1.அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்காதபடி
2.அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்… “அப்போது உயர்ந்த சக்தியையும்
நமக்குள் பெறுகின்றோம்…”
அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோ… “மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வது நல்லதாக
வேண்டும்…” என்று ஆணையிடுங்கள். உங்களுக்குள் இந்த
உணர்வுகளைத் தடுக்கச் செய்யுங்கள்.
இப்படி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்
ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மனித வாழ்க்கை அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. மனிதருடன் வாழப்படும் பொழுது
குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் குறைகள் கண்டு கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’
செய்து மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் “அந்த புனிதப் பயணமாக இருக்க வேண்டும்…”
உங்களிடம் யாம் கேட்பது
என்ன…?
நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… நீங்கள் மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு… யாராவது துன்புற்று வந்தாலும்… “அவர்களுக்கு நன்றாகிப் போகும்” என்று
நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும். அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை
உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டுமென்று
எண்ணுகின்றேனோ
அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’
செய்து கொண்டு இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
1.நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும்.
2.துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு நம் உடலுக்குள் அந்தத் துன்பங்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்துவிடக்
கூடாது.
ஏனென்றால் நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள் எல்லாம் விஷம். அது ஊடுருவி நம்மைக்
கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை
மாற்றுவதற்கு நமக்குள் மெய் ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்.
1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு… அந்த
நிலையினை நாம் பெற வேண்டும்.
2.ஆனால் இதற்குக்
குருவின் துணை வேண்டும்.
குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அதைப் பின்பற்றி நடப்போர் அந்தச் சக்தியைப் பெற முடியும்.
ஆகவே…
உங்களை அறியாமலே உங்களைத் துன்பப்படுத்திக்
கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதமாக ”மிஷின் கண்”
(MACHINE GUN) போன்று ‘’ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து இந்த வாழ்க்கையில்
புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி உங்களுக்கு
வெற்றியைத் தரும்.
உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்,. எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி
எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.
எமது அருளாசிகள்.