ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2025

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்


முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.
 
எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ - பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் பஞ்ச அமிர்தம் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
 
து தான் காயத்ரி…!
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.
 
அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!
 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.
 
அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.
 
ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.
 
மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.
 
கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.
 
அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் லமாகி நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”
 
ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.
 
காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.
 
விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயக்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.
 
மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.
 
புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.

வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!

வராமல் வந்துற்ற மாமணியை… (உயிராத்மாவை) அறிந்து கொண்ட பின் அதைச் சாராமல் போவாயா…!


குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.
 
ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.
 
 யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டிஅருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்நல் நிலையில் செயல்படுவோம்உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.
 
சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.
 
1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.
 
மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும்… “பஞ்சு திரி ஆவதைப் போல்…!”
 
காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.
 
வராமல் வந்துற்ற மாமணியைஉயிராத்ம சக்தியைமெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்அதைச் சாராமல் நீ போவாயோ…?”
 
இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்கசமமான நிலை நிலைக்கயாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!
 
ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமைஇன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே திரியான பஞ்சு.
2.எண்ணத்தை மறைந்திருக்கும் மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.
 
சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும் அவ்வாதவனின் நிலையை
2.மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.
 
மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!
 
ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதேஉணர்ந்து கொள்வீர்கள்…”

January 21, 2025

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்


நாம் யாரும் தவறு செய்யவில்லை…! அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டு தான் வாழ்கின்றோம். பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து விடுகின்றோம்
1.நம் உயிரிலே தான் படுகின்றது
2.அதன் உணர்வுகள் நமக்குள் கருவாகின்றது இந்திரலோகமாக மாறுகின்றது
3.கருவாகிப் பின் உருவாகி விடுகின்றது.
 
பிறிதொரு மனித உடலில் விளைந்த தீமையின் உணர்வுகள் அந்த விஷத்தன்மை நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் ஊடுருவி அதை கருவாக்கி அணுக்கள் மாற்றமாகும் தன்மைக்கே வருகின்றது.
 
இதை நல்ல முறையில் மாற்றிக் கொள்வதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
 
இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் துருவன்… அவன் துருவ மகரிஷியாக ஆனான் துருவ நட்சத்திரமாக ஆனான். திலிருந்து வெளிப்படும் சக்திகள் இன்றும் என்றும் வந்து கொண்டே உள்ளது.
 
உயிர் தோன்றி மனித உணர்வின் தன்மை பெருக்கிய பின் இன்றும் அகஸ்தியன் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
1.அதைக் கவர்ந்து தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இந்த இருளை அகற்றி
2.உடலுக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.
 
இன்று விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து பல ஆயிரம் ஆண்டு காலம் வாழலாம் என்று சொல்கின்றான்.
1.ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியோ என்றும் ஏகாந்தமாக பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை
2.இந்தச் சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.அகண்ட அண்டத்திலிருந்து வரும் தூசுகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம் மனிதனான நாம்.
 
எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கியவன் அகஸ்தியன். அவன் எந்தத் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு பொருளின் தன்மையையும் மாற்றி செயல்படுகின்றான்.
 
எப்படி…?
 
இன்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது உணர்வின் அதிர்வுகளை வைத்து எதன் அதிர்வோ அதை மாற்றி அமைக்கும் பல நிலைகள் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.
 
ஒரு பாஷையில் எழுதினால்
1.அதில் எலக்ட்ரான் என்ற மோதலுக்கொப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள நூறு பாஷைகளை மொழிபெயர்ப்பு செய்கின்றான்
3.உருவத்தின் அமைப்பையும் கொடுக்கின்றான் அதிர்வின் நிலைகள் கொண்டு.
 
இதெல்லாம் நாம் இன்று பார்க்கின்றோம் அல்லவா…!
 
எதன் உணர்வின் விஷத்தன்மை கலக்கின்றானோ இந்த உணர்வுக்கொப்ப இணைத்தால் து இன்ன ரூபமாகும்…” என்று ஒரு நொடியில் செய்து விடுகின்றான்.
 
நாம் படித்து அர்த்தம் கண்டு பல நிலைகள் எழுத்து வடிவிற்குக் கொண்டு வருவதற்கு முன் ஒரு நொடிக்குள் நூறு உணர்வை மாற்றிக்கொண்டு வருகின்றான் விஞ்ஞானி…”
 
அதைப் போன்று
1.ஒரு நொடிக்குள் ருள் உணர்வின் தன்மை பெற்று
2.தனக்குள் வருவதை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள்.
 
மனிதனானவன் தன் இனத்தின் தன்மை கொண்டு வாழப் படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று அங்கே செல்ல முடியு,
 
நம் தாய் தந்தை முன்னோர்கள் குல வழியில் வந்தவர்கள் அவர்கள் இதற்கு முன் விண் செல்லத் தவறினார்கள்.
1.இப்போது நாம் அதைப் பெற்ற பின் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்
2.அவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளிவந்த பின்
3.நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வு கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் பெருக்கிப் பெருக்கி உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களை எளிதில் வின் செலுத்த முடியும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழச் செய்ய முடியும் பிறவி இல்லாத நிலை அடையச் செய்ய முடியும்.

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா


1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.னிவுறும் ஞான தேசிகனாகின்றான்.
 
உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம் சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள் எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் கால் என்பது ஒவ்வாத செயல்…!
 
ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமா ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே
நற்குண
நன்னெறி கொள்ளும்
மனத்தின் திட சங்கல்ப
உறுதி நிலை…”
 
மோகம் கோபம் அதி ஆசை என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.
 
குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே - வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.
 
நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இரு நிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.
 
ஞானம் என்பது எது…?
 
பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்
2.இதற்கும் மேலாக சமமான நிலை…”
 
உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.
 
1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!

January 20, 2025

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்


எப்பொழுது துன்பம் என்று காணுகின்றோமோ ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் உடலுக்குள் சேர்த்து இருளை நீக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் அது வலுவாகி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அடைகின்றோம்.
1.இதைத்தான் குருநாதர் எமக்குக் காட்டினார்... அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.
2.உங்களால் உங்களால் முடியும். எப்படிச் சாத்தியமாக முடியும்…? என்று எண்ணாதீர்கள்.
3.அருளைப் பெறுங்கள்இருளை அகற்றுங்கள் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் பெற முடியும்.
 
தீமை என்று உணர்வைக் கேட்டறிந்தாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை உடனுக்குடன் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
 
யார் வெறுப்படைந்தனரோ அவருக்கும்அதாவது அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் பரிசுத்தமாக்கும் உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் போதுமானது. அவர் வேண்டாதவர்என்ற எண்ணங்கள் வராது அடுத்து.
 
காரணம் அந்த உயிர் அவரை ஆளுகின்றது. ஈசன் ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் நமது ஆலயம்நம் உடலும் தூய்மையாகின்றது.
 
இப்படி நாம் எண்ணும் உணர்வு எதுவோ அதுவே அரங்கநாதன் இந்த உணர்வின் சக்தியாக நம்மை அருள் வழியில் இயக்கும்.
1.அதையே நமது உயிர் ஆளும் ஆண்டவனாக.
2.ஆகவேஅனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் தான்.
3.அவன் ஆண்டு கொண்டிருக்கும் உடல்தான் ஆலயம்.
 
இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் இது.
 
பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்துச் சுவை மிக்க உணர்வுகளைப் படைத்துச் சாப்பிடும் மனித உடலைப் பெற்றுள்ளோம்.
 
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறத் தொடர்ந்து உங்களுக்கு உபதேசம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இவை எல்லாம் அருள் ஞானிகள் கண்ட பேருண்மைகள்.
 
1.ஞான வித்தை ஊன்றியுள்ளோம்தியானத்தின் மூலம் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களுக்குள் உரமாக்கிக் கொள்ளுங்கள்.
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் அந்த சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
4.மெய் வழியில் செல்லும் அருள் பாதையை அது வகுத்துக் கொடுக்கும்.
 
மெய் வழி வாழ்வோம்அருள் வழி வாழ்வோம்…!

ஞான முறுவல்

ஞான முறுவல்


மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?
 
கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.
 
1.செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட
2.சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை
3.அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.
 
மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும் அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?
 
மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்இவை அனைத்துமே பாட நிலை தான்.
 
ஆத்ம பலம் பெற்று உயிர் ஆத்மக் கலப்பாக ஆதிசக்தி எனும் ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய் சிறப்புற விளங்குதலே சித்தன் சூட்டிய சொல் அகம் காட்டிடும் அழகு என்றும் அகலா ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”
 
ஞான முறுவல் காட்டிடும் முகம் அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.
 
1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.

January 19, 2025

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி


உதாரணமாக ஒருவர் திட்டினால் காதிலே கேட்கின்றோம் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது உணர்ச்சிகள் ரத்தத்திலே கலக்கிறது. அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது ரத்தக் கொதிப்பு வருகிறது
 
அதே போல உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம்… அதை நுகர்ந்தறிந்து உதவி செய்கின்றோம். அவருடைய வேதனையை அறிந்த பின் அந்த உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது. கருவாகி உருவாகிக் கடும் நோயாக நமக்குள் மாறுகின்றது. மனிதனுடைய சகஜ வாழ்க்கையாக இது மாறுகின்றது.
 
ஆனால் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க
1.கூட்டு தியானங்கள் இருந்து துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று
2.ஆயிரக்கணக்கானவர்களின் சக்தி வாய்ந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
3.ஒவ்வொருவருடைய செவிகளிலும் இது பட்டு கண்ணின் கருவிழியால் பதிவாக்கி
4.இந்த உணர்வின் ஈர்ப்பு காந்தமான கண்ணின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு உங்கள் உயிரிலே மோதப்படும் பொழுது அரங்கநாதன்…!
5.அத்தனை பேரின் உணர்ச்சிகளும் உங்கள் உடலிலே தீமைகளை நீக்கிடும் உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
6.இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலிலே அரங்கநாதனாக இருந்து கடும் நோய்களையும் நீக்கும் சக்தி பெறுகின்றது…”
 
அருள் உணர்வுகள் உங்கள் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாக தீமைகளை நீக்கிடும் வலுக்கொண்ட உணர்வின் அணுவாக உருவாக்க இது உதவுகின்றது.
 
ஆகவே கூட்டுத் தியானத்தின் மூலம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கும் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகிறது.
 
சர்வ பிணிகளையும் நீக்கிடும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெறும் தன்மையும் இந்த வாழ்க்கையில் பெற்று நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தீமைகள் புகா சக்தியும் நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
 
அத்தனை பேரும் சேர்த்த உணர்வுகள் ஒவ்வொரு செவிகளிலும் பட்டு இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நாம் எல்லோரும் நலமும் வளமும் பெறுகின்றோம்.
 
1.கூட்டமைப்பாக உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது எல்லோருக்குள்ளும் இது ஊடுருவி ரத்த நாளங்களில் குவிக்கின்றது.
2.சர்வ நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
 
ஆனால் நோயுடன் இருப்பவரை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் நமக்கும் நோய் வருகிறது. அதற்குப் பதிலாக அருளைப் பெருக்கி இருளைப் போக்க வேண்டும் என்ற உணர்வுகளை இதைப் போல கூட்டமைப்பாக நுகரப்படும் பொழுது
1.தீமையை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெறுகின்றோம்
2.மன வலிமை பெறுகின்றோம் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்குகின்றோம்.
 
இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லப்படும் பொழுது நமது வாழ்க்கை சீராகச் செல்ல ஏதுவாகின்றது. இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைகின்றோம்.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?


வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால் ஞானத்தின் சுடர்தல் தெளியும்.
 
வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் மனத்தின் திறன் என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”
 
பால்வெளியின் உர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் ருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதா உரைப்பதும் உண்டு.
 
பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?
 
உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.
 
ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட அதே விவேகம் தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.
 
மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை எளிமையாக உரைக்கின்றோம்…
 
வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.
 
மணல் குன்று என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுளைக் காட்டினோமப்பா.
 
அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும் சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”
 
சித்தன் நிலையைப் பெறச் செய்யும் சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில் பிடர்தல் எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.