அருள் ஞான வித்து என்ற “மதுரம்”
நாம் ஒரு செடியை வைத்து விட்டால் அது
செழித்து வளர்ந்து அதிலே மலர்கள் உருவாகின்றது.
1.மலருக்குப் பின்
அதிலே மதுவான இனிமை கொண்ட தேன் இணைந்து
2.அதற்குள் மதுரத்தைத்
தனக்குள் நுகர்ந்து… அதனின் நிலை
கொண்டு கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு அது தன்
வித்துக்களை உருவாக்குகின்றது.
இதைப் போல
1.நாம் எடுத்து வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளின் தன்மை மலர்ந்து
2.அதனின் மணத்தைத் தனக்குள் நுகர்ந்தறியும் உணர்வின் தன்மை “மதுரம்”
3.மகிழ்ச்சியான அலைகளாக… நம் ஆன்மாவாக அது மாறுகின்றது.
4.அப்படி மாறும்
உணர்வுகளை நாம் சுவாசித்து “அந்த அருள் ஞான ஒளியின் வித்தாக”
5.முழுமை பெறும் தன்மையை நாம் அவசியம் அடைதல்
வேண்டும்… அடைய முடியும்.
ஆகவே ஏனோ தானோ என்று “எமது
உபதேசங்களை” அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் குருவின் அருளை “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை”
நீங்கள் பெற வேண்டும். அவரின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் உங்களுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான் உங்களை எண்ணி
நான் பிரார்த்திக்கிறேன்.
என் குருவை உங்களிடம் நான் பார்க்க விரும்புகின்றேன்.
ஆகவே உங்களை அறியாது
வந்த இருளை நீங்கள் போக்கிடல் வேண்டும் அதிலே மகிழ்ந்து பேரானந்த நிலை பெற
வேண்டும்.
1.உங்களில் வரும் அந்த உணர்ச்சிகள் எனக்குள் மதுரமாகி அதை நுகரும் பொழுது
2.உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும்
நிலைத்திருக்கும் நிலையாக நான் பெறுகின்றேன்.
சூரியன் இந்தப்
பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் வரும் நஞ்சினைப்
பிரித்து உணர்வின் ஒளியாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போன்று தான்
நமது குருநாதர் ஆற்றலைப் பெருக்கினார்.
1.அவர் வழிகளிலே நானும் பெற முடிகின்றது,
2.அதன் வழிகளில் நீங்கள் அனைவரும் பெற
முடியும்… இதில் கடினம் எதுவும் இல்லை.
3.உங்களைப் பார்க்கும்
அனைவரும் இந்த நிலை பெறுதல் வேண்டும்… அந்த நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
துயர்படுவோரைக் கண்டாலோ அல்லது அதைக் கேட்டறிந்தாலோ அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர் உடலில் பட்ட
இருள் உங்களை மறைத்திடாது துடைத்துப் பழகுங்கள்.
பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள் உங்கள் பிணிகள் அகலும் மகரிஷியின் அருள்
வட்டத்தில் இணைந்து வாழ்வீர்கள் உங்கள் நோய்கள் நீங்கும் உங்கள்
குடும்பம் நலமாக இருக்கும் உங்கள் தொழில்கள் வளமாக இருக்கும் உங்கள் குடும்பத்தில்
ஒற்றுமை வளரும் என்று
1.இது போன்ற அருள் ஞான
வித்தாக வாக்காக அவருக்குள் பதிவு செய்யுங்கள்.
2.இதைப் போன்று வழி தொடர்ந்து வழி தொடர்ந்து
நீங்கள் செய்து வாருங்கள்
3.தீமைகள் அகன்று தீமை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து அலைகளாகப் படரும்.
4.அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி
கவர்ந்து பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படரச் செய்யும்.
அப்பொழுது அந்த தீமைகளை அகற்றும் அலையின் தொடர்கள் நாம்
எண்ணியவுடன் உடனடியாகக் கிடைக்கப் பெற்றுத் “தீமைகளை அகற்றும் அந்தக் கடவுளாக… அந்த மகரிஷியின் உணர்வுகள்”
நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக வரும்.
ஆனால் இன்றைய மக்கள் பரமாத்மாவிலே எதைப் பரவச் செய்து
கொண்டிருக்கின்றார்கள்…? பயத்தையும் வேதனையையும் தான்…!
பஸ்ஸிலே சென்றால் பயம் வீட்டில் இருந்தால்
பயம் காசைக் கொண்டு சென்றால் பயம் எதையாவது சத்தமாகப் பேசினால் பயம் என்று அஞ்சியே
வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் இந்த காற்றிலே அலைகளாகப் படர்ந்து கொண்டுள்ளது.
அந்த உணர்வுகள் மகரிஷிகள் உணர்வலைகளைப்
பெறாது தடைப்படுத்துகின்ற நிலையாகவே வளர்ந்து கொண்டுள்ளது.
சூரியனின் காந்த சக்தி அதையெல்லாம் கவர்ந்து
பரவச் செய்யும் பொழுது நமக்குள் அச்சுறுத்தும் நிலையே
வருகின்றது. அத்தகைய கடவுளாகத்தான் இன்று மாற்றி
வைத்திருக்கின்றோம்… பரமாத்மாவாக அதைத் தான் மாற்றுகின்றோம்.
அதிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் நமக்குள்
சென்ற பின் நம்முள் நின்று அதுவே இயக்கச் செய்கின்றது
இதைப் போன்ற நிலைகளை அகற்ற
1.உலகம் உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷியின்
அருள் சக்திகளை நாம் நுகர்ந்து
2.இனி வரக்கூடிய காலங்களில் பூரண பௌர்ணமி
போன்று உலக மக்கள் அனைவரும் ஒளியின் சுடராக மாறி
3.தெளிந்த நிலைகள் கொண்டு எல்லோரும் மனிதன்
என்ற முழுமை அடைந்து
4.இந்த உடலை விட்டு அகன்றால் நிலை கொண்ட
ஒளியான சரீரம் பெற
வேண்டும் என்று
5.ஏகோபித்த நிலையில் எண்ணி நாம் வாழ்வோம்… வளர்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).