ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2024

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”


1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.
 
ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?
 
மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின்  பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.
 
இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்‌.
 
அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.
 
அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.
 
அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும் அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அவர்கள் நோய் நீங்க வேண்டும் அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று இதைத்தான் நாம் சொல்ல வேண்டும்.
 
இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
 
நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால் அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.
 
மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல் கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.
 
அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!
 
நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல் அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.
 
ப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.
 
ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!
 
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.
 
பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.
 
இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.
 
அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.
 
எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?
 
இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் "ஒளியின் உடலாக" இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.
 
இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?
 
இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.
 
அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.
 
இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.