அகஸ்தியன் காட்டிய வழிப்படி “வேதம்”
வேப்பமரம் என்றால் ரிக்… வேப்ப
மரத்திலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை…
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஓய்… என்ற இசை
வருகின்றது
2.வாந்தியாக
வருகின்றது.
ஒரு ரோஜா பூ ரிக் அதிலிருந்து
வெளிப்படும் மணம் சாம
1.அந்த மணத்தை நுகர்ந்தால் ஆகா…கா என்று
2.ஆனந்த
உணர்ச்சிகளை எழுப்புகின்றது நாதங்களை.
ஒரு விஷச்செடி
ரிக் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாம இசை.
1.அந்த மணத்தை நாம்
நுகர்ந்தால் உச்…
உச்… என்று
2.அரிப்புத் தாளாது அந்த ஓசையை எழுப்புகின்றோம்.
இதைத் தான் ரிக் சாம என்று காட்டுகின்றார்கள்.
சந்தர்ப்பவசத்தால்
வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம்முடைய சாந்தமான
உணர்வுக்குள் புகுந்து விட்டால் அந்த அணுக்கள் அதர்வண… சாந்தத்தை அடக்கி விடுகின்றது… ரிக் சாம.
விஷத்தின் தன்மை சாந்தமான
அணுக்களுக்குள் சேர்ந்து விட்டால் அதை அடக்கி விஷத்தின் தன்மையாக மாற்றி அதை
ஓங்கச் செய்து அதர்வண… யஜூர்… விஷத்தன்மை கொண்ட அணுவின் உடலாக மாற்றும் திறன் பெறுகின்றது என்று காட்டுகின்றான் அகஸ்தியன்.
இப்படி… மனித
உடலில் உருவான வேதனை என்ற நாதத்தை உணர்கின்றான் அகஸ்தியன்.
1.அதை அடக்கும் தாவர இனத்தின் உணர்வை அவன் நுகர்ந்து அதைத்
தனக்குள் விளைய வைத்து
2.அந்த மனித
உடலில் விளைந்த வேதனையான நாதத்தை தணிக்கும்படி…
3.வேதனைப்பட்டவருக்கு அந்த
ஆற்றலை நுகரும்படி செய்கின்றான் அன்றைய அகஸ்தியன்.
விஷத் தன்மையான அணுக்கள்
இதைச் சுவாசித்த பின் ஒடுங்கி… இதனுடைய
வலிமை கூடி
1.அந்த உடலில் தீமையை நீக்கும் அணுக்களை உருவாக்குகின்றான்…
2.இயற்கையில் விளைந்ததை வைத்து அன்றைய மெய்ஞானியான அகஸ்தியன்.
விஞ்ஞானியோ மற்ற
பொருள்களைக் கலந்து இணைத்து புறப்பொருளின்
நிலையின் இயக்கத்தை அந்த அணுக்களாகத்தான் மாற்றுகின்றான்.
ஆனால் அகஸ்தியன் இயற்கையின்
உண்மையின் உணர்வு சாகாது… மற்ற மனித உடலுக்குள் அந்த இயக்க அணுவாக ஜீவ அணுக்களாக மாற்றுகின்றான்.
இப்படி…
1.மனித உடலில்
தீமைகளை நீக்கும் உணர்வுகளை வளர்த்து
2.எதுவும் வெல்ல
முடியாத நிலைகள் வேகா நிலை என்று முழுமை பெற்றவன் அகஸ்தியன்
துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்த மெய்ஞானி இந்த உண்மையைப்
பெற்றான் என்பதை நாம் அறிவதற்காகத் தான்
விநாயகத் தத்துவத்தைக் கொடுத்தார்கள்.