ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2024

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்


டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட வகையில் இன்ஜினியராகப் போக வேண்டும் என்றால் அதனைப் படித்தவுடன் இஞ்சினை எப்படி ஓட்டுவது…?” என்று நீங்கள் படித்துக் கொள்கின்றீர்கள்.
 
விஞ்ஞானி ஒவ்வொரு பொருளின் உணர்வையும்
1.அதனதன் இயக்கத்திற்கு எதை எதை இணைக்க வேண்டும்…? என்று அவர் கண்டுபிடித்துச் சொல்கின்றார்.
2.இன்ஜினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உருவாக்கி அதனதனைச் செய்கின்றான்.
3.மெக்கானிக்கலோ இதனை இந்த வலுவில் செய்தால் இதனுடைய எடை கூட இப்படி இருக்கும் என்று.
 
இப்படி அவரவர்கள் உணர்வுக்கொப்பதான் அதைச் செய்கின்றோம்.
 
அதைப் போல் தான் “மெய் ஞானிகள் அன்று சொன்னதை உங்களுக்குப் பாட நிலையாக இப்போது கொடுக்கின்றோம்.
 
பள்ளியில் சென்று நீங்கள் எதனெதன் வழிகளில் பாடங்களைப் பதிவு செய்கின்றீர்களோ அது நினைவு வரப்படும் பொழுது இப்படி வருகின்றது.
 
இதைப்போல விஞ்ஞான அறிவுப்படி தான் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது பதிவாகின்றது.
 
வக்கீல் என்று வைத்துக் கொண்டால் “பதிந்த பின்” சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். இதிலே சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டாலும் பிழைகள் எது…?” என்ற நிலைகளை அறிந்து நீக்கக் கற்றுக் கொள்ளுகிறோம்.
 
ஆனால் கற்றுக் கொண்டாலும்
1.தனது நிலைகளில் “தன் நண்பன் என்று வந்து விட்டால், அவன் தவறு செய்தால் கூட
2.சட்டத்தில் எங்கே குறை இருக்கின்றது…? என்று நண்பனைக் காக்கத் தவறும் செய்கின்றோம்…
3.(கோபித்துக் கொள்ளாதீர்கள் இப்படிச் சொல்கின்றேன் என்று!) சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளில் இப்படி…!
 
அதே மாதிரி ஆடிட் (AUDIT) அதன் வழியிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் தன் வாடிக்கையாளரை எப்படிக் காப்பாற்றுவது…? என்பது தான் அவர்களுடைய தத்துவம்.
 
ஆக தனக்குள் பற்றிக் கொண்ட… சர்க்கார் நிலைகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கு வருகின்றதே தவிர
1.பொது விதியான நிலைகள் நம் தவறும் இங்கே வரக்கூடாது.
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகளில்
3.அதிலே எது மையமாக இருக்கின்றதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை,
 
அப்படிப் போனால் அவர்களுக்குப் பிழைக்கத் தெரியாது என்று பட்டமே வந்துவிடும்.
 
இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகள். இவர் எதற்கும் லாயக்கே இல்லை இவர் எதற்கு இங்கே வந்தார்…? என்று சொல்வார்கள். நியாயத்திற்காகப் போராடினால் அவரைப் பைத்தியக்கார வக்கீல் என்று சொல்வார்கள்.  நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் இவர் பிழைக்கத் தெரியாதவர் என்று சொல்வார்கள்.
 
தவறு செய்தவரின் நிலைகள் “நான் தவறு செய்து விட்டேன் என்றால் அந்தத் தவறைச் சாதகமாக வைத்து சட்டத்தில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று அதைப் பிடித்துக் கெட்டிக்காரராகும் நிலை தான். அப்பொழுது எங்கள் வக்கீல் கெட்டிக்காரர் என்று சொல்வார்கள்.
 
குற்றவாளி ஆக்குவதில் முதன்மையாக வந்து விடுகின்றான்.
1.இவர் செய்யக்கூடிய தப்பை வக்கீல் ஏற்றுக் கொண்டு அவர் குற்றவாளியாக ஆக வேண்டும்.
2.இவர் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளில் வாதிடுகின்றார்.
 
ன்றைய கல்வியின் ஞானங்கள் வரப்படும் பொழுது இதுதான் வருகின்றது. இந்த விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள்.
 
ஆனால் மெய்ஞானியின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சமயமும் நமக்குச் சரியான பாதையை அது காட்டும். ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்,
 
1.இயற்கை உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை மெய் ஞானிகள் அறிந்து காலத்தால்
3.சந்தர்ப்பத்தால் இணைந்த ந்த நிலைகளை இதை எவ்வாறு முறியடிப்பது…? என்று செயலாக்கியவர்கள்.
4.மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை. (ஆனால் இண்றைய கல்வியறிவு மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்)
 
சந்தர்ப்பத்தால் தான் குற்றங்கள் ஏற்படுகின்றது. அதை மாற்றும் வழிக்குத் தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்ட வருகின்றேன் (ஞானகுரு).