ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2024

பிரளய மாற்றம்

பிரளய மாற்றம்


பூமி சுழலும் வேகத்தை ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் என்று நிலைப்படுத்தி உள்ளார்கள்.
 
இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.
 
இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும் இன்று இப்பூமி சுழலும் நிலை துரிதம் கொண்டுள்ளதுவினாடி விகிதத்தில். ஆனால் பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.
 
ஆனால்
1.இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் பிரளயம் தோன்றி இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில்
2.நம் பூமி சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில்
3.இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.
 
நம் பூமியில் இவ் அசைவின் பிரளயத்தின் போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும் அளவு நிலையும் அதிகப்படப் போகின்றன.
 
நம் சூரியனின் விகித நிலையும் கூடப் போகின்றது.
 
சூரியனும் 48 மண்டலக் கோளங்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள இவற்றிற்குச் சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்குத் தெரியாத நிலை கொண்டு பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம்மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப் போகின்றது.
 
இன்று நம் பூமியில் வட துருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.
 
ஆனால் மழைக்காலம் மற்றும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.
 
ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப்போகிறது.
 
சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.
 
நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம்மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம்மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள்
1.நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம்
2.ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.
3.பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது.
4.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பது அல்ல.
5.இவ்வண்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது.